ரூ.10,000 பட்ஜெட் செக்மென்ட்டில் புதிய ஒன்பிளஸ் போன்! இந்த அம்சங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்!

|

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஜெட் விலை சாதனங்களை அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் பெரும்பாலும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கே மவுசு அதிகமாக இருக்கிறது. இதைக் கவனித்த ஒன்பிளஸ் நிறுவனம் தற்பொழுது மிட்ரேஞ் செக்மென்ட்டில் இருந்து இன்னொரு படி கீழ் இறங்கி பட்ஜெட் செக்மென்ட்டிற்குள் கால் பதிக்கத் தயாராகிவிட்டது.

மலிவான விலையில் ஸ்மார்ட்போன்

சமீபத்தில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிராண்டின் கீழ் மலிவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல் என்று ஒன்பிளஸ் நோர்ட் சாதனத்தைக் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. அதற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து இன்னும் குறைவான விலையில் புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை வெளியிட நிறுவனம் தற்பொழுது தயாராகிவிட்டது.

உங்களுடைய கேள்வி?

ஒன்பிளஸ் நோர்ட் இந்திய சந்தையில் வெறும் ரூ.14,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது அதைவிட குறைந்த விலையில் புதிதாக ஒன்பிளஸ் க்ளோவர் என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. அதைவிட குறைந்த விலையில் என்றால் என்ன விலையாக இருக்க கூடும் என்பது தானே உங்களுடைய கேள்வி? நிச்சயமாக நீங்கள் எதிர்ப்பார்த்திடாத விலையில் தான் வரப்போகிறது. பதிலைச் நங்கள் சொல்கிறோம்.

13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்! என்ன ஆப் தெரியுமா?13 வயது மாணவன் உருவாக்கிய ஆப்ஸ்-க்கு கூகிள் 28 ஆண்டு ஒப்பந்தம்! என்ன ஆப் தெரியுமா?

ரூ.10,000

ஒன்பிளஸ் க்ளோவர் பற்றி வெளியாகியுள்ள தகவலை வைத்து பார்க்கையில் இந்த புதிய ஸ்மார்ட்போன் ரூ.10,000 என்ற விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய அளவில் ஸ்பெஷல் அம்சங்கள் இதில் இருக்காது என்றாலும் கூட மலிவு விலை ஸ்மார்ட்போன் பிரிவில் தேவைப்படும் அணைத்து அம்சங்களும் இதில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில அம்சங்கள் வெளியாகியுள்ளது, அவற்றை இப்பொழுது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் க்ளோவர்

ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போன் 6.52' இன்ச் கொண்ட 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் உடைய ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேயுடன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் உடன் ட்ரிபிள் கேமரா அமைப்புடன் வரும் என்று கூறப்படுகிறது. நினைவகத்தைப் பொறுத்தவரை, இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்புடன் வரும், முதல் முறையாக இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக விரிவாக்கக் கூடிய ஸ்டோரேஜ் விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!

ஒன்பிளஸ் 8T

ஒன்பிளஸ் நிறுவனம் அடுத்து வெளியிடவிருக்கும் ஒன்பிளஸ் 8T ஸ்மார்ட்போனுடன் இந்த புதிய ஒன்பிளஸ் க்ளோவர் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டால் இது நேரடியாக சியோமி, ரியல்மி போன்ற நிறுவனங்களின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுடன் நேரடி போட்டியில் களமிறங்கும் என்று கூறப்படுகிறது. ஒன்பிளஸ் இத்துடன் புதிய ஒன்பிளஸ் வாட்ச் சாதனத்தையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus Clover with Qualcomm Snapdragon 460 SoC, 13MP triple camera setup to launch soon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X