உலகின் முதல் டிரான்ஸ்பரென்ட் TV.. LG ரிலீஸ் செய்யும் புது வகை ஸ்மார்ட் டிவி.. கண்ணாடியில் வீடியோ காட்சி..
உலகத்தின் முதல் டிரான்ஸ்பரென்ட் ஸ்மார்ட் டிவி (World's first transparent smart TV) சாதனத்தை எல்ஜி (LG) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கண்ணாடி போன்ற அமைப்பில் புது ஸ்மார்ட் டிவி (Smart TV) சாதனமா? இது எப்படி இயங்கும்?
எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உலகத்தின் முதல் வயர்லெஸ் டிரான்ஸ்பரென்ட் டிவியை வெளியிட்டது. இது ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு (OLED) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது எல்ஜி சிக்னேச்சர் OLED TV (LG Signature OLED TV) என்ற பெயருடன் வருகிறது. இது ஒரு வயர்லெஸ் AV டிரான்ஸ்மிஷன் மற்றும் ரிஸப்ஷன் உடன் வெளிப்படையான OLED தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இது பார்வையாளர்களை டிவி டிஸ்பிளேவுக்கு அப்பால் பார்க்க அனுமதிக்கிறது. இந்த திரையைச் சுற்றி தெரியும் வயர் தேவையை இந்த ஸ்மார்ட் டிவி ஒட்டுமொத்தமாக நீக்கியுள்ளது. இதுவொரு புதுமாதிரியான ஸ்மார்ட் டிவி என்று எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (LG Electronics) நிறுவனம் கூறியுள்ளது. இது டிவியின் செல்ஃப்-லைட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் இயங்குகிறது.
எல்ஜி சிக்னேச்சர் OLED டிரான்ஸ்பரென்ட் TV (LG Signature OLED Transparent TV):
இது அல்ட்ரா ஸ்லிம் டிஸ்பிளேவுடன் மிகவும் தரமான வீடியோ கட்சியை வழங்குகிறது. இந்த டிரான்ஸ்பரென்ட் ஸ்மார்ட் டிவியில் வரும் படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த ஸ்மார்ட்டிவி வயர்லெஸ் டிவி என்று அழைக்கப்படுகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த டிவியை உங்களுடைய வீட்டின் அறைகளுக்குள் எங்குவேண்டுமானாலும் சுதந்திரமாக நகர்த்த முடியும் என்று எல்ஜி குறிப்பிட்டுள்ளது.
இது ஜன்னல் அல்லது ஹால், கிட்சன் என்று எந்த அறையில் வேண்டுமானாலும் நீங்கள் இந்த டிவியை நகரத்து உங்களுக்கு விருப்பமான படங்களை பார்த்து மகிழலாம். இதன் வெளிப்படையான டிஸ்பிளே மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பம் உண்மையில் புதிய ஸ்மார்ட் டிவி அனுபவதற்கு வழங்குகிறது. இந்த எல்ஜி சிக்னேச்சர் OLED TV (LG Signature OLED TV) இரண்டு வகையான டிஸ்பிளே திறனை வழங்குகிறது.

இது டிரான்ஸ்பரென்ட் (Transparent) மற்றும் பிளாக் (Black) என்று இரண்டு மோட் அம்சங்களை ஆதரிக்கிறது. நாம் முன்பே சொன்னது போல, டிரான்ஸ்பரென்ட் மோடில் இந்த டிவி கண்ணாடி போன்ற திரையில், வீடியோக்களை பிரதிபலிக்கிறது. அதேபோல், பிளாக் மோடில், இந்த ஸ்மார்ட் டிவி கருப்பு நிற திரையை டிவியின் பின்பக்கத்தில் லிப்ட் செய்கிறது.
எல்ஜி சிக்னேச்சர் OLED TV சிறப்பம்சம் (LG Signature OLED TV Specifications):
இதை செய்ய, நீங்கள் எல்ஜி சிக்னேச்சர் OLED TV (LG Signature OLED TV) ரிமோட்டில் உள்ள ஒற்றை பட்டன் கண்ட்ரோலை பிரஸ் செய்தால் போதும். இந்த ஸ்மார்ட் டிவி ஆல்பா 11 ஏஐ பிராசஸர் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி வெப்ஓஎஸ் (webOS) ஸ்மார்ட் டிவி ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வருகிறது. சாதாரண ஸ்மார்ட் டிவிகள் போல இல்லாமல், இந்த ஒரு டிரான்ஸ்பரென்ட் ஸ்மார்ட் டிவி என்பதனால், இது 4 மடங்கு அதிக திறனை கொண்டுள்ளது.
ஆல்பா 11 பிராசஸர், பிக்சல்-பெர்ஃபெக்ட் விவரங்களில் காட்சிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் படத்தின் தரத்தை 4 மடங்கு இது மேம்படுத்துகிறது. இது டிரான்ஸ்பரென்ட் மோடில் சிறந்த ஒலியுடன் கூடிய வீடியோ அனுபவத்தை வழங்குகிறது. எல்ஜி சிக்னேச்சர் ஓஎல்இடி டிவி இந்த ஆண்டின் பிற்பகுதியில் உலக சந்தையில் வரும் என்று எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. இதன் விலை பற்றிய விபரங்களை நிறுவனம் CES 2024 நிகழ்வில் வெளியிடும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








