நட்பு பட்ஜெட் விலையில் ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5ஏ.!

Written By:

சியோமி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான நட்பு பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன ரெட்மீ கருவிகள் வரிசையில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போன் இடம்பெறவுள்ளது. இன்று சீனாவில் நடக்குமொரு நிகழ்ச்சியில் சியோமி நிறுவனம் அதன் ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போன் உடன் ரெட்மீ பதிப்பின் ஒரு மலிவான சாதனமான ரெட்மீ 5 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கருவிகளில் எதிர்பார்க்கப்படும் அம்சங்ககள் என்னென்ன.? இக்கருவிகளின் விலை நிர்ணயப்புள்ளி என்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பட்ஜெட் நட்பு மற்றும் செல்பீயை அடிப்படை

பட்ஜெட் நட்பு மற்றும் செல்பீயை அடிப்படை

ரெட்மீ நோட் 5ஏ ஒரு பட்ஜெட் நட்பு மற்றும் செல்பீயை அடிப்படையாக கொண்ட தொலைபேசியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த சாதனம் முன்பக்கம் எதிர்கொள்ளும் ஃப்ளாஷ் கொண்டிருக்கும்.

புதிய தலைமுறை ரெட்மீ

புதிய தலைமுறை ரெட்மீ

ரெட்மீ நோட் 5ஏ ஆனது ஒரு பிரத்யேக இரட்டை சிம் மற்றும் பிரிக்கப்பட்ட மைக்ரோஎஸ்டி அட்டை ஸ்லாட் கொண்ட முதல் சியோமி சாதனமாக இது இருக்கலாம். புதிய தலைமுறை ரெட்மீ கருவிகளில் இதை தொடர்ந்து எதிர்பார்க்கலாம்.

பல குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு கூறுகள்

பல குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு கூறுகள்

சமீபத்தில், ரெட்மீ நோட் 5ஏ மற்றும் ரெட்மீ நோட் 5 சார்ந்த அனைத்து முக்கிய குறிப்புகளும் டிஇஎன்ஏஏ (TENAA) இணையதளத்தில் காணப்பட்டது. அதன் பின்னரே இந்த இரண்டு சாதனங்களின் பல குறிப்புகள் மற்றும் வடிவமைப்பு கூறுகள் பற்றிய விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

வட்டமான விளிம்புகள்

வட்டமான விளிம்புகள்

வெளியான சீன வலைதள படங்களில் இருந்து வட்டமான விளிம்புகள் மற்றும் ரெட்மீ நோட் 4 கருவியில் காணப்படும் ஆன்டெனா கோடுகள் ஆகியவைகள் ரெட்மீ நோட் 5 மற்றும் 5ஏ ஸ்மார்ட்போன்களில் ஓரளவு மாறாமல் இருக்கும் என்று குறிப்பிடுகின்றன.

பிரீமியம் ஸ்மார்ட்போன்

பிரீமியம் ஸ்மார்ட்போன்

பின்புறத்தில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த இரண்டு கருவிகளில் ரெட்மீ நோட் 5 ஆனது நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாறுபாடு ஆகும். 1.4 ஜிகாஹெர்ட்ஸ் உடனான ஆக்டா-கோர் செயலி கொண்டு இயக்கப்படும்.

ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி

சாதத்தில் பயன்படுத்தப்படும் சிப்செட்டில் எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. முந்தைய வதந்திகளின்படி அது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 630 எஸ்ஓசி கொண்டு இயங்கும், மறுபக்கம் ரெட்மீ 5ஏ ஆனது 1.4 ஜிகாஹெர்ட்ஸ் உதானன் ஒரு க்வாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 கொண்டு இயங்கலாம்.

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்

மற்றபடி திரையின் அளவு, திரை தெளிவுத்திறன், மற்றும் பேட்டரி திறன் ஆகிய அம்சங்களில் இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது, 1280x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5 அங்குல எச்டி டிஸ்ப்ளே இருக்கும். பேட்டரி திறன் பற்றி இதுவரை எந்த வார்த்தையும் இல்லை. மேலும் இரு சாதனங்களும் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்ட எம்ஐயூஐ 9 (MIUI 9) கொண்டு இயங்கும்.

13 மெகாபிக்சல் பின்புற கேமரா

13 மெகாபிக்சல் பின்புற கேமரா

இருப்பினும் இரண்டு கருவிகளும் அதன் உள்ளடக்கிய சேமிப்பு மற்றும் கேமரா அலகுகளில் வேறுபடும். ரெட்மீ நோட் 5 ஆனது ஒரு 16 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டு வருகிறது.

3ஜிபி ரேம்

3ஜிபி ரேம்

ரெட்மீ நோட் 5ஏ ஆனது ஒரு 13 மெகாபிக்சல்முதன்மை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன்பக்க ஸ்னாப்பர் கொண்டு வருகிறது. பிரீமியம் மாறுபாடான ரெட்மீ நோட் 5 ஆனது 3ஜிபி ரேம் மற்றும் மைக்ரோ எஸ்டி வழியாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டிருக்கலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Xiaomi Redmi Note 5A launch today; leaked specifications, expected price. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot