Home
News

என்னது ரூ.17,500 தள்ளுபடியா! ஷாக் அடிக்கும் ஆஃபர் விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் TVகள்.. என்னென்ன மாடல்கள்?

43-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் டிவிகளை வைக்கும் அளவிற்கு வீட்டில் பெரிய இடமில்லை என்றாலும் சரி.. அல்லது ஒரு டிவிக்காக பெரிய அளவில் பணம் செலவு செய்ய தயாராக இல்லை என்றாலும் சரி.. உங்களுக்கான ஒரே ஆப்ஷன் 32-இன்ச் டிவி தான்!

இப்படியாக, நீங்கள் ஒரு நல்ல 32-இன்ச் ஸ்மார்ட் டிவியையு தேடுகிறீர்கள் என்றால், அமேசான் (Amazon) வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் (Great Indian Festival Sale) போது நீங்கள் தவறவிடவே கூடாத 5 ஸ்மார்ட் டிவி ஆஃபர்களின் பட்டியல் இதோ:

ஷாக் அடிக்கும் ஆஃபர் விலையில் 32-இன்ச் ஸ்மார்ட் TVகள்!

01. ரெட்மி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி (Redmi 32-inch HD Ready Smart LED Fire TV): ரெட்மி நிறுவனத்தின் இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவியானது அமேசான் விற்பனையின் போது ரூ.15,000 தள்ளுபடியை பெற்று ரூ.24,999 க்கு பதிலாக ரூ.9999 க்கு வாங்க கிடைக்கிறது!

ரெட்மி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவியின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மெட்டல் பெஸல்லெஸ் டிஸைன், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, டால்பி ஆடியோவுடன் 20W ஸ்பீக்கர்ஸ், ப்ரைம் வீடியோ, நெட்பி;ளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூட்யூப் போன்ற ஆப்களுக்கான ஆதரவு, அலெக்சா ஆதரவுடனான டிவி ரிமோட் போன்றவைகளை கொண்டுள்ளது.

02. சாம்சங் 32-இன்ச் வொண்டர்டெயின்மெண்ட் சீரீஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி (Samsung 32-inch Wondertainment Series HD Ready LED Smart TV): இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ.22900 ஆகும். இருப்பினும் இது அமேசானில் தற்போது ரூ.11,990 க்கு வாங்க கிடைக்கிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 1366 x 768பி ரெசல்யூஷன் எச்டி ரெடி எல்இடி டிஸ்பிளே, டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவுடன் 20W ஸ்பீக்கர்ஸ், பில்ட்-இன் வைஃபை, ஸ்மார்ட்திங்ஸ் ஆப்பிற்கான இணக்கத்தன்மை, ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவை டிவியில் ஷேர் செய்ய அனுமதிக்கும் லைவ் காஸ்ட் அம்சம் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

03. எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 32-inch HD Ready Smart LED TV): எல்ஜி நிறுவனத்தின் இந்த 32-இன்ச் டிவியின் அசல் விலை ரூ.30900 ஆகும். இருப்பினும் நிகழும் அமேசான் விற்பனையின் போது முழுதாக ரூ.17,500 தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.13,490 க்கு வாங்க கிடைக்கிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது குவாட்-கோர் ப்ராசஸர், ஸ்மார்ட் ஹோம் டிவைஸ்களை ஒரே விண்டோவில் கட்டுப்படுத்த அனுமதிக்கும் ஹோம் டேஷ்போர்ட் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டிடிஎஸ் விர்ச்சுவல்: எக்ஸ் ஆதரவு உடனான 20W ஸ்பீக்கர்ஸ், ஸ்கிரீன் மிரரிங், மினி டிவி ப்ரவுஸர், ஆபிஸ் 365 போன்றவைகளை கொண்டுள்ளது.

04. எம்ஐ 32-இன்ச் 5ஏ சீரிஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (MI 32-inch 5A Series HD Ready Smart Android LED TV): இந்த எம்ஐ ஸ்மார்ட் டிவியின் அசல் விலை நிர்ணயம் ரூ.24,990 ஆகு, இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ.14009 தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.10990 க்கு வாங்க கிடைக்கிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 1366 x 768பி ரெசல்யூஷன் மற்றும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, டால்பி ஆடியோ உடனான 24W சவுண்ட் அவுட்புட், ஆண்ட்ராய்டு டிவி 11 ஓஎஸ், 300+ லைவ் சேனல்கள், பேரன்ட் லாக் உடன் கிட்ஸ் மோட், கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு, பிளே ஸ்டோரில் இருந்து 5000க்கும் மேற்பட்ட ஆப்ஸ், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், டூயல்-பேண்ட் வைஃபை போன்றவைகளை கொண்டுள்ளது.

05. ஏசர் 32-இன்ச் அட்வான்ஸ்டு சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Acer 32-inch Advanced Series HD Ready Smart LED Google TV): அமேசான் விற்பனையின் இந்த ஸ்மார்ட் டிவி ரூ.10500 தள்ளுபடியை பெற்று ரூ.10499 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த டிவியின் அசல் விலை ரூ.20,999 ஆகும்.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 1366 x 768பி ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வைட் ஆங்கிள் டிஸ்பிளே, டால்பி ஆடியோ ஆதரவுடன் பெரிய 30W சவுண்ட் அவுட்புட், கூகுள் டிவி இன்டெக்ரேஷன், கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு, பில்ட்-இன் குரோம்காஸ்ட், வாய்ஸ்-எனேபிள்டு ஸ்மார்ட் ரிமோட், டூயல்-பேண்ட் வைஃபை போன்றவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For 32 inch Smart TV Check Out Best Deals on Amazon Great Indian Festival Sale 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X