Home
News

CSK ரசிகர்களே கவனியுங்க.. CSK சென்னை மேட்ச்க்கு ஆஃப்லைன் டிக்கெட் இல்லை.. டிக்கெட் புக்கிங்கில் மாற்றம்..

ஐபிஎல் 2024 சீசன் (IPL 2024 Season) துவங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒரு முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பாக, சென்னையில் நடைபெறவிருக்கும் CSK மேட்ச்களை காண ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

IPL 2024 CSK Ticket: சமீபத்தில் வெளியான புதிய தகவலின் படி, ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) உரிமையானது ஆஃப்லைன் டிக்கெட் விற்பனையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, ரசிகர்கள் பேட்டியும் இன்சைடர் அப்ளிகேஷன் (Paytm Insider Application) மூலம் CSK கேம்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

CSK ரசிகர்களே கவனியுங்க.. CSK மேட்ச்க்கு ஆஃப்லைன் டிக்கெட் இல்லை

CSK: ஆம், இந்த முறை நீங்கள் நேரடியாக CSK மேட்ச் நடைபெறும் ஸ்டேடியம்களுக்கு சென்று, டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. அதேபோல, அதிக விலை கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கி போட்டியை காண வேண்டிய அவசியமும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் போட்டியில், டிக்கெட் கிடைக்காமல் பலர் அதிருப்திக்கு ரசிகர்கள் தள்ளப்பட்டனர்.

ஆஃப்லைன் டிக்கெட் இல்லை: குறிப்பாக, பிளாக்கில் டிக்கெட்களை வாங்க மக்கள் தள்ளப்பட்ட காரணத்தினால், இந்த முறை ஆப்லைன் டிக்கெட்டே கிடையாது என்று CSK நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் 2024 சீசன் விரைவில் ஆரம்பிக்க இருப்பதினால், இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே ஐபிஎல் கொண்டாட்டங்கள் இப்போதிலிருந்தே எதிர்பார்க்கப்படுவதினால், பல மாற்றங்களை இந்த ஆண்டு நாம் எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஐபிஎல் மேட்ச் டிக்கெட் சலசலப்பு:

கடந்த ஆண்டு நடைபெற்ற சலசலப்பை தொடர்ந்து, இந்த ஆண்டு மிகவும் கவனமாக டிக்கெட்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அடிப்படையில், சிஎஸ்கே இந்த முறை ரசிகர்களுக்கு சரியான முறையில் டிக்கெட்களை வழங்க ஒரு பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கவுண்டர்கள் மூலம் ஆஃப்லைனில் டிக்கெட் விற்பனை செய்வதை கைவிட்டுள்ளது.

CSK ரசிகர்களே கவனியுங்க.. CSK மேட்ச்க்கு ஆஃப்லைன் டிக்கெட் இல்லை

டிக்கெட் புக்கிங் முறையில் மற்றம்: மாறாக, சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே போட்டிகளுக்கான டிக்கெட்டுகளைப் பெற Paytm இன்சைடர் மொபைல் செயலியை ரசிகர்கள் அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் RCB மற்றும் CSK போட்டியின் போது குழப்பம் நகரத்தை கைப்பற்றிய பிறகு இந்த குறிப்பிடத்தக்க சீர்திருத்தம் வந்துள்ளது. வரிசையில் காத்திருந்தவர்களால் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கவுன்டர்களில் முடங்கினர்.

இனி பிளாக்கில் டிக்கெட் இல்லை: மேலும், பலர் டிக்கெட்டை இருமடங்கு பணத்திற்கு பிளாக்கில் விற்றதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு ரசிகர்களுக்கு டிக்கெட் வாங்கும் முறையை சிஎஸ்கே எளிமைப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் Paytm இன்சைடர் பயன்பாட்டில் உள்நுழைந்து, அவர்கள் கலந்துகொள்ள விரும்பும் மேட்சை தேர்ந்தெடுத்து, ஆன்லைன் கட்டணத்தை செலுத்தி, டிஜிட்டல் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் CSK போட்டி எப்போது?

டிக்கெட்டுகளின் நேரடி விற்பனைக்கான தேதிகளை சிஎஸ்கே இன்னும் அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. வரவிருக்கும் சீசன் நெருங்கும்போது, ​​CSK இன் சமூக ஊடக பக்கங்கள் வழியாக டிக்கெட் விற்பனை தேதி அப்டேட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024 சீசனின் தொடக்க ஆட்டத்தில், தோணி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சந்திக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
IPL 2024 season No Offline Tickets For Chennai Super Kings CSK Chepauk Match Online Ticket Via Paytm Insider
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X