Home
Gadgets

குவாண்டம் நானோசெல் டெக்.. நெக்ஸ்ட் ஜெனரேஷன் எல்இடி.. மிரளவிடும் எல்ஜி கியூஎன்இடி 83 சீரிஸ்.. என்ன விலை?

ஒட்டுமொத்த டிவி அனுபவத்தையும் அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் விதமாக குவாண்டம் நானோசெல் டிஸ்பிளே (Quantum NanoCell Display) கொண்ட கியூஎன்இடி 83 சீரிஸ் (QNED 83 Series) டிவிகளை எல்ஜி (LG) நிறுவனம் களமிறக்கி இருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இந்தியாவின் முன்னணி டிவி பிராண்டான எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமானது, எல்இடி டிவிகளின் அடுத்த தலைமுறை டெக்னாலஜிகள் கொண்டிருக்கும் எல்ஜி க்யூஎன்இடி (எல்ஜி குவாண்டம் நானோசெல் டிஸ்பிளே) கொண்ட 83 சீரிஸ் டிவிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவை டிஸ்பிளே ரியாலிட்டி மற்றும் கிளாரிட்டியில் ஸ்டாண்டர்ட் அனுபவத்தை தரக்கூடியவை.

நெக்ஸ்ட் ஜெனரேஷன் எல்இடி.. மிரளவிடும் எல்ஜி கியூஎன்இடி 83 சீரிஸ்!

குவாண்டம் டாட் மற்றும் நானோசெல் தொழில்நுட்பங்களானது, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), ஏஐ சூப்பர் அப்ஸ்கேலிங் (AI Super Upscaling), லோக்கல் டிம்மிங் (Local Dimming) மற்றும் கேமிங் கேபபிலிட்டிகளை (Gaming Capabilities) மறுவரையறை செய்து ஹோம் எண்டர்டெயின்மென்ட்டை மேம்படுத்துகிறது.

எல்ஜி கியூஎன்இடி 83 சீரிஸ் டிவி அம்சங்கள் (LG QNED 83 Series TV Specifications): 4K ரெசொலூஷனின் கலரிங் அனுபவத்தை மேம்படுத்த குவாண்டம் டாட் மற்றும் நானோசெல் பியூசன் டெக்னாலஜி வருகிறது. ஏ7 ஜென்6 ஏஐ 4கே (α7 Gen6 AI 4K) சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவொரு ப்ரோ லெவல் சிப்செட்டாகும். டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த டிவிகளில் ஸ்மார்ட் டிம்மிங் டெக்னாலஜி (Smart Dimming Technology) பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை லைட்டிங்களுக்கு ஏற்ப ஷார்ப் மற்றும் நேச்சுரல் வீடியோ அவுட்புட்டை கொடுக்கக்கூடியது. அதேபோல ஏஐ பிக்சர் ப்ரோ (AI Picture Pro) மற்றும் ஏஐ சவுண்ட் ப்ரோ (AI Sound Pro) டெக்னாலஜிகள் வருகின்றன.

நெக்ஸ்ட் ஜெனரேஷன் எல்இடி.. மிரளவிடும் எல்ஜி கியூஎன்இடி 83 சீரிஸ்!

இது விர்ச்சுவல் 5.1.2 (Virtual 5.1.2) சப்போர்ட் மூலமாக சரவுண்ட் சவுண்ட்டிங் அனுபவத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லக்கூடியது. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் ரியல் லைஃப் ஆடியோவை பெற்று கொள்ளலாம். இந்த எல்ஜி கியூஎன்இடி 83 சீரிஸ் டிவிகளில் கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக பல்வேறு டெக்னாலஜிகள் இருக்கின்றன.

ஆகவே, கேம் டாஸ்போர்ட் (Game Dashboard) மற்றும் ஆப்டிமைசர் (Optimizer), ஏடிஎம் ஃப்ரீசிங்க் (AMD FreeSync) மற்றும் விஆர்ஆர் (VRR) சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருவதால், கேமிங் அனுபவம் லேட்டன்சி இல்லாமல் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும். இந்த டிவிகளில் வெப்ஓஎஸ் (webOS) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டமானது, நெட்பிளிக்ஸ் (Netflix), ஆப்பிள் டிவிபிளஸ் (Apple TV+), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), பிரைம்வீடியோ (Prime Video) போன்ற டிவிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஓடிடி ஆப்கள் முதல் இதர கனெக்டிவிட்டி ஆப்கள் வரையில் சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

நெக்ஸ்ட் ஜெனரேஷன் எல்இடி.. மிரளவிடும் எல்ஜி கியூஎன்இடி 83 சீரிஸ்!

இந்த எல்ஜி கியூஎன்இடி 83 சீரிஸ் டிவிகளில் மல்டி வியூ (Multi View) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் கேமராக்களில் வரும் டூயல் வியூ போலவே, 2 இன்புட் மோட்களை பயன்படுத்தி ஒரே டிஸ்பிளேவை சைடு-பை-சைடு (side-by-side) ஆக பிரித்து 2 கன்டென்ட்டுகளை பார்த்து கொள்ளலாம். ஒருபக்கம் ஓடிடி மறுபக்கம் லைவ் டிவி என்று பயன்படுத்தலாம்.

இந்த டிவிகளில் குயிக் கார்ட்ஸ் (Quick Cards), பிக்சர் விஷார்ட் (Picture Wizard), தின்கியூ ஏஐ (ThinQ AI) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Assistant), அமேசான் அலெக்சா (Amazon Alexa), ஆப்பிள் ஏர்பிளே2 (Apple Airplay2) போன்ற பீச்சர்கள் வருகின்றன. இதன் மற்ற அம்சங்கள் பிரீமியம் எல்இடி டிவிகளில் வருவதை போலவே இருக்கிறது.

இந்த எல்ஜி கியூஎன்இடி 83 சீரிஸில் 55 இன்ச் டிவியின் விலை ரூ.1,59,990ஆக இருக்கிறது. அதேபோல 65 இன்ச் டிவியின் விலை ரூ.2,19,990ஆக இருக்கிறது. எல்ஜி வெப்சைட், எல்ஜி ஷோரூம்கள் மற்றும் ரீடெயில் பார்ட்னர்களான குரோமா (Croma), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) உள்ளிட்டவற்றில் விற்பனைக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG QNED 83 Series LED TVs With Quantum Dot NanoCell Tech Announced in India Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X