Home
News

3 மிஸ்டு கால்.. வங்கி கணக்கில் இருந்து 50 லட்சம் திருட்டு.. இந்த தவறை நீங்களும் செய்யாதீர்கள் மக்களே.! உஷார்..

ஆன்லைன் மோசடிகள் (online scam) இந்தியாவில் பெருகிவிட்டது. வங்கி கணக்கில் பத்திரமாக இருக்கும் பணத்தை கூட, இப்போது மோசடிக்காரர்கள் மிகவும் சுலபமாக நூதனமுறையில், அதுவும் வெறும் சில நிமிடங்களில் திருடிவிடுகிறார்கள். இதனால் மக்கள் இப்போது அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

சமீபத்திய ஆன்லைன் மோசடி சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. வக்கீலாக பணிபுரியும் ஒரு பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் பணம் வெறும் 3 மிஸ்டு கால் அழைப்பு (missed call) மூலம் நூதனமுறையில் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 மிஸ்டு கால்.. வங்கி கணக்கில் இருந்து 50 லட்சம் திருட்டு.. உஷார்.!

தில்லி காவல்துறையின் சைபர் பிரிவு வெளியிட்ட தகவலின் படி, பாதிக்கப்பட்ட நபர் அவருக்கு வந்த அழைப்பையும் ஏற்கவில்லை, OTP விபரங்களையும் பகிரவில்லை, இருப்பினும் 50 லட்சம் திருடப்பட்டுள்ளது. இந்த மோசடி சிம் ஸ்வாப்பிங் (SIM swapping) செய்ததன் மூலம் நடைபெற்றிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சரி, உண்மையில் என்ன நடந்தது? எப்படி மோசடிக்காரர்கள் இத்தகைய பெருந்தொகையை ஆன்லைன் மூலம் திருடினார்கள் என்று பார்க்கலாம்.

பாதிக்கப்பட்ட பெண் வக்கீலின் தொலைபேசி எண்ணிற்கு (mobile number) அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து 3 மிஸ்டு கால் அழைப்புகள் வந்ததாக கூறப்படுகிறது. எந்த அழைப்பையும் அந்த வக்கீல் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல், அவர் மொபைல் எண்ணிற்கு எந்தவொரு OTP எண்ணும் பகிரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், மோசடிக்காரர்கள், வக்கீலின் வங்கி விவரங்கள் (banking details) மற்றும் தனிப்பட்ட தரவு அனைத்தையும் பெற முடிந்ததாக தெரிகிறது.

பெண் வக்கீலின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடிக்காரர்கள் அணுகி திருடியதாக தெரிகிறது. 35 வயதான வழக்கறிஞர் மேலும் குறிப்பிட்டு கூறுகையில், அவருக்கு அடுத்த சில நாட்களில் வேறொரு எண்ணில் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. அந்த அகைப்பில் பேசிய நபர், பார்சல் வந்திருப்பதாக கூறி, அதில் முகவரி இல்லை, ஆனால் மொபைல் எண் மட்டும் இருந்ததாக கூறி, வக்கீலின் முகவரியை சேகரித்ததாக தெரிகிறது.

பார்சலை அடுத்த நாள் டெலிவரி செய்வதாக கூறியிருக்கிறார் அந்த நபர், ஆனால், எந்தவொரு பார்சலும் அந்த பெண் வக்கீலின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படவில்லை. அதற்கு மாறாக, வக்கீலின் வங்கி கணக்கில் இருந்து, பணப் பரிவர்த்தனைகள் நடந்ததாக அவருக்கு மெசேஜ் வந்துள்ளது. இறுதியில் வங்கி கணக்கை (bank account) சோதனை செய்து பார்த்தபோது அதிலிருந்து 50 லட்சம் பணம் திருடப்பட்டதாக தெரியவந்துள்ளது.

உடனே, பாதிக்கப்பட்ட நபர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். விசாரணையில், இது புது விதமான மோசடியாக இருக்கிறது என்றும், மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவரின் சிம் கார்டு (SIM card) போல மற்றொரு சிம் கார்டை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதை சிம் ஸ்வாப்பிங் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தெரியாதவர்களுக்கு சிம் ஸ்வாப்பிங் என்பது, உங்கள் சிம் போல மற்றொரு சிம் கார்டை உருவாக்கி அதன் விபரங்களை அணுகுவதாகும்.

அவர்களுக்கு அணுகல் கிடைத்ததும், அவர்கள் பயனரின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் சிம் இன் ஓனர் போல பணம் கோருகின்றனர். சமூக ஊடக கணக்குகள், ஆன்லைன் வங்கி அணுகல் மற்றும் பல தகவலை சேகரிக்கின்றனர். இணைய வங்கிச் சேவை உட்பட பல ஆன்லைன் சேவைகள் மற்றும் OTP அடிப்படையிலான இரு காரணி அங்கீகாரத்திற்கு சிம் கார்டு முக்கிய காரணியாக இருப்பதனால், இத்தகைய மோசடியின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கிறது.

இத்தகைய மோசடிகளில் நீங்களும் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க, உங்கள் சிம் கார்டுக்கு பின் நம்பர் பதிவு செய்து வைப்பது சிறப்பானது. SIM PIN நம்பர் இருந்தால், மற்றவர்களால் உங்கள் சிம் கார்டை பயன்படுத்த முடியாது என்பதை நினைவில்கொள்ளவும். தெரியாத நபர்களிடம் உங்கள் முகவரி, வங்கி விபரங்களை மற்றும் பிற தகவல்களை பகிர்வதை தவிர்க்கவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Delhi Advocate Loses Rs 50 Lakh Via SIM Swap Scam How To Stay Safe
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X