Home
News

வங்கி கணக்கில் இருந்து 2.37 லட்சம் திருட்டு.. கடற்படை அதிகாரிக்கே விபூதி அடித்த மோசடி கும்பல்..

இந்தியாவில் ஆன்லைன் மோசடி (Online Scam) பெருகிவிட்டது. மோசடிக்காரர்கள் தினுசு தினுசாக யோசித்து மக்களை ஏமாற்றி பணத்தை டிஜிட்டல் முறையில் திருடி வருகிறார்கள். வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எங்கோ ஒரு மூலையில் இருந்து திருடுவதை இத்தகைய கும்பல் பழக்கமாக கொண்டுள்ளன.

மோசடி செய்பவர்கள், போன் கால் அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) மெசேஜ் மூலம் அப்பாவி மக்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் நம்பும் விதமாக எதாவது ஒரு கதையை சொல்லி, அவர்களுடைய வங்கி கணக்கில் (bank account) இருக்கும் பணத்தை எளிதாக திருடிவிடுகிறார்கள். இது போன்ற சம்பவம் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் இப்போது ஒரு இந்திய கடற்படை அதிகாரி (Indian Navy Officer) ஏமாற்றப்பட்டுள்ளார்.

வங்கி கணக்கில் இருந்து 2.37 லட்சம் திருட்டு.. கடற்படை அதிகாரி ஏமாற்றம்

இவர் ஏமாற்றம் அடைந்தது எப்படி? இவரிடமிருந்து எப்படி மோசடிக்காரர்கள் ஆன்லைன் மூலம் ரூ.2.37 லட்சத்தை திருடினார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். இத்தகைய மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். மும்பையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஆஷிஷ் சிட்னிஸ் மோசடிக்காரர்களால் ஆன்லைன் முறையில் ஏமாற்றப்பட்டுள்ளார்.

கடந்த, செப்டம்பர் 8 ஆம் தேதி, தன்னை ஜோதி என்று அடையாளம் தெரியாத நபர் அழைப்பு மூலம் தொடர்புகொண்டதாக அவர் கூறியுள்ளார். அசோக் நகரில், கண்டிவாலி (கிழக்கு) இல் அமைந்துள்ள வங்கியில் சிட்னிஸ் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். ஜோதி என்று அழைத்த நபர், சிட்னிஸிடம் அவர் வங்கி அதிகாரி போல் பேசியிருக்கிறார்.

சிட்னிஸிடம் அவருடைய லாக்கர் கட்டணம் (bank locker charges) நிலுவையில் இருப்பதாகவும், உடனடியாக வங்கியில் 6,600 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் ஜோதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அழைப்பு வந்த சில வாரங்களுக்குப் பிறகு, சிட்னிஸ் தனது வங்கிக் கணக்கை சரிபார்த்த போது, அவருடைய சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.2.37 லட்சம் திருடப்பட்டுள்ளதை கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து இந்த மோசடி நடைபெற்றுள்ளது.

வங்கி கணக்கில் இருந்து 2.37 லட்சம் திருட்டு.. கடற்படை அதிகாரி ஏமாற்றம்

கடந்த செப்டம்பர் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை தனது 2 சேமிப்பு கணக்குகளில் இருந்து ரூ.2.37 லட்சம் பணம் திருடப்பட்டிருப்பதாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். சிட்னிஸ் தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தை எப்படி இழந்தார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், மோசடி செய்பவர்களிடம் கவனக்குறைவாக சிட்னிஸ் தனது வங்கிக் கணக்குத் தகவல் உள்ளிட்ட முக்கிய விவரங்களை மோகொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிட்னிஸ் அவர் வங்கி கணக்கு விபரங்களை பார்த்த பொது, அவர் சேமிப்பு கணக்கில் வெறும் பூஜ்ஜிய இருப்பு (zero balance) இருந்ததாக கூறப்படுகிறது. மோசடி செய்பவர் செப்டம்பர் 8 ஆம் தேதி குஜராத்தில் இருந்து 2 முறை ரூ.25,000 பணத்தை திருடியுள்ளனர். பிறகு, செப்டம்பர் 11 அன்று, 3 முறை ரூ.22,000 பணத்தை திருடியுள்ளனர்.

செப்டம்பர் 13 ஆம் தேதி, மற்றும் 15ம் தேதி இடையில் பல முறை ரூ.15,000 மற்றும் ரூ.25,000 என்று கணக்கை சூறையாடியுள்ளனர். இதில் அதிர்ச்சி என்னவென்றால், ஒரு முறை கூட, பரிவர்த்தனை தொடர்பான மெசேஜ்கள் சிட்னிஸ் மொபைல் எண்ணிற்கு வரவேயில்லை என்பது குறிபிடித்தக்கது. மோசடி செய்பவர்கள், அவருடைய மொபைல் எண்ணையும் (mobile number) முடக்கிவிட்டனர். இதுபோன்ற சிக்கலில் நீங்களும் சிக்காமல் பாதுகாப்பாக இருப்பது என்ன செய்ய வேண்டும்? அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

தேவையில்லாமல் உங்களை அழைக்கும் எவரிடமும் உங்கள் தனிப்பட்ட தகவலை ஒருபோதும் கொடுக்காதீர்கள். குறிப்பாக, உங்கள் சமூக பாதுகாப்பு எண், வங்கி கணக்கு எண் (bank account number), கிரெடிட் கார்டு எண் (credit card number), பாஸ்வோர்ட் மற்றும் OTP போன்ற விபரங்களை பகிரவே கூடாது. அதேபோல், தெரியாதவர்கள் அனுப்பும், மெசேஜ்ஜில் வரும் லிங்கை கிளிக் செய்யாதீர்கள்.

இந்த இணைப்புகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருட வடிவமைக்கப்பட்ட ஃபிஷிங் இணையதளங்களுக்கு வழிவகுக்கும் என்பதனால் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். சிறிய அபாயத்துடன் அதிக வருமானத்தை உறுதியளிக்கும் எந்த முதலீட்டு வாய்ப்பிலும் சந்தேகம் கொள்ளுங்கள். இந்த முதலீடுகள் பெரும்பாலும் மோசடிகளாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Retired Navy Officer Gets Phone Call From Fraudster Loses Rs 2.37 Lakh Through Online Scam In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X