FAU-G., வீரர்களின் தியாகத்தை சொல்லும் விளையாட்டு: அக்‌ஷய் குமார் பெருமிதம்!

|

பப்ஜிக்கு பதிலாக இந்திய தயாரிக்கப்பட்ட FAU-G விளையாட்டு அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பப்ஜி தடைக்கு பிறகு அதற்கு இணைமாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட FAU-G தயாரித்து வெளியிடப்பட இருக்கிறது.

சீன பயன்பாடுகளுக்கு இந்தியாவில் தடை

சீன பயன்பாடுகளுக்கு இந்தியாவில் தடை

பிரபல கேமிங் பயன்பாடுகளில் ஒன்றான பப்ஜி மற்றும் பப்ஜி லைட் போன்ற பல சீன பயன்பாடுகளுக்கு இந்தியாவில் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பப்ஜிக்கு இணை மாற்றாக FAU-G விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. FAU-G விளையாட்டை பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் வழங்கியுள்ளார். இந்த விளையாட்டை பெங்களூருவைச் சேர்ந்த என்கோர் கேம்ஸ் தயாரித்துள்ளது.

FAU-G விளையாட்டு

FAU-G விளையாட்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என அவர் அறிவித்துள்ளார். இந்தியாவின் முன்னணி கேமிங் தொழில்முனைவோர்களில் ஒருவரான விஷால் கோண்டல் என்கோர் விளையாட்டு தளத்தில் பணியாற்றி வருகிறார். இந்த விளையாட்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல மாத கால உழைப்பின் பயன்

பல மாத கால உழைப்பின் பயன்

FAU-G விளையாட்டு பல மாத கால உழைப்பின் பயனாக விரைவில் வெளியிடப்படும் என கோண்டல் அறிவித்துள்ளார். இந்த விளையாட்டானது தீம் க்ரீன் பள்ளதாக்கை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் என ராய்ட்டர்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக் கால்பன் பள்ளத்தாக்கில் 20 இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே மோதல் நிலவியது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

மல்டிப்ளேயர் அம்சம்

மல்டிப்ளேயர் அம்சம்

FAU-G விளையாட்டு மல்டிப்ளேயர் அம்சம் கொண்டிருக்கும் எனவும் இளைஞர்களுக்கு இந்திய வீரர்களின் தியாகங்கள் குறித்து சொல்லும் வகையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த விளையாட்டில் கிடைக்கும் வருவாயில் 20 சதவீதத்தை பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்.,7 முதல் ரயில் சேவை: முன்பதிவு தொடக்கம்- பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!செப்.,7 முதல் ரயில் சேவை: முன்பதிவு தொடக்கம்- பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

நடிகர் அக்‌ஷய் குமார்

அதேபோல் இதுகுறித்து நடிகர் அக்‌ஷய் குமார் கூறுகையில், பிரதமர் மோடியின் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் மல்டிப்ளேயர் விளையாட்டை வெளியிடுவதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

118 சீன செயலிகளுக்கு தடை

118 சீன செயலிகளுக்கு தடை

சீனாவுடனான எல்லை பதற்றங்களுக்கு மத்தியில் பப்ஜி உட்பட புதிதாக 118 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிக்கை குறித்து பார்க்கையில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
FAU-G Multi Player Action Game Going to be Launch in India: Proud to be Present Says Akshaykumar

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X