Home
News

சந்திராயன்-4 எப்போது விண்ணில் பாயும்? ISRO தலைவர் கொடுத்த அப்டேட்.. சர்ப்ரைஸ் எதுவும் இருக்கா சார்?

இஸ்ரோ (ISRO) என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இப்போது பல மிகப்பெரிய திட்டங்களை உருவாக்கி வருகிறது. இதில் முக்கிய கவனம் சந்திராயன்-4 (Chandrayaan-4) திட்டதிற்கு வழங்கப்பட்டுள்ளது. காரணம் இந்த முறை 2 ராக்கெட்களை இஸ்ரோ இந்த திட்டத்தின் கீழ் அனுப்பவுள்ளது.

சந்திராயன்-4 (Chandrayaan-4) திட்டம் என்ன நிலையில் உள்ளது? சந்திராயன்-4 எப்போது விண்ணில் பாயும்? சந்திராயன்-4 எப்போது நிலவில் தரையிறங்கும்? என்று பல கேள்விகள் மீண்டும்-மீண்டும் கேட்கப்பட்டு வருகிறது. இஸ்ரோ தலைவர் செல்லும் இடமெல்லாம் இதே கேள்வி தான் மீண்டும்-மீண்டும் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் சிரித்த முகத்துடன் மௌனம் காத்த இஸ்ரோ தலைவர் சோமநாத். இப்போது பதிலளித்துள்ளார்.

சந்திராயன்-4 எப்போது விண்ணில் பாயும்? ISRO தலைவர் கொடுத்த அப்டேட்..

சந்திரயான்-4 திட்டம் என்ன நிலையில் உள்ளது?

சந்திராயன்-4 (Chandrayaan-4) திட்டம் குறித்த சுவாரசியமான அப்டேட்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Space Research Organisation) தலைவர் எஸ் சோமநாத் (ISRO chairman Somanath) தற்போது வெளியிட்டிருக்கிறார். சந்திரயான்-4 திட்டம் என்ன நிலையில் உள்ளதென்ற கேள்விக்கு, இஸ்ரோ தலைவர் சந்திரயான்-4 திட்டம் "வளரும் பணியில்" உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

சந்திரயான்-4 திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதனால் ஒவ்வொரு கட்ட பணிகளும் பார்த்துப்பார்த்து பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். நிலவு திட்டத்திற்கான பணிகளை இஸ்ரோவும் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளும் மிகவும் உறுதியாக செயல்படுத்தி வருவதாக சோமநாத் தெரிவித்திருக்கிறார். அடுத்தபடியாக, சந்திரயான்-4 திட்டம் எப்போது விண்ணில் பாயும் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின் படி, சந்திரயான்-4 திட்டம் 2040 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிலவில் தரையிறங்கும் இலக்கை கொண்டுள்ளதாக கூறியுள்ளார். சந்திரயான்-4 திட்டத்தை வெற்றிகரமான திட்டமாக அமைக்க இஸ்ரோ தொடர்ச்சியாக பல ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். சந்திரயான்-4 திட்டத்தில் வேறு எதுவும் சர்ப்ரைஸ் உள்ளதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு புன்னகையுடன், அது உங்களுக்கே தெரியும் என்ற தோரணையில் பதில் அளித்துள்ளார்.

சந்திராயன்-4 எப்போது விண்ணில் பாயும்? ISRO தலைவர் கொடுத்த அப்டேட்..

சந்திராயன்-4 மிஷனில் என்ன சர்ப்ரைஸ்? 1 இல்லை 2 ராக்கெட்டா?

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரே திட்டத்தில் 2 ராக்கெட்களை அனுப்ப இஸ்ரோ (ISRO) விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது. இந்த 2 ராக்கெட்கள், விரைவில் விண்ணில் பாயவுள்ள சந்திராயன்-4 (Chandrayaan-4) திட்டத்திற்காக நிலவு நோக்கி அனுப்பப்படவுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். ஆம், மக்களே இஸ்ரோ இந்த முறை 2 தனித்தனி ராக்கெட்களை (rocket) ஒரே திட்டத்திற்காக பயன்படுத்தவுள்ளது.

இந்தியாவின் நான்காவது நிலவு மிஷன் (India's 4th moon mission) மொத்தம் இரண்டு ராக்கெட்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த 4வது மூன் மிஷனில் 5 பெலோட்களை இஸ்ரோ பயன்படுத்தவுள்ளது. கடந்த சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோ 3 பெலோட்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக, சந்திரயான்-4 திட்டத்தில் இஸ்ரோ 5 பெலோட்களை பயன்படுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சந்திரயான்-4 திட்டம் மிகவும் பெரியது என்பதனால், இஸ்ரோ இந்த முறை 5 பெலோட்களை அனுப்பவுள்ளது. இறுதியாக சந்திரயான்-4 எப்போது நிலவில் தரையிறங்கும் என்ற கேள்விக்கு சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. சந்திரயான்-4 திட்டம் 2040 ஆம் ஆண்டில் விண்ணில் பாய முடிவு செய்யப்பட்டுள்ளதனால், அதே வருடத்தில் 40 நாள் பயணத்தை முடிக்கும் பொழுது சந்திராயன்-4 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ISRO Chairman Somanath Talks About Chandrayaan-4 Mission Launch Date and Much More Check Update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X