விவோ வி 19 நியோ: அட்டகாச கேமரா வசதியோடு அறிமுகம்., விலை தெரியுமா!

|

விவோ வி 19 ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்போடு 48 எம்பி பிரதான கேமரா வசதியோடு அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ

சீனாவை தளமாகக் கொண்ட பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான விவோ, புதுவகை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி தங்களின் தனித்துவத்தை காட்டிக் கொண்டே வருகின்றன. பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையை விரிவுப்படுத்திக் கொண்டே வருகின்றன.

விவோ பிரத்யேக கேமரா

விவோ பிரத்யேக கேமரா

விவோ பிரத்யேக கேமரா அம்சங்களோடு மற்றொரு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தனது புதிய மாடல் விவோ 19 நியோ ஸ்மார்ட்போனை பிலிப்பைன்ஸில் வெளியிட்டுள்ளது.

குவாட் ரியர் கேமரா அமைப்பு

குவாட் ரியர் கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது ஒற்றை பஞ்ச் ஹோல் செல்பி கேமராவும் அடங்கும். இந்த ஸ்மார்ட்போனின் பிற அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே 44 அங்குல முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே 1,080x2,400 பிக்சல் திரை தெளிவுத்திறன் கொண்டது. இதன் காட்சி AMOLED வடிவமைப்பையும் கொண்டுள்ளது. இந்த வசதி வீடியோ பார்ப்பதற்கும், வீடியோ அழைப்பை மேற்கொள்வதற்கும் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

சுஷாந்த் சிங் தீராத கனவுகள்., இதுதான்!சுஷாந்த் சிங் தீராத கனவுகள்., இதுதான்!

ஸ்னாப்டிராகன் 675 SoC செயலி

ஸ்னாப்டிராகன் 675 SoC செயலி

இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் ஃபண்டூச் ஓஎஸ் 10 ஆதரவுடன் ஆண்ட்ராய்டு 10 ஐ ஆதரவோடு இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது.

பிரதான கேமரா 48 மெகாபிக்சல்

பிரதான கேமரா 48 மெகாபிக்சல்

கேமரா வடிவமைப்பு விவோ வி 19 நியோ ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. பிரதான கேமரா 48 மெகாபிக்சல் சென்சார், இரண்டாவது கேமரா 8 மெகாபிக்சல் சென்சார் வைட்-ஆங்கிள் லென்ஸ், மூன்றாவது கேமரா 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார், நான்காவது கேமரா 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகும். இது 32 மெகாபிக்சல் செல்பி கேமரா அம்சத்தையும் கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் பிற அம்சங்கள்

பேட்டரி மற்றும் பிற அம்சங்கள்

ஸ்மார்ட்போன் 4,500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பேக்கப்பைக் கொண்டுள்ளது மற்றும் 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இரட்டை இணைப்பு வைஃபை, 4 ஜி எல்டிஇ, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை பிற இணைப்பு விருப்பங்களில் அடங்கும். இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் அம்சமும் இதில் உள்ளது.

விலை விவரங்கள்

விலை விவரங்கள்

விவோ வி 19 நியோ ஸ்மார்ட்போனின் விலை PHP 17,999 (சுமார் ரூ .27,200) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் இப்போது அட்மிரல் ப்ளூ மற்றும் கிரிஸ்டல் ஒயிட் வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Vivo V19 neo launched with quad rear camera, price and specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X