இவருக்கு எல்லாமே சக்சஸ்-தொடர்ந்து 15-ம் வெற்றி: ஜெப்பெசோஸ்சின் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்- விண்ணுக்கு செல்ல ரெடியா

|

உலக பில்லியனர்கள் பட்டியலில் ஏணையோர் தொழில்நுட்ப நிறுவனங்களை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதில் தற்போதைய காலக்கட்டத்தில் பிரதான இருவர் குறித்து பார்க்கையில் ஒருவர் எலான் மஸ்க், மற்றொருவர் ஜெப் பெசோஸ். எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்று நிறுவனங்களும், ஜெப் பெசோஸ் அமேசான், ப்ளூ ஆர்ஜின் போன்ற நிறுவனங்களும் கொண்டுள்ளனர்.

ஜெப் பெசோஸ்-ன் ப்ளு ஆர்ஜின்

ஜெப் பெசோஸ்-ன் ப்ளு ஆர்ஜின்

ப்ளு ஆர்ஜின் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனம், குறைந்த செலவில் விண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் நோக்கத்துடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையிடம் வாசிங்டன்னில் உள்ள கென்ட் நகரில் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஜோஸ் 2000 ஆம் ஆண்டில் தொடங்கினார்.

திரும்ப அழைத்து வருவதற்கான ஆய்வுப் பணிகள்

திரும்ப அழைத்து வருவதற்கான ஆய்வுப் பணிகள்

ப்ளு ஆர்ஜின் நிறுவனம் விண்வெளி ஓடங்களையும், விண்வெளி வாகனங்களுக்குத் தேவையான பொருட்களையும் தயாரிக்கிறது. பயணிகளை மிகப் பாதுகாப்பாக விண்வெளிக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவதற்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுக்காக நியூ செப்பர்டு (என்எஸ்) என்ற பெயரில் ராக்கெட்டை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பிச் சோதித்து வருகிறது.

ஆலன் ஷெப்பர்ட் நினைவாக நியூ செப்பர்டு

ஆலன் ஷெப்பர்ட் நினைவாக நியூ செப்பர்டு

விண்வெளிக்கு முதன்முதலில் சென்ற அமெரிக்க விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட் என்பவரின் நினைவாக ராக்கெட்டுக்கு நியூ செப்பர்டு (என்எஸ்) என பெயரிடப்பட்டுள்ளது. பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட என்எஸ் ரக ராக்கெட் தொடர்ந்து ஏணைய வெற்றிகளை சந்தித்து வருகிறது.

தனியார் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின்

தனியார் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின்

இந்த நிலையில் ஜெப் பெசோஸ்-ன் தனியார் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் கடந்த புதன்கிழமை தனது நியூ ஷெப்பர்ட் (என்எஸ்) ராக்கெட் பூஸ்டர் மற்றும் கேப்ஸ்யூல்களின் பதினைந்தாவது சோதனை விமானத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவி தரையிறக்கியது. என்எஸ்-15 என அழைக்கப்படும் இந்த ஏவதல் மேற்கு டெக்சாஸில் உள்ள ப்ளூ ஆர்ஜின் தளத்தில் இருந்து தொடங்கப்பட்டது.

பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் 10 நிமிடங்கள்

பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் 10 நிமிடங்கள்

சோதனை ஏவுதலில் பயணிகள் இல்லாமல் ராக்கெட்டின் மேல் கேப்ஸ்யூல்கள் எதிர்கால விமானங்களுக்கு ஆறு பேரை ஏற்றிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதற்குமுன்பு நடத்தப்பட்ட சோதனையில் கேப்ஸ்யூல்கள் சுமார் 3,40,000 அடிக்கு மேல் அதாவது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லைக்கு மேலே சுமார் 100 கிமீ உயரத்தை எட்டி பூமிக்கு திரும்பியது. இந்த கேப்ஸ்யூல் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் 10 நிமிடங்கள் தாக்குப்பிடித்தது.

25,000 பணியிடங்கள் ஓபன்: ஃபிரெஷர்ஸ்களுக்கு முன்னுரிமை- இன்ஃபோசிஸ் அதிரடி அறிவிப்பு!25,000 பணியிடங்கள் ஓபன்: ஃபிரெஷர்ஸ்களுக்கு முன்னுரிமை- இன்ஃபோசிஸ் அதிரடி அறிவிப்பு!

கேப்ஸ்யூல்களில் பயணிகளின் பார்வைக்கு ஜன்னல்

கேப்ஸ்யூல்களில் பயணிகளின் பார்வைக்கு ஜன்னல்

விண்வெளிக்கு அனுப்பும் கேப்ஸ்யூல்களில் பயணிகளின் பார்வைக்கு மிகப்பெரிய ஜன்னல் உள்ளது. இந்தமுறை ஏவப்பட்ட என்எஸ் 15 ஆனது சுமார் 3,48,753 அடி உயரத்தை எட்டியது. இது ர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லைக்கு மேலே சுமார் 106 உயர கிலோ மீட்டர் ஆகும். ராக்கெட்டின் பூஸ்டர் விண்வெளியில் பிரிந்து மீண்டும் ஏவுதளத்தில் தரையிறங்கியது. அதேபோல் விண்வெளியில் பயணிகள் செல்லும் கேப்ஸ்யூல் மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள பாலைவனத்தில் பாராசூட் உதவியுடன் தரையிறக்கப்பட்டது. 14 முறை ப்ளூ ஆர்ஜின் ஏவிய ராக்கெட் தொடர்ந்து வெற்றியடைந்ததையடுத்து தற்போது என்எஸ்-15 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விண்ணுக்கு சென்ற விண்வெளி வீரர்கள்

விண்ணுக்கு சென்ற விண்வெளி வீரர்கள்

தனியார் நிறுவனம் மூலம் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை நாசா முதன்முறையாக கடந்த மே மாதம் சோதனை செய்தது. இதில் நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகிய வீரர்கள் விண்ணுக்கு சென்றனர். விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பேஸ் எக்ஸின் டிராகன் கேப்சூல் மூலம் பூமிக்கு திரும்பினர்.

நம்பிக்கை தெரிவித்த நாசா

நம்பிக்கை தெரிவித்த நாசா

சரியாக 9 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க மண்ணில் இருந்து முதன் முறையாக மனிதர்களை ஏந்திக்கொண்டு ராக்கெட் விண்ணுக்கு சென்றது. தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இந்த திட்டம் வெற்றிப்பெற்றதையடுத்து வரும்காலங்களில் பல தனியார் விண்வெளி நிறுவனங்களின் பங்களிப்பு விண்வெளித்துறையில் அதிகரிக்கும் என்று நாசா அமைப்பு நம்பிக்கை தெரிவித்தது.

ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம்

ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம்

முன்னதாக ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிறுவனம் ஒரு இருக்கைக்கு சுமார் ரூ.600 கோடி கட்டணம் வசூலித்தது. இந்த செலவை குறைக்கும் பொருட்டு நாசா தனியார் நிறுவனம் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டது. இந்த திட்டத்தில் எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் ஜெப் பெசோஸ்-க்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jeff Bezo's Private Space Company Blue Origin Successfully Tested fifteenth NS Rocket

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X