மொத்த இந்தியாவும் வாய் பிளக்கும் விலையில் 97-inch ஸ்மார்ட் TV-ஐ அறிமுகம் செய்த LG.. அப்படி என்ன விலை?
55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல்களை கூட "சின்ன சைஸ்" டிவியாக மாற்றும் அளவில்.. 97-இன்ச் ஸ்மார்ட் டிவியொன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எந்த நிறுவனத்தின் டிவி? இதன் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
எல்ஜி நிறுவனம் "உலகின் மிகப்பெரிய டெலிவிஷன்" (World's Largest Television) என்று கூறப்படும் அதன் எல்ஜி ஜி2 97-இன்ச் 4கே ஓஎல்இடி (LG G2 97-inch 4K OLED) ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியின் 97-இன்ச் டிஸ்பிளேவானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடன் வருகிறது.

எல்ஜி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவியானது ஆல்பா 9 ஜென்5 ஏஐ ப்ராசஸர் 4கே (Alpha 9 Gen5 AI Processor 4K) கொண்டு இயங்குகிறது. எல்ஜி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஏஐ ப்ராசஸர், சிறந்த பிக்சர் குவாலிட்டியை (Best Picture Quality) வழங்கும்.
மேலும் இது டால்பி விஷன் ஐக்யூ ( Dolby Vision IQ), எச்டிஆர்10 (HDR10) மற்றும் எச்எல்ஜி (HLG) போன்ற பல்வேறு எச்டிஆர் ஃபார்மெட்களையும் (HDR Formats) ஆதரிக்கிறது. எல்ஜி-யின் கூற்றுப்படி இது யதார்த்தமான, லைஃப்லைக் காட்சி அனுபவத்தை (Lifelike visual experience) வழங்கும்.

இந்த ஸ்மார்ட் டிவி கேமர்களுக்கான ஒரு சிறந்த டிவியாகவும் இருக்கும். ஏனென்றால் இது 4கே 120 எஃப்பிஎஸ் திறன் (4K 120 fps capability), ஜி-சின்க் (G-Sync), ஃப்ரீ சின்க் கம்படிபிலிட்டி (Free Sync compatibility), ஏஎல்எல்எம் (ALLM) மற்றும் விஆர்ஆர் (VRR) போன்ற அம்சங்களுடன் வருகிறது. எல்ஜி நிறுவனத்தின் கூற்றுப்படி, இது மிகவும் ஆழமான கேமிங் அனுபவத்தை வழங்கும்.
ஆடியோவை பொறுத்தவரை, எல்ஜி ஜி2 97-இன்ச் 4கே ஓஎல்இடி ஸ்மார்ட் டிவியில் உள்ள விர்ச்சுவல் 7.1.2 அப்-மிக்ஸ் (Virtual 7.1.2 up-mix) கொண்ட ஏஐ சவுண்ட் ப்ரோ சிஸ்டம் (AI Sound Pro System) ஆனது ஒரு சினிமா ஆடியோ சூழலை உருவாக்குகிறது.

இந்த ஸ்மார்ட் டிவியில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இதில் ஏஐ 4கே அப்ஸ்கேலிங் (AI 4K upscaling), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), எச்ஜிஐஜி மோட் (HGIG Mode) மற்றும் பயனருக்கு ஏற்ற மேஜிக் மோஷன் ரிமோட் (Magic Motion Remote) ஆகியவைகள் உள்ளன. எல்ஜி நிறுவனத்தின் கூற்றுப்படி இது பல்துறை ஹோம் என்டர்டெயின்மென்ட்டை உறுதி செய்யும்.
விலை மற்றும் விற்பனை: இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில், இதுவரை இல்லாத மிகப்பெரிய ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்துவதற்காக, எல்ஜி நிறுவனமானது ரீடெய்ல் செயின் ஆன லோட்டஸ் எலெக்ட்ரானிக்ஸ் (Lotus Electronics) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதாவது இந்த 97-இன்ச் எல்ஜி டிவியானது லோட்டஸ் எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர்களின் வழியாக வாங்கக் கிடைக்கும் என்று அர்த்தம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, எல்ஜி ஜி2 97-இன்ச் 4கே ஓஎல்இடி ஸ்மார்ட் டிவியானது ரூ.2499990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்ஜி ஈவோ ஜி2 சீரீஸின் கீழ் 55-இன்ச் மற்றும் 65-இன்ச் மாடல்களும் வாங்க கிடைக்கிறது. 65-இன்ச் எல்ஜி ஓஎல்இடி ஈவோ ஜி2 4கே ஸ்மார்ட் டிவி ரூ.399990 க்கும், 55-இன்ச் எல்ஜி ஓஎல்இடி ஈவோ ஜி2 4கே ஸ்மார்ட் டிவி ரூ.254990 க்கும் வாங்க கிடைக்கிறது.
எல்ஜி ஜி2 97-இன்ச் 4கே ஓஎல்இடி டிவி அறிமுகத்தின் போது, கொரியாவின் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிர்வாக இயக்குநர் ஆன ஹாங் ஹு ஜியோன் பேசுகையில், "நாங்கள் ஒரு டெலிவிஷனை மட்டும் வெளியிடவில்லை; நாங்கள் வீட்டு பொழுதுபோக்கின் புதிய சகாப்தத்தை வெளிப்படுத்தி உள்ளோம். இது சாத்தியமானவற்றின் வரம்புகளை மறுவரையறை செய்கிறது" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications