வெறும் ரூ.6,300/-க்கு அடித்து நொறுக்கும் ரெட்மீ 6A; ஆளுக்கு ஒன்னு வாங்கலாம் போலயே.!

ரெட்மீ 5A ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட பதிப்பான புதிய ரெட்மீ 6A ஆனது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் சமீபத்திய ஹீலியோ A22 சிப்செட் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

|

சியோமி நிறுவனத்தின் ரெட்மீ 6A ஆனது, இன்று (செவ்வாயன்று) பெய்ஜிங்கில் நடைபெற்ற சியோமி அறிமுக நிகழ்வொன்றில்,சியோமி ரெட்மீ 6 எனும் பட்ஜெட் ஸ்மார்ட்போனுடன் இணைந்து தொடங்கப்பட்டது. ரெட்மீ 5A ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட பதிப்பான புதிய ரெட்மீ 6A ஆனது 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் சமீபத்திய ஹீலியோ A22 சிப்செட் போன்ற அம்சங்களுடன் வருகிறது

வெறும் ரூ.6,300/-க்கு அடித்து நொறுக்கும் ரெட்மீ 6A.!

இது ரெட்மீ 6-ன் வடிவமைப்பிற்கான கூறுகளை கடனாகக் கொண்டுள்ளது. ஆனால் இரட்டை கேமரா அமைப்பை பெறவில்லை. உடன் பின்புறம் ஏற்றப்பட்ட கைரேகை சென்சாரையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், Xmi Ai டிஜிட்டல் அசிஸ்டென்ட் உடனான ஏஐ கொண்டு இயக்கப்படும் ஃபேஸ் அன்லாக் திறன்கள் உள்ளன. வேறென்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது.? விலை நிர்ணயம் என்ன.? என்பதை விரிவாக காணலாம்.

ரெட்மீ 6A விலை, கிடைக்கும் தன்மை.!

ரெட்மீ 6A விலை, கிடைக்கும் தன்மை.!

சீனாவில் சிஎன்ஐ 599 (அதாவது தோராயமாக ரூ.6,300) அறிமுகமாகியுள்ள ரெட்மீ 6A ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் / 16 ஜிபி ஆனது. இந்திய விற்பனையை பொறுத்தவரை, சியோமி ரெட்மீ 6A ஆனது உடன் வெளியான சியோமி ரெட்மீ 6 ஸ்மார்ட்போன் போன்றே நிறுவனத்தின் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து வருகிற ஜூன் 15 ஆம் தேதி காலை முதல் 10 மணி முதல் வாங்க கிடைக்கும்.

ரெட்மீ 6A அம்சங்கள்.!

ரெட்மீ 6A அம்சங்கள்.!

இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ரெட்மீ 6A ஆனது நிறுவனத்தின் MIUI 9 கொண்டு இயங்குகிறது, இது ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான இயங்குதளம் ஆகும். ஒரு 5.45 அங்குல HD + (720x1440 பிக்சல்கள்) டிஸ்பிளே, ஒரு 18: 9 திரை விகிதம் மற்றும் 295ppi பிக்சல் அடர்த்தி கொண்டது. 2ஜிபி ரேம் உடன் இணைந்த ஒரு க்வாட்-கோர் 12nm மீடியா டெக் ஹீலியோ A22 SoC மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா அம்சங்கள்.!

கேமரா அம்சங்கள்.!

கேமரா துறையை பொறுத்தவரை, ரெட்மீ 6A ஆனது எப் / 2.2 துளை மற்றும் PDAF கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற சென்சார் கொண்டுள்ளது. இதன் பெரிய சகோதரர் ஆன ரெட்மீ 6 ஸ்மார்ட்போனில் இரண்டு சென்சார்கள் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ரெட்மீ 6A ஆனது ஒரு 5 மெகாபிக்சல் கேமரா சென்சாரை (எப் / 2.2 துளை மற்றும் போர்ட்ரேட் பயன்முறை) கொண்டுள்ளது.

சேமிப்பு ஆதரவு.!

சேமிப்பு ஆதரவு.!

இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 16 ஜிபி அளவிலான உள்ளடக்கிய சேமிப்பு உள்ளது, உடன் மைக்ரோ எஸ்ட அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கம் செய்யும் ஆதரவும் உண்டு, அதற்கான ஒரு பிரத்யேக எஸ்டி அட்டை ஸ்லாட்டும் கொண்டிருக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி வோல்ட், ப்ளூடூத் 4.2, வைஃபை, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவைகள் அடங்கும்.

பேட்டரி மற்றும் ரெட்மீ 6 அம்சங்கள்.!

பேட்டரி மற்றும் ரெட்மீ 6 அம்சங்கள்.!

ஒரு 3000mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, அளவீட்டில் 147.5x71.5x8.3 மிமீ மற்றும் 145 கிராம் எடையும் கொண்டுள்ளது. இதே நிகழ்வில் வெளியான சியோமி ரெட்மீ 6 ஆனது ஒரு 12 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல் என்கிற இரட்டை கேமரா அமைப்பு, ஒரு மீடியா டெக் ஹீலிகோ P22 SoC, மற்றும் 4ஜி ரேம் ஆகிய பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi 6A With 18:9 Display, Face Unlock Launched: Price, Specifications, Features. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X