Home
How to

மாஸ்க்டு ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி? இதன் பயன்கள் என்னென்ன? தெரிந்து கொள்ளலாம் வாங்க..

வங்கி கணக்கு துவங்குவது முதல் செல்போன் சிம் வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் ஆதார் மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. அதேபோல் அரசு அமல்படுத்தி இருக்கும் பல்வேறு திட்டங்களின் பலன்களை பெறவும் ஒருவருக்கு ஆதார் அட்டை அவசியமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இப்போது எல்லாவற்றுக்கும் இந்த ஆதார் அவசியம் என்ற நிலை உருவாகி இருக்கும் சூழலில், மறுபக்கம் ஆதார் தொடர்பான மோசடி சம்பவங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. எனவே தான் ஆதார் சார்ந்து நடத்தப்படும் மோசடிகளைத் தடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மாஸ்க்டு ஆதார் (Masked Aadhaar) என்ற ஆப்ஷனை கொண்டுவந்தது.

மாஸ்க்டு ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி?

இந்த மாஸ்க்டு ஆதார் ஆனது பயனர்களின் விவரங்கள் திருடப்படும் அபாயத்தைக் குறைத்து ஒரு பாதுகாப்பான விருப்பமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாஸ்க்டு ஆதாரின் பயன்கள் என்னென்ன மற்றும் இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பது குறித்த விவரங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மாஸ்க்டு ஆதார் பயன்கள்: இந்த மாஸ்க்டு ஆதார் என்கிற ஆப்ஷன் மூலம் ஒருவரின் ஆதார் தகவல்கள் வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், தனியுரிமையை மேம்படுத்தவும் UIDAI ஆல் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக ஒருவரின் மாஸ்க்டு ஆதாரில் 12 டிஜிட் ஆதார் நம்பரின் முதல் 8 டிஜிட்கள் மறைக்கப்பட்டு, கடைசி 4 டிஜிட்கள் மட்டுமே தெரியும்.

அதாவது மாஸ்க்டு ஆதார் எண்ணில் முதல் 8 எண்களுக்குப் பதிலாக "xxxx-xxxx"என்றும் கடைசி 4 இலக்கங்கள் மட்டும் தெரியும். ஆனாலும் இதில் உங்களது பெயர், போட்டோ, QR கோட் போன்ற முக்கிய விவரங்கள் மறைக்கப்படாமல் வழக்கம் போல வெளிப்படையாகத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களின் ஆதார் ப்ரூஃபை யாராவது கேட்டால் அல்லது ஷேர் செய்ய வேண்டும் என்றால் முழு ஆதார் நம்பர் காட்டும் வழக்கமான கார்டுக்கு பதிலாக மாஸ்க்டு ஆதார் கொடுக்கலாம். பின்பு உங்களின் பிரைவசியை பாதுகாக்க உதவும் என்பது தான் உண்மை.

சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், இந்த மாஸ்க்டு ஆதார் மூலம் உங்கள் ஆதார் நம்பர் பிறர் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கிறது. பின்பு தனியுரிமையைப் பாதுகாக்கிறது. அதேபோல் உரிமம் பெற்ற நிறுவனங்கள் உட்பட பெரும்பாலான அமைப்புகளால் மாஸ்க்டு ஆதார் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. சரி இப்போது இதை டவுன்லோடு செய்வதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1: முதலில் UIDAI அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/-க்கு செல்லுங்கள்.

வழிமுறை-2: அடுத்து அந்த இணையதளத்தில் "My Aadhaar" கீழ் இருக்கும் 'Download Aadhaar' என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து உடனே ஆதார் டவுன்லோட் பேஜ் தோன்றும்.

மாஸ்க்டு ஆதார் பதிவிறக்கம் செய்வது எப்படி?

வழிமுறை-3: அந்த பேஜில் ஆதார் எண் அல்லது பதிவு ஐடி அல்லது வெர்ச்சுவல் ஐடியை சமர்ப்பித்து அங்கு தரப்படும் கேப்ச்சா சவாலை முடிக்க வேண்டும். அதை தொடர்ந்து 'Send OTP' பட்டனை கிளிக் செய்யவும்.

வழிமுறை-4: குறிப்பாக அதே பக்கத்தில் இருக்கும் 'Do you want a masked Aadhaar?' என்ற ஆப்ஷன் தோன்றும். அதை கிளிக் செய்து ஓடிபி என்ற அதற்கான பாக்ஸில் டைப் செய்யவும். பின்பு Verify and Download என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் உங்களது மாஸ்க்டு ஆதாரை PDF ஃபார்மெட்டில் டவுண்லோடு செய்யலாம். அதற்கான பாஸ்வேர்டு, கேபிடல் லெட்டரில் உங்களது பெயரும் கூடவே பிறந்த தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Download masked aadhaar? What are its benefits : check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X