10000 சதுரஅடி, 10 மில்லியன் டாலர் மதிப்பு: இது வீடா இல்ல அரண்மனையா?- ஆப்பிள் சிஇஓ டிம் குக் புதுவீடு இதுதான்!

|

டிம் குக் தற்போது வாங்கியுள்ள மேடிசன் கிளப் எஸ்டேட்டுக்கு 10.1 மில்லியன் டாலர் செலுத்தியதாக கூறப்பட்டாலும் பொது பதிவுகளில் அந்த தொகை 9.1 மில்லியன் டாலர் மட்டுமே செலுத்தியதாக கூறப்படுகிறது. டெசர்ட் வீடு 8 ஏக்கர் பரப்பளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடு முற்றிலும் நவீனமயமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் ஆறு குளியலறைகள், ஐந்து படுக்கையறைகள், நிர்வாக அலுவலகம், இரண்டு சமையலறை, பில்லியர்ட்ஸ் மேஜை, ஏசி வசதியுடன் கூடிய பார் என பல்வேறு பிரத்யேக அம்சங்கள் இருக்கிறது.

வீட்டில் பார் வசதியுடன் கூடிய நீண்ட நீச்சர் குளம்

வீட்டில் பார் வசதியுடன் கூடிய நீண்ட நீச்சர் குளம்

அதுமட்டுமின்றி இந்த டெஸர்ட் வீட்டில் பார் வசதியுடன் கூடிய நீண்ட நீச்சர் குளம், நெருப்பூட்டும் அம்சத்துடன் கூடிய பார்பிக்யூ உள்ளிட்டவைகள் இதில் இருக்கிறது. இவர் தங்கியிருந்த வீட்டில் அருகில் ஏணைய பிரபலங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீட்டில் இருந்து சாண்டா ரோசா மலைகளை ரசிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெஃப் பெசோஸ், மஸ்க் உள்ளிட்ட பல பணக்காரர்களுடன் ஒப்பிடும் போது டிம் குக் மிகவும் எளிமையான வாழ்க்கையை விரும்புபவர்.

சுமார் 10,000 அடி பரப்பளவில் வீடு

சுமார் 10,000 அடி பரப்பளவில் வீடு

டிம் குக் முன்னதாக குடியிருந்த வீடு 2.3 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகும் இதன் மதிப்பு 2400 சதுர அடி ஆகும். இந்த வீடு ஆப்பிள் தலைமையகம் அருகிலேயே அமைந்துள்ளது. டிம் குக் சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலர் மதிப்புடையது. தற்போது அவர் வாங்கியிருக்கும் வீடு சுமார் 10,000 அடி பரப்பளவில் அமைந்திருக்கிறது.

வண்ணமயமான நவீன கலை சேகரிப்பு

வண்ணமயமான நவீன கலை சேகரிப்பு

இந்த வீடு ஒரு டெவலப்பரால் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வடிவமைத்து அமைக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையில் நிறமற்ற நிலையில் இருக்கிறது. இது பழுப்பு நிறத்தில் வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வண்ணமயமான நவீன கலை சேகரிப்பு ஏராளமான சுவர்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து படுக்கையறைகளும் முழுமையான குளியலறைகளுடன் இருக்கிறது.

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம்குக்

ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம்குக்

உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு சொந்தமான வீடு எந்தளவிற்கு இருக்க வேண்டும் என்பதை இது முழுமைப்படுத்துகிறது. இரண்டு சமையலறைகளுடன் உள்ளன, சமையலறையில் துருப்பிடிக்காத உபகரணங்களுடன் நியமிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் இதில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கண்ணாடி கதவுகள் மற்றும் தடையற்ற உட்புற, வெளிப்புற வாழ்க்கையை அனுமதிக்கின்றன.

சாண்டா ரோசா மலைகள் வியூவ்

சாண்டா ரோசா மலைகள் வியூவ்

வீட்டின் கொல்லைப்புறம் மேற்கு நோக்கி இருக்கிறது. இந்த திசை மேடிசன் கிளப் குடியிருப்பில் இருந்து சாண்டா ரோசா மலைகளை பார்க்க அனுமதிக்கிறது. 60 வயதான குக் ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஆப்பிள் நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார்.

புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர முயற்சி

புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர முயற்சி

ஆப்பிள் நிறுவனம் புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கு மக்களிடையயே அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும். ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

சிஇஓ டிம்குக் ஊதியம்

சிஇஓ டிம்குக் ஊதியம்

ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஒ டிம்குக்கின் இந்த ஆண்டு வருமான குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஸ்டீவ் ஜாப் மறைவிற்குப் பின்னர் 2011-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ வாக டிம் குக் பொறுப்பேற்றார். மேலும் 10 ஆண்டுகள் இவர் இந்தப் பணியில் இருப்பார் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்கிற்கு இந்த ஆண்டு 750 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5,518 கோடிரூபாய்) ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக தகவல்கல் தெரிவித்தது. சுருக்கமாக ஒவ்வொரு ஆண்டிலும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு மதிப்பிற்கேற்ப இவருக்கும் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Pic Courtesy: Social Media

Best Mobiles in India

English summary
Apple CEO Tim Cook's Bought New Stunning Property: 10,000 Square Feet living Space

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X