ஆற்றல் வாய்ந்த 1,700 எம்ஏஎச் பேட்டரியுடன் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
ஆற்றல் வாய்ந்த 1,700 எம்ஏஎச் பேட்டரியுடன் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!
சிறந்த எலக்ட்ரானிக் சாதன பொருட்களை கொடுக்கும் இந்த எல்ஜி நிறுவனம், லுசிட் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதியையும் கூறியுள்ளது எல்ஜி. அதற்கு முன்பு இந்த ஸ்மார்ட்போனில் உள்ள தொழில் நுட்ப விவரத்தினை பார்ப்போம்.

4 இஞ்ச் அகன்ற திரையில் தேவையான தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதனால் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியமும் கிடைக்கும். ஐபிஎஸ் எல்சிடி திரை தொழில் நுட்பம் கொண்ட இந்த திரை, தொடுதிரை வசதியினை வழங்கும்.

நவீன வகை மொபைல்களையும், ஸ்மார்ட்போன்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்பது பலரது ஆசை தான். அதே சமயம் அந்த ஸ்மார்ட்போன்களில் உள்ள தொழில் நுட்பம் பயன்படுத்தவும் எளிதாக இருக்குமா? என்பதும் பலரது கவலையாக உள்ளது. இந்த எல்ஜி லுசிட் 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையில்

உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன். அதுவும் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்.

இந்த இயங்குதளம் இயங்க 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரையும் வழங்கும். 1080 பிக்ஸல் துல்லியத்தில் வீடியோவினை கொடுக்கும் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் மற்றும் முகப்பு கேமராவினையும் கொடுக்கும்.

இதனால் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். அதிகபட்சம் 8ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை தருவதோடு, 32ஜிபி வரை இதன் எக்ஸ்டர்னல் மெமரியினை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.

இதன் பேட்டரியின் ஆற்றல் நிச்சயம் ஆனந்தத்தை ஏற்படுத்தும். ஸ்டான்டர்டு லித்தியம் அயான் 1,700 எம்ஏஎச் பேட்டரி சிறந்த தொழில் நுட்பத்தினை பெற உதவும் வகையில் நீடித்து உழைக்கும். இதன் விலை இன்னும் வெளியாகவில்லை என்றாலும், வாடிக்கையாளர்களை கவரும் விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் வருகிற 29-ஆம் தேதி வெளியாக உள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்