ஆப்பிள் இலவசமாக வழங்கும் ரூ.3000.. இந்திய ஆப்பிள் பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை..

|

ஆப்பிள் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3,000 வரை இலவசமாக வழங்குகிறது. பயனர்கள் தங்கள் ஆப்பிள் ஐடியில் பணத்தை டெபாசிட் செய்யும் போதெல்லாம் இந்த பணம் வரவு வைக்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. பயனர் டெபாசிட் செய்யும் பணம் ஆப்பிள் ஐடி இருந்து வேறுபட்ட சேவைகளைப் பயனர்கள் பயன்படுத்தும் போது பயன்படுத்திக்கொள்ள முடியும். இருப்பினும், ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து ரூ. 3,000 வரை இலவசமாகப் பெறுவதற்கு சில நிபந்தனைகளை நிறுவனம் அறிவித்துள்ளது. அது என்ன என்று விரிவாகப் பார்க்கலாம்.

இலவசமாக ரூ. 3000 வழங்கும் ஆப்பிள் நிறுவனம்

இலவசமாக ரூ. 3000 வழங்கும் ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் இலவசமாக ரூ. 3000 வழங்குகிறது என்ற செய்தி வெகு வேகமாக ஊடகங்களில் பரவி வருகிறது. இது இந்திய ஆப்பிள் பயனர்களுக்கு மட்டும் பிரத்தியேகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலவச பணத்தை ஆப்பிளிடம் இருந்து பயனர்கள் பெறுவதற்கு முதலில் அவர்களின் ஆப்பிள் ஐடியில் ரூ. 15,000 தொகையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது டெபாசிட் செய்ய வேண்டும். பிறகு இந்த சலுகை எப்படி வேலை செய்யும் என்பதைக் கீழே விளக்கியுள்ளோம், தொடர்ந்து படியுங்கள்.

என்ன செய்தால் ரூ. 3000 இலவசமாக கிடைக்கும்?

என்ன செய்தால் ரூ. 3000 இலவசமாக கிடைக்கும்?

ஒரு இந்தியப் பயனர் தனது ஆப்பிள் ஐடியில் ரூ. 15,000 வரை டெபாசிட் செய்தால், அவர்/அவள் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் இருந்து சுமார் 20% வரை போனஸ் பெறத் தகுதி பெற்றவராவார். உதாரணமாக, பயனர் தனது ஆப்பிள் கணக்கில் ரூ. 1,000 மட்டும் டெபாசிட் செய்ய முடிவு செய்தால், அவர்/அவள் ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து சுமார் 20% போனஸைப் பெறுவார்கள், இது இந்த இடத்தில் ரூ. 200 இலவச தொகையைப் பயனருக்கு வழங்குகிறது.

ஆப்பிள் ஐபோன் SE 3 பற்றிய சுவாரசிய தகவல்.. 5ஜி இருக்கும் ஆனா 'இந்த' மாற்றம் இருக்காதா?ஆப்பிள் ஐபோன் SE 3 பற்றிய சுவாரசிய தகவல்.. 5ஜி இருக்கும் ஆனா 'இந்த' மாற்றம் இருக்காதா?

ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு காரணமாக வெளிவந்த சலுகையா இது?

ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவு காரணமாக வெளிவந்த சலுகையா இது?

ஆப்பிள் பயனர்களுக்கு ரூ. 3,000 என்ற இலவச போனஸ் வேண்டுமென்றால் அவர்கள் ரூ. 15,000 டெபாசிட் செய்யவேண்டும். இதற்கான 20% போனஸ் தொகைதான் ரூ. 3000 ஆகும்.ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ.) தொடர்ச்சியான கொடுப்பனவுகளுக்கான புதிய உத்தரவு காரணமாக, ஆப்பிள் ஐடி பேலன்ஸிலிருந்து நேரடியாகப் பணம் செலுத்தும் டெவலப்பர்களை ஆப்பிள் ஊக்குவிக்கிறது.

ஆப்பிள் ஐடியில் டெபாசிட் செய்யும் தொகைக்கு மட்டும் தான் இலவச போனஸா?

ஆப்பிள் ஐடியில் டெபாசிட் செய்யும் தொகைக்கு மட்டும் தான் இலவச போனஸா?

பயனர் தனது ஆப்பிள் ஐடியில் டெபாசிட் செய்யும் தொகைக்கு 20% போனஸ் வழங்குவது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க சிறந்த வழியாகும். ஆப்பிள் சலுகை இந்தியப் பயனர்களுக்கு 20% போனஸ் ஏற்கனவே நேரலையில் உள்ளது என்பதனால், நீங்கள் விருப்பப்படும் தொகையை டெபாசிட் செய்து 20% பொன்னாசை பெற்றிடுங்கள்.ஆப்பிள் இந்தியப் பயனர்களுக்கு மட்டுமே இந்த 20% போனஸ் தொகையை இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

10000 சதுரஅடி, 10 மில்லியன் டாலர் மதிப்பு: இது வீடா இல்ல அரண்மனையா?- ஆப்பிள் சிஇஓ டிம் குக் புதுவீடு இதுதான்!10000 சதுரஅடி, 10 மில்லியன் டாலர் மதிப்பு: இது வீடா இல்ல அரண்மனையா?- ஆப்பிள் சிஇஓ டிம் குக் புதுவீடு இதுதான்!

இந்த டெபாசிட் தொகையை ஆப்பிள் பயனர் எதற்கெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம்?

இந்த டெபாசிட் தொகையை ஆப்பிள் பயனர் எதற்கெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம்?

உங்களிடம் ஆப்பிள் சாதனம் இருந்தால், இதை இப்போதே டிரை செய்து பார்க்கலாம். நீங்கள் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து ஒரு சேவையை வாங்கினால் அல்லது அவ்வாறு செய்ய நினைத்தால், இந்த 20% போனஸ் சலுகையை இப்போதே பயன்படுத்திக் கொள்ளலாம்.பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பம்பல், லிங்க்ட்இன், பிக்சார்ட், கல்ட்ஃபிட் மற்றும் கிட்டோப்பியா போன்ற பிரபலமான தளங்களின் சந்தாக்களை வாங்கலாம் என்று ஆப்பிள் ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டது.

அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் மக்களே

அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் மக்களே

UPI ரூபே கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் சர்வதேச டெபிட்/கிரெடிட் கார்டுகள் உட்பட ஒரு பயனர் தனது ஆப்பிள் ஐடிக்கு நிதி சேர்க்கப் பல வழிகள் உள்ளது. இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள் ஆப்பிள் ஐடியில் பணத்தை டெபாசிட் செய்து உடனே போனஸையும் பெற்றுவிடலாம். இந்த சலுகை ஒருமுறை சலுகை என்பதனால், சரியான தொகையை உள்ளிட்டு தரமான போனஸை பெற்று மகிழ்ந்திடுங்கள். இந்த சலுகை இந்தியர்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

Best Mobiles in India

English summary
Apple Is Now Giving Up To Rs 3000 Free Bonus To Indian Customers Who Deposits In Their Apple ID : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X