Home
Mobile

அவ்ளோதானா.. சேல் பிச்சிக்குமே.. SONY கேமரா.. 67W சார்ஜிங்.. 32MP செல்பீ.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய கேமரா பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக ஓம்னிவிஷன் மற்றும் சோனி சென்சார்கள் கொண்ட ஓப்போ எப்25 ப்ரோ 5ஜி (OPPO F25 Pro 5G) போனானது, பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. இப்போது, விலை விவரங்கள் கசிந்து மார்கெட்டையே அறக்க பறக்க செய்துள்ளது.

இந்த ஓப்போ எப்25 ப்ரோ போனானது, வரும் பிப்ரவரி 29ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது. இதனால், அந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் மார்கெட்டில் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. முன்னதாக டிஸ்பிளே, கேமரா, பேட்டரி போன்ற அம்சங்கள் வெளியாகி அந்த போனுக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

சேல் பிச்சிக்குமே.. SONY கேமரா.. 67W சார்ஜிங்.. 32MP செல்பீ மாடல்!

இப்போது, விலை விவரங்களும் அப்படியே மிரள விட்டுள்ளது. இந்த ஓப்போ எப்25 ப்ரோ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலைக்கு சோனி மற்றும் ஓம்னிவிஷன் சென்சார்கள் மட்டுமல்லாமல், டைமன்சிட்டி 7050 சிப்செட், கலர்ஓஎஸ் 14 மற்றும் அல்ட்ரா பிரீமியம் டிசைன் போன்ற பல்வேறு பீச்சர்களை இந்த போன் கொண்டிருப்பதால், எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இப்போது, கசிந்த முழு அம்சங்களையும் பார்ப்போம்.

ஓப்போ எப்25 ப்ரோ அம்சங்கள் (OPPO F25 Pro Specifications): ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7050 6nm) சிப்செட் வருகிறது. மாலி-ஜி68 எம்சி4 ஜிபியு (Mali G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டிருக்கிறது.

ஓப்போவின் லேட்டஸ்ட் கலர்ஓஎஸ் 14 (ColorOS 14) வருகிறது. 64 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி64பி (OmniVision OV64B) சென்சார் வருகிறது.

இந்த கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஏஐ ஸ்மார்ட் இமேஜ் (AI Smart Image) பீச்சர் வருகிறது. அதேபோல 32 எம்பி செல்பீ கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்615 (Sony IMX615) சென்சாருடன் வருகிறது. 6.7 இன்ச் (2412 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது.

இதுவொரு அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. டிஸ்பிளேவுக்கு பாண்டா கிளாஸ் (Panda Glass) பாதுகாப்பு வருகிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கொண்டுள்ளது. 67W சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 7.54 மிமீ தடிமன் மற்றும் 177 கிராம் எடை கொண்டுள்ளது.

இந்த ஓப்போ எப்25 ப்ரோ போனானது, லாவா ரெட் (Lava Red) மற்றும் ப்ளூ (Bule)கலரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுவொரு 5ஜி வேரியண்ட்டாகும். இந்த போன் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அறிமுக சலுகையில் மேலும் கம்மியான விலைக்கு விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo F25 Pro 5G Price Tipped Under Rs 25000 Ahead February 29 India Launch Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X