Home
Mobile

வேற லெவல் டிசைன்.. Snapdragon சிப்செட்.. 64MP கேமரா.. வருகிறது புதிய விவோ போன். எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது விவோ வி30இ (Vivo V30e) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் விவோ30இ போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் ஒன்று ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

விவோ வி30இ அம்சங்கள் (Vivo V30e specifications): டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ வி30 ஸ்மார்ட்போன். மேலும் வட்டவடிவ கேமரா அமைப்புடன் இந்த புதிய விவோ வி30இ போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

வேற லெவல் டிசைன்.. வருகிறது புதிய விவோ போன். எந்த மாடல்?

குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset) வசதியுடன் இந்த அசத்தலான விவோ வி30இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவோ போன் அறிமுகமாகும்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

OIS ஆதரவு கொண்ட 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி30இ போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

6.71-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான விவோ வி30இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களுடன் இந்த விவோ போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30இ ஸ்மார்ட்போன். குறிப்பாக நாள் முழுவதும் இந்த போன் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி30இ போன். எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் டிசைன்.. வருகிறது புதிய விவோ போன். எந்த மாடல்?

புளூடூத் 5.1, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் BIS சான்றிதழ் தளத்தில் இந்த விவோ வி30இ போன் காணப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.

இதுதவிர விவோ டி3எக்ஸ் 5ஜி எனும் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த விவோ போன் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட், 50எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ரூ.15,000 க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V30e Design Leaked: May Launch in India Soon: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X