ஜியோஃபைபரின் ரூ.899-திட்டத்தை தவிடு பொடியாக்கிய ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999-திட்டம்.!

|

ஜியோ நிறுவனம் ஏர்டெல் உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு கடுமையானபோட்டியை உருவாக்கி வந்தது, ஆனால் அன்மையில் இந்நிறுவனம் தனது சலுகைகளை குறைக்கத்துவங்கியது, பின்பு புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்வதை முற்றிலும் நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜியோஃபைபர்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோஃபைபர் சேவையின் அறிமுகத்திற்கு பின்னர், மிகவும் பிரபலமான பிராட்பேண்ட் திட்டங்களின் பட்டியலின் முழுக்க முழுக்க ஜியோஃபைபரின் திட்டங்களை மட்டுமே காண முடிந்தது.

 பாரதி ஏர்டெல்

பாரதி ஏர்டெல்

குறிப்பாக சொல்ல வேண்டும என்றால் ஜியோ நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டங்களை பாரதி ஏர்டெல் நிறுவனத்தின்பிராட்பேண்ட் திட்டங்களால் நெருங்க கூடி முடியவில்லை அதாவது சமன் கூட செய்ய முடியவில்லை.

டிசம்பர் முதல் டிசம்பர் முதல் "ஏர்டெல், வோடபோன்" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை

அதாவது

அதன்பின்னர் விழித்துக் கொண்ட ஏர்டெல் நிறுவனம் சில மாற்றங்களை கொண்டுவந்தது, அதாவது இப்போது ஏர்டெல்நிறுவனத்தின் திட்டங்கள் ஆனாது ஜியோ ஃபைபர் திட்டங்களுடன் கடுமையாக போட்டியிடுகிறது. குறிப்பாக வேக வரம்புகளுக்கும் அதிவேக வரம்புகளுக்கும் கூட இது பொருந்தும். இப்போது ஏர்டெல் ஃபைபர் மற்றும் ஜியோ ஃபைபர் திட்டங்களில் எது சிறந்தது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஜியோஃபைபரின் ரூ.899-சில்வர் திட்டம்

ஜியோஃபைபரின் ரூ.899-சில்வர் திட்டம்

ஜியோ ஃபைபரின் ரூ.899-சில்வர் திட்டத்தில் 100எம்.பி.பி.எஸ் வேகத்திலான 200ஜிபி டேட்டா நீங்கள் பெறமுடியும். பின்பு இதனுடன் 200ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவும் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திட்டத்தின் மொத்த டேட்டா நன்மையானது ஒரு மாதத்திற்கு 400ஜிபி ஆகும். டேட்டா நன்மைகளை தவிர்த்துஇலவச குரல் அழைப்பு, OTTபயன்பாடுகளுக்கான 3மாத கால சந்தா போன்ற கூடுதல் நன்மைகளையும் நீங்கள்
பெறமுடியும்.

ஏர்டெல் பிராட்பேண்ட் ரூ.999-எண்டர்டெயின்மெண்ட் திட்டம்

ஏர்டெல் பிராட்பேண்ட் ரூ.999-எண்டர்டெயின்மெண்ட் திட்டம்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் வழங்கும் ரூ.999-எண்டர்டெயின்மெண்ட் திட்டம் ஆனது 200எம்.பி.பி.எஸ் வேகத்தையும், 300அளவிலான மாதந்திர டேட்டாவையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த திட்டத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர்.

மேலும் ஏர்டெல் பிராட்பேண்ட் ரூ.999-எண்டர்டெயின்மெண்ட் திட்டத்தில் 3மாதங்களுக்கான நெட்ஃபிக்ஸ் சந்தா, ஒரு
வருடத்திற்கான அமேசான் ப்ரைம் சந்தா, ஜி5-க்கான ஆண்டு சந்தா மற்றம் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயன்பாட்டிற்கான அணுகல்உள்ளிட்ட பல கூடுதல் நன்மைகளும் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்துடன் நீங்கள் ரூ.299-என்கிற கூடுதல் செலவைசெய்யும் பட்சத்தில், நீங்கள் இதை வரம்பற்ற டேட்டா திட்டமாக மாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எது சிறந்தது?

எது சிறந்தது?

ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டமானது ஜியோ ஃபைபரின் சில்வர் திட்டத்தை விட சற்று கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும், ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டமானது ஜியோவின் 100எம்.பி.பி.எஸ் வேகத்தை விட இருமடங்கு வேகத்தை வழங்குகிறது.

அதன்பின்பு ஏர்டெல் வழங்கும் ரூ.299 மதிப்புள்ள வரம்பற்ற டேட்டா விருப்பத்தை போன்ற வாய்ப்பை ஜியோ கொண்டிருக்கவில்லை.குறிப்பாக சொல்ல வேண்டும என்றால் அன்லிமிடெட் டேட்டா வாய்ப்பை தேர்வு செய்யும் பட்சத்தில், ஏர்டெல் வழங்கும் வரம்பற்ற டேட்டாவை ஜியோவை விட இரு மடங்கு வேகத்தில் அனுபவிக்கலாம், ஆனால் ஜியோ ஃபைபர் திட்டத்துடன் இது சாத்தியமில்லை.


மேலும் ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டத்தின் வருடாந்திர சந்தாவை பெறுபவர்களுக்கு மாதத்திற்கு அதிகபட்சம் 800 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும், உடன் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் சந்தா போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கும். இருந்போதிலும் ஜியோஃபைபர் ஆனது அதன் வெல்காம் ஆபரின் கீழ் செட்-டாப் பாக்ஸை வழங்கும்போது கூட,அது சந்தாதார்கள் கூடுதல் செலவையே வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Airtel Rs. 999 vs Jio Fiber Rs. 849 Plan: Which one you should choose : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X