சூட்கேஸ் டிவி.. மடிச்சு வெச்சுக்கலாம்.. பேட்டரி போதும்.. எலக்ட்ரிசிட்டி வேண்டாம்.. என்ன மாடல்?
தமிழ்நாட்டில் எளிதாக எடுத்து செல்லக்கூடிய பொருட்களை பார்த்தால், "அப்படியே மடிச்சு தூக்கிட்டு போகலாம்" என்று சொல்லும் வழக்கம் இருக்கிறது. அதற்கேற்ப, நமது வீட்டில் இருக்கும் டிவியை கச்சிதமாக மடித்து எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று, அதை பயன்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்?
இப்போதெல்லாம், டிவிகளில்லாத வீடுகளை பார்க்க முடிவதில்லை. அந்தந்த வீடுகளின் வசதிக்கு ஏற்ப டிவிகளின் அளவுகளிலும், விலைகளிலும் மாற்றம் இருக்குமே தவிர, டிவி என்றவொன்று இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு டிவிகள் மக்களிடையே பின்னிப்பிணைந்து விட்டது. இவர்களில், பலருக்கு வீட்டில் டிவி பார்ப்பதைவிட பேருந்து, கார் போன்று வெட்டவெளியில் செல்லும்போது பார்க்க பிடிக்கும்.

இதுபோன்ற ரசனை கொண்ட மக்களை வளைத்து போடும் விதமாக எல்ஜி (LG) நிறுவனம், அட்டகாசமான டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவியை இரண்டாக மடித்து, எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று பயன்படுத்தலாம். இதற்கு எலக்ட்ரிசிட்டி தேவையில்லை. இன்டர்நெட் இருந்தால் மட்டுமே போதும்.
அதுமட்டுமல்லாமல், இந்த டிவி சூட்கேஸ் உடன் வருவதால், பாதுகாப்பாக எடுத்து செல்வதும் மிக மிக சுலபம். அதோடு பேட்டரியும் கொடுக்கப்படுவதால், சார்ஜ் செய்துகொண்டு எப்போது வேண்டுமானாலும் டிவி பார்க்கலாம். இப்படி பல்வேறு அம்சங்களை கொண்ட இந்த டிவியின் விலை, விற்பனை விவரம் பின்வருமாறு.
எல்ஜி ஸ்டான்பைமீ கோ அம்சங்கள் (LG StanbyME Go Specifications): இந்த டிவி 27 இன்ச் (1,920 x 1,080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1080P ரெசொலூஷன் வருகிறது.
இதில், ஆப்பிள் டிவி (Apple TV), டிஸ்னி பிளஸ் (Disney+), ஹுலு (Hulu), நெட்பிளிக்ஸ் (Netflix), பீகாக் (Peacock), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), யூடியூப் (Youtube), மேக்ஸ் (Max), பாரமவுண்ட் பிளஸ் (Paramount+) போன்ற ஓடிடி தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லால் 300+ லைவ் டிவி சேனல்களை இலவசமாக பார்த்துக்கொள்ள முடியும். இதற்கு இன்டர்நெட் கனெக்டிவிட்டி மட்டும் இருந்தால் போதும். அதோடு எல்ஜி கன்டென்ட் ஸ்டோர் (LG Content Store) வருகிறது. இந்த எல்ஜி ஸ்டான்பைமீ கோ டிவியில் வெப் ஓஎஸ் (webOS) கொண்ட ஏ7 ஏஐ பிராசஸர் ஜென் 5 (a7 AI Processor Gen5) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டிவியை வாய்ஸ் கன்ட்ரோல் (Voice Controls) மூலம் கட்டுப்படுத்தலாம். ஹோம் டாஸ்போர்ட் (Home Dashboard) கொடுக்கப்பட்டுள்ளது. 20W ஸ்பீக்கர்கள் வருகின்றன. இந்த ஸ்பீக்கரில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ப்ளூடூத் மூலம் கூடுதலாக ஸ்பீக்கர்கள், ஹெட்போன்களை கனெக்ட் செய்து கொள்ள முடியும்.
இந்த டிவியில் 1 எச்டிஎம்ஐ போர்ட், எச்டிஎம்ஐ சிம்ப்லிங் (Simplink), ஐபி கன்ட்ரோல் (IP Control, வை-பை 5 சப்போர்ட் உள்ளது. இதுவொரு ஸ்மார்ட் ஸ்கிரீன் என்பதால், ஸ்கிரீன் மிரர்ரிங் (Screen Mirroring) மற்றும் ஆப்பிள் ஏர் பிளே (Apple AirPlay) கனெக்டிவிட்டி வருகிறது.
இதுவொரு வயர்லெஸ் டிவியாகும். ஆகவே, இன்பில்ட் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கும். இந்த டிவியை 90 டிரிகி வரையில் ரோட்டேட் செய்து கொள்ள முடியும். அதாவது, போனின் ஸ்கிரீனை ரோட்டேட் செய்வது போல செய்து கொள்ளலாம்.
ஒரு முழு படத்தை பிக்னிக் சென்ற இடத்திலோ, மொட்டை மாடியிலோ, பீச்சிலோ என்று எங்கு வேண்டுமானலும், எந்தவித இடையூறுமின்ற பார்த்துக்கொள்ள முடியும். இந்த டிவியின் விலை ரூ.83,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த சில மாதங்களில், இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








