Home
News

வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த வாகனங்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் கிளைம் பெறுவது? யாருக்கு முழு கிளைம் கிடைக்கும்?

மிக்ஜம் புயல் பாதிப்பினால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கும் பல கவலை இருந்தாலும், வாகன உர்மியாளர்கள் தான் இப்போது அதிகமாக கதிகலங்கியுள்ளனர். காரணம், வெள்ளத்தில் சிக்கிய வாகனத்திற்கு எப்படி இன்சூரன்ஸ் தொகையை (Vehicle Insurance) பெறுவதென்று தெரியாமல் பலர் தத்தளித்து வருகின்றனர்.

மிக்ஜம் புயல் (Cyclone Michaung) தீவிரத்தினால், சென்னையில் (Chennai) உள்ள பல இடங்களில் வெல்ல நீர் சூழ்ந்துள்ளது. பல முக்கியமான இடங்கள் முழுமையாக வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளத்தில் (chennai flood) பல பல லட்சம் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் பெருகி வந்த வெள்ளத்தில் பல கார்கள் அடித்து செல்லப்பட்ட வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகின.

வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் கிளைம் பெறுவது?

வெள்ளத்தில் சேதமடைந்த கார், பைக் மற்றும் ஆட்டோக்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் கிளைம் பெறுவது? (How to get an insurance claim for flood damaged car, bike and autos):

இருசக்கர வாகனம் (2 wheeler vehicle), மூன்று சக்கர வாகனம் (auto-rickshaw) மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் (cars) என்று எல்லாமே வெள்ள நீரில் சிக்கி வீணாகியுள்ளன. சரியான, இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தை (Insurance coverage plan) வைத்துள்ளவர்கள் இந்த சேதத்தில் இருந்து தப்பித்துவிடுவார்கள். ஆனால், இன்னும் சிலருக்கு இன்சூரன் பிரீமியம் (insurance premium) இருந்தும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதாரங்களுக்கு கவரேஜ் (insurance coverage) கிடைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு சில முக்கியமான காரணங்கள் இருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும்? எந்த இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தில் வெள்ளத்தால் ஏற்படும் சேதாரங்களுக்கு மீட்பு தொகை (insurance claim amount) வழங்கப்படும்? வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்த வாகனத்திற்கு எப்படி இன்சூரன்ஸ் கிளைம் கேட்டு விண்ணப்பிக்க (how to register for flood damage insurance claim) வேண்டுமென்பது போன்ற விரிவான தகவலை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

யாருக்கெல்லாம் முழு காப்பீடு தொகை கிடைக்கும்? (Who gets the full insurance claim amount):

காப்பீட்டு வழங்குநரான ACKO இன் கூற்றுப்படி, விரிவான கார் காப்பீட்டுக் கொள்கையானது (comprehensive car insurance policy) வெள்ளம் (flood damage), பூகம்பம் (earthquake), சூறாவளி (cyclone) போன்ற இயற்கைப் பேரிடர்களால் உங்கள் காருக்கு ஏற்படும் சேதங்களை உள்ளடக்கும் என்று கூறியுள்ளது. இது விபத்துக்கள் (Accidental damage), தீ விபத்து (Fire), மனிதனால் ஏற்படும் பேரழிவுகள் மற்றும் திருட்டு போன்றவற்றால் ஏற்படும் சேதங்களையும் உள்ளடக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் உரிமையாளர்கள், சரியான காப்பீட்டுத் திட்டத்தைப் பெற்றிருந்தால், ஓரளவு நிவாரணம் பெறலாம். இருப்பினும், கட்டாயமாக மூன்றாம் தரப்பு காப்பீட்டில் (On third party insurance) உள்ள கார் உரிமையாளர்களுக்கு வெள்ளப் பாதுகாப்பு நிவாரணம் (Flood protection relief claim) வழங்கப்படாது என்பதை முதலில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

வெள்ளத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் கிளைம் பெறுவது?

வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் இருந்து உங்கள் வாகனத்தைப் பாதுகாக்க விரிவான திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியம் என்று நிறுவனம் கூறியுள்ளது. வெள்ளம் தொடர்பான சேதங்கள் என்ஜின் (engine), கியர்பாக்ஸ் (gearbox), எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பகங்கனல் (electronic accessories) மற்றும் அப்ஹோல்ஸ்டரி சேதத்தை உள்ளடக்கும். தண்ணீரில் பழுதடைந்த என்ஜினை பழுதுபார்க்கவோ அல்லது மாற்றவோ ரூ.75,000 முதல் ரூ.15 லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், விரிவான திட்டங்கள் அனைத்து வகையான சேதங்களையும் முழுமையாக ஈடுசெய்யாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, காப்பீட்டை வாங்கும் போது, என்ஜின் பாதுகாப்பு கவரேஜ் (engine protection cover) அல்லது ஹைட்ரோஸ்டேடிக் கவரேஜ் (hydrostatic cover) போன்ற வெள்ளக் கவரேஜை உறுதி செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக மதிப்பாய்வு செய்வது அவசியமாகும்.

ஆட்-ஆன் இன்சூரன்ஸ் ஏன் முக்கியமானது? (Why Add-on Insurance Cover is Important):

எப்போதும் கூடுதல் ஆட்-ஆன் இன்சூரன்ஸ் (Add-on Insurance) திட்டங்களையும், ஜீரோ க்ளைம் போனஸ் (Zero Depreciation Cover) மற்றும் என்ஜின் பாதுகாப்புக் கவர் போன்ற திட்டங்களை சேர்த்துக்கொள்வது சிறப்பானது என்று நிறுவனம் கூறியுள்ளது. கூடுதலாக, தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வெள்ளம் சூழ்ந்த இடத்தில் உங்கள் கார் பழுதடைந்தால், அதை மீண்டும் ஸ்டார்ட் செய்ய முயற்சிக்க வேண்டாம் (dont start your car in a flooded area) என்று கூறப்பட்டுள்ளது.

இது உங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்பதை நினைவில்கொள்ளவும். சரி, இப்போது உங்கள் கையில் இருக்கும் இன்சூரன்ஸ் எந்தெந்த சிக்கல்களுக்கெல்லாம் கைகொடுக்கும் என்று ஒரு ஐடியா கிடைத்திருக்கும். இப்போது, உங்கள் இன்சூரன்ஸ் சான்றிதழில் வழங்கப்பட்டுள்ள டோல்-ஃபிரீ தொலைப்பேசி எண்ணிற்கு (toll-free dial number) அழைப்பு விடுத்து உங்கள் கிளைம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம். நீங்கள் ACKO பயனர் என்றால், மொபைல் ஆப்ஸ் மூலம் எளிமையாக 10 முதல் 30 நாட்களுக்குள் கிளைமை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to get an insurance claim for flood damaged vehicles Who gets full claim
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X