அதிரடியாக ரூ.3500 விலை குறைப்பு.. இனி Samsung Galaxy A53 5G போனின் ரேட் ரொம்ப கம்மி.!

|

பெஸ்ட் ஸ்மார்ட்போன் பிராண்ட் எது என்று உங்களிடம் கேட்டால், உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்? சிலர் OnePlus என்பீர்கள், இன்னும் சிலர் Vivo என்பார்கள், ஆனால், பெரும்பாலானோர் சொல்லக்கூடிய பதில் Samsung என்பது தான். உண்மையிலேயே, சாம்சங் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு நம்பகமான பிராண்டாக திகழ்கிறது. இதற்கான முக்கிய காரணம் தயாரிப்பு தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை தான்.

Samsung Galaxy A53 5G போனின் விலை அதிரடியாக குறைப்பு

Samsung Galaxy A53 5G போனின் விலை அதிரடியாக குறைப்பு

இப்படி ஒரு நம்பகமான பிராண்டில் இருந்து ஒரு புதிய விலை குறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் இப்போது அதனுடைய Samsung Galaxy A53 5G ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 3500 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது. இந்த புதிய விலை குறைப்பிற்குப் பின், இந்த டிவைஸின் விலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Samsung Galaxy A53 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன?

Samsung Galaxy A53 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன?

சாம்சங் அறிவித்துள்ள இந்த புதிய விலைக் குறைப்புக்குப் பிறகு, Samsung Galaxy A53 5G ஸ்மார்ட்போனின் அடிப்படை விலை இப்போது ரூ.31,499 இல் இருந்து தொடங்குகிறது. இந்த போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 34,999 ஆகவும், இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 35,999 ஆகவும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

விலை குறைப்பிற்கு பிறகு இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன?

விலை குறைப்பிற்கு பிறகு இந்த ஸ்மார்ட்போனின் விலை என்ன?

இப்போது, இந்த Samsung Galaxy A53 5G ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ.31,499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 8 ஜிபி ரேம் வேரியண்ட் மாடலின் விலை இப்போது ரூ. 32,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை இப்போது Amazon மற்றும் Samsung.com இல் லைவ் செய்யப்பட்டுள்ளது.

தரமான கிரிஸ்டல் க்ளியர் 120Hz டிஸ்பிளே

தரமான கிரிஸ்டல் க்ளியர் 120Hz டிஸ்பிளே

இந்த டிவைஸ் ஆஸம் பிளாக், ஆஸம் ப்ளூ, ஆஸம் பீச் மற்றும் ஆஸம் வைட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. சரி, இப்போது இந்த விலையில், இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் அளவிற்கு என்ன சிறப்பு இருக்கிறது என்று பார்க்கலாம். Samsung Galaxy A53 5G ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஆனது 120Hz ரெபிரஷ் ரேட் வீதத்துடன் 6.5' இன்ச் கொண்ட முழு HD+ சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி-O டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

1TB வரை எக்ஸ்டரா ஸ்டோரேஜ் அம்சம் இதில் இருக்கா?

1TB வரை எக்ஸ்டரா ஸ்டோரேஜ் அம்சம் இதில் இருக்கா?

இந்த ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் மற்றும் பாதுகாப்பிற்காக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வடன் வருகிறது. இது octa-core Exynos 1280 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் 256ஜிபி வரையில் செல்கிறது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை ஆதரிக்கிறது.

இந்த போனில் கேமரா அம்சம் எப்படி இருக்கு?

இந்த போனில் கேமரா அம்சம் எப்படி இருக்கு?

கேமரா அம்சத்தை பற்றி பேசுகையில், இது குவாட் ரியர் கேமரா அமைப்புடன் 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர், 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் உடன் வருகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக இதன் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

5ஜி உடன் கிடைக்கும் பெஸ்ட் போனா இது?

5ஜி உடன் கிடைக்கும் பெஸ்ட் போனா இது?

கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை ஆதரிக்கிறது. அட்டகாசமான இணைப்பு விருப்பங்களில் இது 5G, 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.1, GPS/ A-GPS மற்றும் USB Type-C போர்ட் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் IP67 சான்றுடன் வருகிறது. இந்த விலையில் 5ஜி இணக்கத்துடன் வாங்கக் கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A53 5G Receives Sudden Price Cut Up To Rs 3500 In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X