Home
How to

PF கணக்கு இருக்கா? அப்போ இந்த வருஷம் எவ்வளவு பேலன்ஸ் இருக்கு? உடனே செக் பண்ணுங்க..கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தனித்தனி PF கணக்கு வழங்கப்படுகிறது. இந்த PF கணக்கில் மாதம்-மாதம் ஒரு தொகை வரவு வைக்கப்படுகிறது. இது ஒரு சிறந்த சேமிப்பு திட்டமாக செயல்படுகிறது. உங்கள் PF கணக்கில் எவ்வளவு இருப்புள்ளது என்பதை தெரிந்திருப்பது முக்கியமானது.

ஒவ்வொரு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள UAN விபரங்களை வைத்து, உங்கள் PF கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இதை எளிமையாக செய்து முடிக்க 4 எளிய வழிகளில் உள்ளன. PF பேலன்ஸ் விபரங்களை அறிந்துகொள்ள உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போனே போதுமானது. சரி, இப்போது எப்படி உங்கள் PF கணக்கின் இருப்பை அறிந்துகொள்வதென்று பார்க்கலாம்.

PF கணக்கு இருக்கா? அப்போ இந்த வருஷம் எவ்வளவு பேலன்ஸ் இருக்கு?

மிஸ்டு கால் மூலம் PF பேலன்ஸ் செக் செய்வது எப்படி?
PF கணக்கு பேலன்ஸ் இருப்பை அறிந்துகொள்ள பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இந்த எண்ணை அழைத்தவுடன் அது தானாகவே துண்டிக்கப்படும். சிறிது நேரம் கழித்து, உங்கள் மொபைலில் PF கணக்கின் இருப்பு விவரம் உங்களுக்கு SMS ஆக அனுப்பப்படும்.

SMS மூலம் உங்கள் PF இருப்பை எப்படி சரிபார்ப்பது?
சம்பளம் பெறும் பணியாளர்கள் தங்கள் PF கணக்கு இருப்பை எளிய SMS முறை மூலம் சரிபார்க்கலாம். இதற்காக, ஊழியர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து EPFOHO என்று டைப் செய்து, |பின்னர் அவர்களின் UAN எண்ணை உள்ளிடவும். இந்த செய்தியை 7738299899 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். சில நிமிடங்களில் SMS மூலம் உங்கள் இருப்பு தொகை விபரம் காண்பிக்கப்படும்.

UMANG ஆப்ஸ் மூலம் உங்கள் PF இருப்பை சரிபார்ப்பது எப்படி?
சம்பளம் பெறும் ஊழியர்கள் UMANG போர்ட்டல் மூலம் EPFO ​​இன் ஆன்லைன் சேவைகளை அணுகலாம். உமாங் போர்ட்டல் மூலம் சம்பளம் பெறும் ஊழியர்கள் தங்கள் PF கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். இந்த செயலியை கூகுள் பிளே ஆப் ஸ்டோர் மற்றும் விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். அல்லது www.umang.gov.in மூலம் நேரடியாக வலைப்பக்கத்தின் மூலமாகவும் PF பேலன்ஸை அணுகலாம்.

PF கணக்கு இருக்கா? அப்போ இந்த வருஷம் எவ்வளவு பேலன்ஸ் இருக்கு?

EPFO ஆன்லைன் போர்டல் வழியாக எப்படி PF பேலன்சை அறிவது?
பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் தங்கள் PF கணக்கின் இருப்பை EPFO ​​இணையதளத்தில் இருந்தும் சரிபார்க்க முடியும். இதற்கு, உங்களிடம் முதலில் UAN எண் விபரங்கள் இருக்க வேண்டும். பாஸ்வோர்டை உள்ளிட்ட பிறகு, நீங்கள் லாகின் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, இணையதளத்தில் உங்கள் EPF இருப்பை அறிய இங்கே கிளிக் செய்யவும் என்ற விருப்பத்திற்குச் செல்ல வேண்டும்.

அடுத்தபடியாக, நீங்கள் epfoservice.in/epfo பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். இதற்குப் பிறகு நீங்கள் இருப்புத் தகவல் விருப்பத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு, நீங்கள் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் மாநிலத்தின் EPFO ​​அலுவலக இணையதளத்தின் இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இறுதியாக உங்கள் PF கணக்கு எண், பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.

பின்னர் நீங்கள் சப்மிட் விருப்பத்தை கிளிக் செய்த பிறகு, உங்கள் PF இருப்பு திரையில் காண்பிக்கப்படும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே எளிமையாக இந்த முறைகளை பின்பற்றி உங்கள் பஃ கணக்கு பேலன்சை நீங்கள் செக் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Check Your EPFO PF Balance Online Buy Using Missed Call SMS UMANG Apps and Website Portal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X