டிசம்பர் முதல் "ஏர்டெல், வோடபோன்" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை

|

ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. வோடபோன், ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புதிய தொலைத் தொடர்பு கொள்கையின்படி தங்களது வருவாயில் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த நிலையில் வருவாய் குறைத்து காட்டியது தொடர்பான வழக்கில் ரூ. 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 92 ஆயிரத்து 641 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் என கடந்த மாதம் 24 ஆம் தேதி உத்தரவிட்டது.

வரலாறு காணாத நஷ்டத்தில் வோடபோன் ஐடியா

வரலாறு காணாத நஷ்டத்தில் வோடபோன் ஐடியா

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடுமையான விதிகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளது என தொலைத் தொடர்பு நிறுவனங்கள் குற்றம் சாட்டி வந்தன. இதையடுத்து வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த காலாண்டில் மட்டும் சுமார் 50 ஆயிரத்து 922 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அண்மைக் காலாண்டில் எந்த ஒரு நிறுவனமும் இவ்வளவு நஷ்டத்தை சந்தித்தது இல்லை.

நஷ்டம் அடைந்த ஏர்டெல் நிறுவனம்

நஷ்டம் அடைந்த ஏர்டெல் நிறுவனம்

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏர்டெல்லும் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஏர்டெல், கடந்த காலாண்டில் மட்டும் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததே இதற்கு காரணம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடுமையான நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள்

கடுமையான நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள்

ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் அனைவரும் ஜியோவின் சலுகையால் கவரப்பட்டுள்ளனர். செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தாலும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகிய பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதேசமயம் ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களும் பெரும் நஷ்டத்தை சந்தித்துதான் வருகின்றன.

தொழில்போட்டியை சமாளிக்க சலுகை

தொழில்போட்டியை சமாளிக்க சலுகை

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் ஒன்று அல்லது மூன்று ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவையே வழங்கப்பட்டுவருகிறது. ஆனால் இந்தியாவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிறுவப்பட்டன. அதனால் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கிலும், தொழில் போட்டி காரணமாகவும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து தற்போத கடும் நஷ்டத்தில் சிக்கியுள்ள நிறுவனங்கள் கட்டண விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் கட்டண உயர்வு...

வோடபோன் ஐடியா நிறுவனம் கட்டண உயர்வு...

நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது என்பதை அனைத்து பங்குதாரர்களும் அறிந்துள்ளீர்கள் எனவும் எனவே இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க செயலாளர் மற்றும் முக்கிய அதிகாரிகள் உள்ளடக்கிய கமிட்டி ஆராய்ந்து வருகிறது எனவும் தெரிவித்தனர். சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் மட்டும்தான் கட்டண உயர்வு குறைவு என தெரிவித்துள்ளது. அதோடு இந்தியாவில் வருகிற டிசம்பர் மாதம் முதல்கட்டணங்கள் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம் கட்டண உயர்வு

ஏர்டெல் நிறுவனம் கட்டண உயர்வு

தொழில்போட்டி மற்றும் நஷ்டங்களை சமாளிக்க வருகிற டிசம்பர் மாதம் முதல் செல்போன் சேவை கட்டணங்கள் உயர்த்தப்போவதாக ஏர்டெல் அறிவித்துள்ளது. ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டண உயர்வை உறுதி செய்துள்ள நிலையில், விலைப்பட்டியல் குறித்த விவரங்களை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Airtel, Vodafone Idea To Increase Mobile Service Rates From December

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X