செப்.,7 முதல் ரயில் சேவை: முன்பதிவு தொடக்கம்- பயணிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

|

செப்டம்பர் 7 முதல் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் பயணத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் பயணிகளுக்கு வழிமுறைகள் மேலோட்டமாக காணலாம்.

சிறப்பு ரயில் சேவை

சிறப்பு ரயில் சேவை

செப்டம்பர் 7 முதல் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் பயணத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் பயணிகளுக்கு வழிமுறைகள் மேலோட்டமாக காணலாம்.

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து

மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து வரும் 7 ஆம் தேதி வரை இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

மாவட்டங்களுக்கு இடையேயான சிறப்பு ரயில்கள்

மாவட்டங்களுக்கு இடையேயான சிறப்பு ரயில்கள்

இந்த அறிவிப்பையடுத்து தமிழகத்தில் 7 ஆம் தேதிமுதல் மாவட்டங்களுக்கு இடையேயான சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்திருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு நேற்றைய முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி வரையிலும் அதேபோல் கோவையில் இருந்து மயிலாடுதுறை வரையிலும் 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி முதல் எழும்பூர் வரை

கன்னியாகுமரி முதல் எழும்பூர் வரை

அதேபோல் நேற்றைய தினம் கூடுதலாக நான்கு சிறப்பு ரயில்களை அறிவித்தது. அதுதொடர்பான செய்தி குறிப்பில் சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை மற்றும் செங்கோட்டையில் இருந்து எழும்பூர் வரைக்கும், எழும்பூர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் மற்றும் கன்னியாகுமரி முதல் எழும்பூர் வரைக்கும், சென்னை எம்ஜிஆர்(சென்ட்ரல்) முதல் மேட்டுப்பாளையம் வரைக்கும் மேட்டுப்பாளையம் முதல் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் வரைக்கும் அதேபோல் திருச்சி- நாகர்கோவில் முதல் நாகர்கோவில்- திருச்சி வரைக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது.

இது புதுசா இருக்கே: தர்பூசணியை இசைக்கருவியாக மாற்றிய இசைக்கலைஞர்.! வைரல் வீடியோ.!இது புதுசா இருக்கே: தர்பூசணியை இசைக்கருவியாக மாற்றிய இசைக்கலைஞர்.! வைரல் வீடியோ.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை

ரயில்கள் வரும் பயணிகளுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, விதிககளை பின்பற்றியே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரயில் நிலையங்களில் பயணிகள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதி

அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதி

டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள், அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும், அறிகுறி இல்லாத பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு தொடக்கம்

முன்பதிவு தொடக்கம்

அதேபோல் மேலே குறிப்பிட்டுள்ள 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் காலை 8 மணி முதல் தொடங்கப்படுகிறது. சுமார் ஐந்து மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதையடுத்து முன்பதிவை பயணிகள் ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Special Train Announced in Tamilnadu From September 7, Online Booking Started!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X