பிஎஸ்என்எல் ரூ.249 திட்டத்தில் திருத்தம்: இனிமேல் 2ஜிபி டேட்டா.! வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா?

|

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த மாதம் தொடக்கம் முதலே பல்வேறு சிறப்பான சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும், சலுகைகளும் மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது. அதிலும் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு போட்டியாக கம்மி விலையில் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம்.

 5ஜி சேவையும்

ஆனாலும் மற்ற தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையை தொடர்ந்து வழங்கி வருகிறன்றன, அதேசமயம் விரைவில் 5ஜி சேவையும் கொண்டுவர திட்டமிட்டுள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் திட்டங்களை வைத்திருந்தாலும் பல்வேறு இடங்களில் 4ஜி சேவையை கொண்டுவரவில்லை.இருந்தபோதிலும் விரைவில் 4ஜி சேவையை அனைத்து இடங்களிலும் கொண்டுவர முயற்சி செய்கிறதுஇந்நிறுவனம்.

ரூ.249 மற்றும்

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.249 மற்றும் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டங்களை திருத்தியுள்ளது. அதில் ரூ.249 திட்டம் ஆனது பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ: அதை ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய நபர்- இணையத்தை கலக்கும் விவாதம்!தவறாக பொறிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ: அதை ரூ.2 லட்சத்துக்கு வாங்கிய நபர்- இணையத்தை கலக்கும் விவாதம்!

திட்டங்களில் தினசரி

குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களில் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கின்றன. மேலும் இப்போது பிஎஸ்என்எல் ரூ.249-திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.298 திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தினசரி 1ஜிபி டேட்டா தரும் வகையி

பிஎஸ்என்எல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா தரும்படி முறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா தரும்வகையில் திருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?

பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம் ஆனது தற்சமயம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40 கே.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும். மேலும் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வழங்கும் ரூ.249 திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

இவருக்கு எல்லாமே சக்சஸ்-தொடர்ந்து 15-ம் வெற்றி: ஜெப்பெசோஸ்சின் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்- விண்ணுக்கு செல்ல ரெடியாஇவருக்கு எல்லாமே சக்சஸ்-தொடர்ந்து 15-ம் வெற்றி: ஜெப்பெசோஸ்சின் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்- விண்ணுக்கு செல்ல ரெடியா

 ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோவின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற உள்நாட்டு அழைப்புகள், ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தா உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

 ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

News Source: indiatoday.in

Best Mobiles in India

English summary
2GB data on BSNL Rs 249 plan! Do you know how many days validity is?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X