கேட்டாலே தலைச்சுற்றும் விலை.. ஆனால், ஆர்டர் குவியுது.. மிரட்டும் எல்ஜி அல்ட்ராகியர் கேமிங் மானிட்டர்!
எல்ஜி (LG) நிறுவனத்தின் எல்ஜி அல்ட்ராகியர் ஓஎல்இடி கர்வ்ட் கேமிங் மானிட்டர் (LG UltraGear OLED Curved Gaming Monitor) பிரம்மாண்டமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மானிட்டரின் விலையை கேட்டால், பலருக்கு தலையே சுற்றிவிடும். இதுகுறித்த முழு விவரம் இதோ.
ஒரு கேமிங் மானிட்டர் வாங்கும் விலையில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மூன்று ஆண்ட்ராய்டு டிவி வாங்கிவிடலாம் என்று சொன்னால், உங்களால் நம்ப முடிகிறதா?. இப்போதெல்லாம் கேமிங் டிவைஸ்களுக்கான வரவேற்பு மிகப்பெரும் அளவில் இருக்கிறது. வீட்டில் இருந்தபடியே வேறு உலகத்துக்கே கூட்டிச்செல்லும் படியான அம்சங்களை கேமிங் டிவைஸ்கள் கொடுக்கின்றன.

இதனால், அவற்றின் விலையும் கேட்டாலே தலைச்சுற்றும்படியே நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வரிசையில், எல்ஜி நிறுவனத்தின் எல்ஜி அல்ட்ராகியர் ஓஎல்இடி கர்வ்ட் கேமிங் மானிட்டர் ரூ.1.5 லட்சத்துக்கும் அதிமான விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இவ்வளவு விலை கொடுத்து யார் வாங்குவார்கள் என்று கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதில் இருக்கும் அம்சங்களை பார்த்த கேமிங் பிரியர்கள், அடிச்சி புடிச்சி ஆர்டர் போட்டு வருகின்றனர். அதன் முழு அம்சங்கள் பின்வருமாறு.
எல்ஜி அல்ட்ராகியர் ஓஎல்இடி கர்வ்ட் கேமிங் மானிட்டர் அம்சங்கள் (LG UltraGear OLED Curved Gaming Monitor Specifications): இந்த கேமிங் மானிட்டர் வால் மவுண்டபிள் (Wall Mountable) டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல டேபிளில் வைக்கும் படியும் ஆங்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த மானிட்டரில் டில்ட் (Tilt), ஹைட் (Height), ஸ்விவெல் (Swivel) ஆகிய அட்ஜஸ்ட்மென்ட்களை செய்து கொள்ள முடியும். இதுவொரு 45 இன்ச் (3440 x 1440 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்ட மானிட்டாராகும். இதில் WQHD சப்போர்ட் உள்ளது. இந்த டிஸ்பிளேவில் 800ஆர் கர்வ்ச்சர் (Curvature) வருகிறது.
இதில் 178 டிகிரி வியூவிங் ஆங்கிள் (Viewing Angle), 21:9 அஸ்பெக்ட் ரேசியோ, 1500000:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஃபேக்டரி காலிப்ரேடட் (Factory-Calibrated Monitor) மற்றும் எச்டபுள்யூ காலிப்ரேஷன் ரெடி (HW Calibration Ready) கொண்ட மானிட்டராகும்.
இதில், எச்டிஆர் 10 (HDR 10), எச்டிஆர் எஃபெக்ட் (HDR Effect), விஆர்ஆர் (VRR), ரீடர் மோட் (Reader Mode), பிளாக் ஸ்டெபிலைசர் (Black Stabilizer) சப்போர்ட் வருகிறது. சிங்க் (SYNC) கனெக்டிவிட்டியை பொறுத்தவரையில், ஜி - சிங்க் காம்பேடிபிள் (G-SYNC Compatible), ஃப்ரீசிங்க் பிரீமியம் (FreeSync Premium), ஃஎப்பிஎஸ் கவுன்டர் (FPS Counter), டைனாமிக் ஆக்ஷன் சிங்க் (Dynamic Action Sync) ஆகியவை வருகின்றன.
இந்த மானிட்டரில் பிரத்யேக டிசைனாக ஆர்ஜிபி எல்இடி லைட்னிங் (RGB LED Lighting) மற்றும் எக்ஸாகோன் லைட்னிங் (Hexagon Lighting) வருகிறது. ஸ்மார்ட் எனர்ஜி சேவிங் (Smart Energy Saving) மோட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மானிட்டரை தொடர்ந்து பயன்படுத்தினாலும், அதிகப்படியான எலக்ட்ரிசிட்டி செலவாகாது.
2 எச்டிஎம்ஐ போர்ட், ஒரு எக்ஸ்1 டிஸ்பிளேபோர்ட், ஒரு டிபி (DP) வெர்ஷன் 1.4 போர்ட், எக்ஸ்2 டவுன்ஸ்டீரீம் யுஎஸ்பி போர்ட் (x2 USB Downstream Port), எக்ஸ்1 அப்ஸ்டீரீம் யுஎஸ்பி போர்ட் (x1 USB Upstream Port), சவுண்ட் மற்றும் மைக் சப்போர்ட் கொண்ட ஹெட்போன் ஜாக் கொடுக்கப்பட்டுள்ளன.
டிடிஎஸ் எச்பி:எக்ஸ் (DTS HP:X) ஆடியோ சப்போர்ட் வருகிறது. இதன் எடையை பொறுத்தவரை, சுமார் 10.9 கிலோ இருக்கிறது. இவ்வளவு பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட இந்த மானிட்டரின் விலையும் பிரம்மாண்டமாகவே இருக்கிறது. இந்த எல்ஜி அல்ட்ராகியர் ஓஎல்இடி கர்வ்ட் கேமிங் மானிட்டரின் விலை ரூ.1,64,997 ஆக நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.
அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒருவேளை உங்களுக்கு ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் மானிட்டர் வேண்டும் என்றால், 32 இன்ச் அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எல்ஜி அல்ட்ராகியர் ஓஎல்இடி கர்வ்ட் கேமிங் மானிட்டரை வாங்கிக் கொள்ளலாம். இந்த விலை ரூ. 84,498ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








