ஆன்லைனில் பசு விற்பனை.. அடிமாட்டு விலையில் பசு மாடு விற்பனை.. நம்பி பல்ப் வாங்கிய நபர்.. என்னாச்சு தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் எல்லாமே ஆன்லைன் மூலம் விற்கப்படுகிறது. முதலில் உயிர் இல்லாத பொருட்களை மட்டும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வந்த மக்கள், இப்போது உயிர் உள்ள ஜீவராசிகளையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குகிறார்கள்.
தெரியாதவர்களுக்கு, இப்போது நாம் இணையம் வழியாக நாய், குரங்கு, பல்லி, பச்சோந்தி, வண்டு, பாம்பு என்று எந்த விலங்கை வேண்டுமானாலும் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து அவற்றை வளர்க்க முடியும். செல்லப்பிராணி வளர்க்க விரும்புபவர்கள் இத்தகைய விலங்குகளை ஆர்டர் செய்து வாங்கி மகிழ்கிறார்கள். ஆனால், நமது இந்தியா போன்ற நாடுகளில் விலங்குகளை வளர்த்து அதில் ஆதாயம் பார்க்க பார்க்கிறார்கள்.

குறிப்பாக, பசுக்களை இந்தியர்கள் விவசாய நோக்கத்திற்காகவும், பால் வியாபாரத்திற்காகவும் வாங்குகிறார்கள். இதற்கென பிரத்தியேக மாட்டு சந்தைகள் எல்லாம் ஒவ்வொரு கிராமங்களிலும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால், சமீப காலமாக பசு விற்பனை கூட ஆன்லைன் வழியில் நடைபெறுகிறது. தற்போது இந்த சேவை, கிராமம் கிராமமாக பரவி, மக்கள் தங்களுக்கு தேவையான மாடுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்கிறார்கள்.
இது பல நேரங்களில் சரியாக செயல்பட்டாலும், துரதிர்ஷ்டவசமாக, சிலர் மாடுகளை தள்ளுபடி விலையில் வாங்கச் சென்று பணத்தை இழந்துள்ளனர். சமீபத்தில் நடந்த இந்த சம்பவம் விவசாயிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்த சம்பவம் குருகிராமில் நடந்துள்ளது. தள்ளுபடி விலையில் மாடுகளை வழங்குவதாக கூறி ஆன்லைன் மோசடியில் விவசாயி ரூ.22,000 இழந்துள்ளார்.
குர்கானில் உள்ள ஒரு 50 வயது விவசாயி சுக்பீர் இந்த மோசடியில் விழுந்தார். மேலும், இது தொடர்பாக அவரது மகன் பர்வீன் (30) தகவல் அளித்து போது, ஆன்லைனில் மாடுகளை வாங்கினால் அதிக சலுகை கிடைக்கும் என நினைத்து ஏமாற்றியதாக விளக்கமளித்துள்ளார். எனது தந்தை ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்.
அவர் யூடியூப் மற்றும் கூகுள் மூலம் தகவல் மற்றும் பொழுதுபோக்குகளைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில், ஒரு இணையதளத்தில் மாடுகள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதை அவர் கவனித்திருக்கிறார். பின்னர், அந்த மாடுகளை பற்றி விசாரிக்க முயன்றபோது, அந்த மாடுகளின் போட்டோக்களை வாட்ஸ்அப்பில் மோசடிகாரர்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் ஒவ்வொரு மாட்டின் விலை ரூ.35 ஆயிரமாக இருந்தது. ஆனால், விவசாயி 4 மாடுகளுக்கு மொத்தமாக ரூ.95,000 தருவதாக கூறியிருக்கிறார். அதை மோசடிக்காரர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். மகிழ்ச்சியான விவசாயி அட்வான்ஸ் தொகையை செலுத்த தயாராகி இருக்கிறார். மாட்டை விற்பவர்கள், நேரடியாக மாடுகளை அவரது இருப்பிடம் அருகே இருக்கும் நகரத்தில் ஒப்படைப்பதாக கூறியுள்ளனர்.
ஜனவரி 19 முதல் 20ஆம் தேதிக்குள் மாடுகள் ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளனர். ரூ.22,999 மொத்த பரிவர்த்தனையை விவசாயி செய்திருக்கிறார். ஆனால் அவர்கள் கூடுதல் பணம் கேட்கும் போது. இது ஒரு தந்திரம் என்பதை சுக்பீர் உணர்ந்திருக்கிறார். பின்னர் அவர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 419 மற்றும் 420 இன் கீழ் தெரியாத நபர்கள் மீது புகார் அளித்திருக்கிறார்.
இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற சிக்கல்களில் பொது மக்கள் சிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் எதுவும் பொருட்களை வாங்க முயன்றால், முதலில் விற்பனையாளரின் நம்பக தன்மையை ஆராய்ந்த பிறகு பணபரிவர்தனையை மேற்கொள்ள அறிவுரைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








