சைலண்ட்டா அறிவிப்பை வெளியிட்ட ஒப்போ: இது எல்லாமே ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போனில் இருக்கும்!

|

ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, 48 எம்பி குவாட் கேமராவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சைலண்ட்டா அறிவிப்பை வெளியிட்ட ஒப்போ:ரெனோ 5 லைட்டில் இதுதான் இருக்கும்!

ஒப்போ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக ஒப்போ நிறுவனம் முன்னணிரக அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. அதேபோல் ஒப்போ நிறுவனத்தில் பிரபல தொடராக ரெனோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது.

ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனானது பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.

சைலண்ட்டா அறிவிப்பை வெளியிட்ட ஒப்போ:ரெனோ 5 லைட்டில் இதுதான் இருக்கும்!

ஒப்போ நிறுவனம் அமைதியாக புதிய ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போனை உக்ரேனிய சந்தையில் அறிவித்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது உக்ரைன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது.

ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.43 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் அமைப்போடு 60 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போனானது 90:8 சதவீத டிஸ்ப்ளே டூ உடல் விகிதத்தை கொண்டிருக்கிறது.

ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி95 12 என்எம் செயலி மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு விருப்பங்களோடு இந்த சாதனம் கிடைக்கிறது. அதோடு மெமரி விரிவாக்க வசதிக்கு 256ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கிறது.

சைலண்ட்டா அறிவிப்பை வெளியிட்ட ஒப்போ:ரெனோ 5 லைட்டில் இதுதான் இருக்கும்!

ஒப்போ ரெனோ 5 லைட் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார், 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் அம்சத்தோடு வருகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் முதன்மை செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4310 எம்ஏஎச் பேட்டரி அம்சமும் 30 வாட்ஸ் வூக் வேகமான சார்ஜிங் அம்சமும் இருக்கிறது. இந்த ஸ்மர்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 11 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இணைப்பு அம்சங்கள் குறித்து பார்க்கையில் 5ஜி வோல்ட் இ, இரட்டை 4ஜி, வோல்ட்இ, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவை அடங்கும்.

Best Mobiles in India

English summary
Oppo Announced its Reno 5 Lite Smartphone With 8GB RAM, 128GB Storage

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X