ஐபோன் எக்ஸ் மற்றும் கூகுள் பிக்சல் 2 தோற்றது; கேலக்ஸி எஸ்9+ வென்றது; ஏன்.?

டிஎக்ஸ்ஓமார்க் மூலம் செய்யப்பட்ட கேமரா சோதனைகளின்படி, சாம்சங் எஸ்9ப்ளஸ் ஆனது மொத்தம் 104 மதிப்பெண்களை பெற்றுள்ளது. இவரை ஸ்மார்ட்போன் துறையில் பெறப்பட்ட சிறந்த மதிப்பெண் இதுவாகும்.

|

நம்பினால் நம்புங்கள், சமீபத்தில் நிகழ்ந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அறிமுகமான சாம்சங் நிறுவனத்தின் முதன்மை சாதனமான கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஆனது டிஎக்ஸ்ஓமார்க் (DxOMark) மூலம் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன் என தரப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோன் எக்ஸ் மற்றும் கூகுள் பிக்சல் 2 தோற்றது; கேலக்ஸி எஸ்9+ வென்றது.!

இதில் இன்னுமொரு சுவாரசியம் என்னவெனில் இந்த தரப்படுத்தலில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் மற்றும் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 2 ஸ்மார்ட்போன்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

சிறந்த மதிப்பெண்

சிறந்த மதிப்பெண்

டிஎக்ஸ்ஓமார்க் மூலம் செய்யப்பட்ட கேமரா சோதனைகளின்படி, சாம்சங் எஸ்9ப்ளஸ் ஆனது மொத்தம் 104 மதிப்பெண்களை பெற்றுள்ளது. இவரை ஸ்மார்ட்போன் துறையில் பெறப்பட்ட சிறந்த மதிப்பெண் இதுவாகும்.

இருண்ட ஒளி நிலைமைகள்

இருண்ட ஒளி நிலைமைகள்

எனினும், வீடியோ செயல்திறன் அடிப்படையில், கேலக்ஸி எஸ் 9 ப்ளஸ் கேமராவானது 91 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த சோதனையானது பல்வேறு சூழலில் நிகழ்த்தப்பட்ட புகைப்பட சோதனைகளாகும். அதாவது பிரகாசமான ஒளி நிலைமைகள், இருண்ட ஒளி நிலைமைகள் மற்றும் சாதனத்தின் ஃப்ளாஷ் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் ஆகியவனவாகும்.

இந்தியாவில்

இந்தியாவில்

இதே மாதிரியான பரிசோதனையில், கூகுள் பிக்சல் 2 ஆனது 98 ஒட்டுமொத்த மதிப்பெண்களையும் அதனை பின்தொடர்ந்து, ஐபோன் எக்ஸ் ஆனது 97 மதிப்பெண்களும் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆனது மார்ச் 6 ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

ரூ.70,000/-

ரூ.70,000/-

பின்னர் மார்ச் 16 முதல் வாங்க கிடைக்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாறுபாடானது ரூ.62,500/-க்கு ஆரம்பிக்கும், அதேசமயம் 256ஜிபி ஆனது ரூ.71,000/-க்கு வெளியாகலாம். பெரிய மாறுபாடான சாம்சங் கேலக்ஸி எஸ்9+ சமர்ட்போனின் 64 ஜிபி ஆனது ரூ.70,000/-க்கும் மற்றும் உயர் இறுதியில் 256 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.79,000/-க்கும் அறிமுகமாகலாம்.

கிட்டத்தட்ட 1,500 புகைப்படங்கள்

கிட்டத்தட்ட 1,500 புகைப்படங்கள்

டிஎக்ஸ்ஓமார்க்கின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி ஒரே மாதிரியான, பரவலான செயல்முறையைப் பயன்படுத்தி தான் ஸ்மார்ட்போன்களின் புகைப்பட மற்றும் வீடியோ சோதனை நிகழ்த்தப்படும். அதில் 2,500-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் கிட்டத்தட்ட 1,500 புகைப்படங்கள் மற்றும் டஜன் கணக்கான கிளிப்புகள் பரிசோதிக்கப்படும்.

முதன்மை கேமரா

முதன்மை கேமரா

சாம்சங் கேலக்ஸி எஸ்9+ ஆனது தென் கொரிய நிறுவனத்தால் தொடங்கப்பட்ட இரண்டு முக்கிய சாதனங்களில் பெரிய மாதிரியாகும். சிறிய மாதிரியான கேலக்ஸி எஸ்9 ஆனதும் எஸ்9+ கொண்டுள்ள அதே முதன்மை கேமராவைப் பயன்படுத்துகிறது. ஆனால் எஸ்9+ ஸ்மார்ட்போனின் இரண்டாம் நிலை லென்ஸில் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆனது பெக்கே விளைவுக்காக பொருத்தப்பட்டுள்ளது.

டெலிஃபோட்டோ லென்ஸ்

டெலிஃபோட்டோ லென்ஸ்

அதாவது, கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் முதன்மை கேமராவானது 12 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது. இரண்டாம் நிலை 12எம்பி கேமராவானது 2எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸ் ஒரு எப்/ 2.4 துளையுடன் வருகிறது. இந்த இரண்டு லென்ஸ்களுமே ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் திறனை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S9+ beats Pixel 2, iPhone X in DxOMark test, scoring highest ever 104 in photo test. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X