Home
News

ஆசையா ஆர்டர் போட்ட ஐஸ்வர்யா.. டெலிவரி பாக்ஸ்-ஐ ஒப்பன் செய்த போது.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

"மோசடிகள் பலவிதம், அது ஒவ்வொன்றும் ஒருவிதம்!" என்பதை மீண்டும் நிரூபிக்கும்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. மொபைல் போனிற்கு பதிலாக மரக்கட்டை டெலிவரி செய்யப்பட்ட கதைகள், லேப்டாப்பிற்கு பதிலாக சோப்புக்கட்டிகள் டெலிவரி செய்யப்பட்ட கதைகளை நீங்கள் கேட்டுருப்பீர்கள்.. இந்த கதை அதுக்கும் மேல!

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் (Online Shopping Sites) இருந்து ஏதாவது ஒரு பொருளை ஆர்டர் செய்து, அந்த பொருளுக்கு பதிலாக வேறொரு "ஏமாற்று பொருளை" அல்லது "சம்பந்தமே இல்லாத வினோதமான பொருளை" பெறுவது முதல் முறையாக நடக்கும் விஷயமல்ல; மிகவும் வழக்கமான சம்பவங்கள் தான்!

டெலிவரி பாக்ஸ்-ஐ ஒப்பன் செய்த போது.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

ஆனால் ஐஸ்வர்யா கஜூரியா (Aishwarya Khajuria) என்கிற பெண்ணின் கதையை கேட்கும்போது, அவருக்கு என்ன நடந்தது என்பதை கேட்கும்போது.. "அடேய்.. டூபாக்கூர்-ஆ இருந்தாலும் கூட, அதுல ஒரு நியாயம் தர்மம் வேணாமா டா? இப்படியா டா பண்ணுறது?" என்று நம்மையெல்லாம் கேட்க தூண்டும் அளவிற்கு உள்ளது!

ஐஸ்வர்யா கஜூரியா என்கிற பெண், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான மீஷோ (Meesho) வழியாக கருப்பு நிறத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி வளையல் (Bracelet) ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். தான் ஆர்டர் செய்த வளையல் டெலிவரி செய்யப்பட்டதும், அந்த டெலிவரி பாக்ஸை ஆசை ஆசையாக திறந்து பார்த்துள்ளார் ஐஸ்வர்யா.

அந்த பெட்டிக்குள், தான் ஆர்டர் செய்த வளையல் இல்லை, அதற்கு பதிலாக வேறொரு க்ரீம் பாக்ஸ் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் ஐஸ்வர்யா. சரி அந்த க்ரீம் பாக்ஸிலாவது ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால், அதிலும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதுவொரு வெற்று கிரீம் பாக்ஸ் ஆகும்; அதாவது அதற்குள் ஒன்றுமே இல்லை!

அதைப்பார்த்து கடுப்பான ஐஸ்வர்யா கஜூரியா, தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தின் வழியாக.. இந்த காலி டப்பாவை 'ரிட்டர்ன்' செய்ய எனக்கு வெட்கமாக இருக்கிறது. இதை திரும்பப்பெற வரும் டெலிவரி பெர்சன் என நினைப்பார்? என்று பேசி சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில், தனக்கு வந்துள்ள காலி டப்பாவானது பயன்படுத்தப்பட்ட ஒரு 'பாண்ட்ஸ்' க்ரீம் பாக்ஸ் ஆகும். எனக்கு இது டெலிவரி செய்யப்படுவதற்கு முன்பே, அதை வைத்திருந்தவர் அந்த க்ரீமை பயன்படுத்தி இருக்க வேண்டும் என்றும் ஐஸ்வர்யா கஜூரியா நகைச்சுவையாக பேசி உள்ளார்.

ஐஸ்வர்யா கஜூரியா, இதுபோன்ற ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி மோசடியை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அவர் வெளியிட்ட வீடியோவில், கடந்த காலங்களிலும் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. உண்மையான ஆர்டருக்கு பதிலாக பழைய புடவைகள் மற்றும் பிற ஆடைகளை பெற்றதாகவும் ஐஸ்வர்யா கஜூரியா கூறியுள்ளார்.

இதுபோன்ற ஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? புகழ்பெற்ற வலைத்தளங்களில் இருந்து மட்டுமே ஷாப்பிங் செய்யவும். நிஜத்தை போலவே பிரதிபலிக்கும் போலியான இணையதளங்களில் ஷாப்பிங் செய்ய வேண்டாம். நம்பவே முடியாத சலுகைகளை கண்டால் அது உண்மைதானா என்று 'டபுள்-செக்' செய்யவும்.

முடிந்தவரை டெலிவரி செய்யும் போது பணம் கொடுக்கும் ஆப்ஷனை தேர்வு செய்யவும். இல்லையென்றால் யுபிஐ (UPI) அல்லது பேங்க் கார்டுகள் போன்ற பாதுகாப்பான கட்டண முறைகளை பயன்படுத்தவும் ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டு இருந்தால், உடனே அந்த மோசடியை பற்றி புகார் அளிக்கவும்.

Photo Courtesy: Aishwarya Khajuria Instagram Page

More from GizBot

Best Mobiles in India

English summary
Woman Named Aishwarya Khajuria Ordered Black Butterfly Bracelet in Online But Gets Empty Cream Box
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X