நோக்கியா 8 : வெளியீட்டுக்கு முன்பே ஆன்லைனில் விற்பனைக்கு வந்தது.!

Written By:

திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே திருட்டு விசிடி-யில் வெளியாவது போல அறிமுகம் செய்து, வெளியாகும் முன்பே நோக்கியா 8 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது ஆன்லைன் வலைத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது ஸ்மார்ட்போன் சந்தை உலகில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நோக்கியா பிராண்ட் நிறுவனத்தின் என்னென்ன ஆண்ட்ராய்டு கருவிகள் எப்போது வெளியாகலாம் என்ற தகவல்களும் மற்றும் ஸ்மார்ட்போன் சார்ந்த லீக்ஸ் மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் ஆகிய தகவல்களும் இப்போதுதான் மெல்ல மெல்ல வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
நோக்கியா 8

நோக்கியா 8

நோக்கியா 8 என்ற புதிய நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது முழு அம்சங்கள் சார்ந்த குறிப்புகளுடன் சீன இ-காமர்ஸ் இணையதளம் ஒன்றில் முன்பதிவுக்கு வந்துள்ளது. முன்பதிவுக்கு வந்துள்ள இக்கருவி இன்னும் அறிமுகம் கூட செய்யப்படாத ஒரு நோக்கியா ஸ்மார்ட் போன் என்பது குறிப்பிடத்தக்கது.

பெஸல்கள்

பெஸல்கள்

ஆன்லைன் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள படங்களை வைத்து பார்க்கும் போது நோக்கியா 8 அக்கருவி மிகவும் குறைந்த அளவிலான பெஸல்கள் கொண்ட டிஸ்ப்ளே கொண்ட ஒரு ஸ்மார்ட்போனாக காட்சியளிக்கிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

அம்சங்கள் சார்ந்த விளக்கத்தின் கீழ், நோக்கியா 8 கருவியானது சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்ட ஒரு 5.7-அங்குல க்யூஎச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கேமரா

கேமரா

மேலும் இந்த கைபேசியில் ஒரு 12 மெகாபிக்சல் முன்பக்க கேமரா இணைந்த ஒரு 24 மெகாபிக்சல் பின்புற கேமராவும் இடம்பெறும் என்கிறது அம்சங்கள் சார்ந்த குறிப்புகள்.

சேமிப்பு

சேமிப்பு

64ஜிபி மற்றும் 128ஜிபி என இரண்டு சேமிப்பு பதிப்புகளில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நோக்கியா 8 கருவியின் இரு மாதிரிகளிலுமே இரண்டு மைக்ரோ அட்டை ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவும் வழங்கப்படும்.

நிச்சயமாக வெளியாகும்

நிச்சயமாக வெளியாகும்

பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வு இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்கபப்டவுள்ள நிலையில் நிகழ்வில் நோக்கியா 8 கருவி நிச்சயமாக வெளியாகும் என்பதை இந்த இ-காமர்ஸ் வலைத்தளம் உறுதி செய்து முன்பதிவையே ஆரம்பித்துவிட்டது. துரதிருஷ்டவசமாக, இதுவொரு நோக்கியா 8 கருவிதான் என்று நம்பகத்தன்மையுடன் உறுதிப்படுத்துவது கடினம்.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் என்று இந்த கருவியுடன் நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா பி1 வரிசை கருவிகள், நோக்கியா 3, நோக்கியா 5. நோக்கியா 6 உடன் முக்கியமாக நோக்கியாவின் கிளாஸிக் மாடலான நோக்கிய 3310ஆகிய கருவிகள் நிகழப்போகும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

விலை

கூறப்படும் இந்த நோக்கியா 8 கருவியானது, சுமார் ரூ. 31,000/- என்ற விலை நிர்ணயத்தில் இப்பொழுது சீனாவின் ஜேடி.காம் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

விரைவில் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 (விலை, அம்சங்கள்).!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Nokia 8 Android Smartphone Listed Online Ahead of Launch. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot