வீட்டுல QUBE.. 120 இன்ச்.. 4K ரெசொலூஷன்.. 360 டிகிரி ஹேண்டில்.. ஆர்ஜிபி லேசர்.. எல்ஜி சினிபீம் கியூப் மாடல்!
இதான்பா தியேட்டர் லெவல் புரொஜெக்டர் மாடலென்று சொல்லும் அளவுக்கு 4K ரெசொலூஷன், 360-டிகிரி ஹேண்டில், ஆர்ஜிபி லேசர், 120 இன்ச் புரொஜெக்சன் போன்ற மிரளவிடும் பீச்சர்களுடன் எல்ஜி சினிபீம் கியூப் (LG CineBeam Qube) மாடல் களமிறங்கியிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ஒவ்வொரு வீட்டிலும் டிவிக்கு அடுத்தபடியாக புரொஜெக்டர் வாங்கி படம் பார்க் வேண்டுமென்ற ஆசை பலருக்கு இருக்கும். இதனால், மார்கெட்டில் கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் புரொஜெக்டர்களை வாங்கி பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், சில வாரங்களில் அவற்றின் வீடியோ குவாலிட்டியை பார்த்து கடுப்பாகி வீட்டில் ஒரு ஓரமாக தூக்கிப்போட்டு விடுகின்றனர்.

ஆகவே, கொஞ்சம் செலவாகினாலும் பரவாயில்லை, பக்கா பிரீமியம் வீடியோ குவாலிட்டி கொண்ட புரொஜெக்டர் வாங்கலாம் என்ற முடிவுக்கும் பலர் சென்றிருக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு உண்மையான தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் விதமாக எல்ஜி சினிபீம் கியூப் 4K புரொஜெக்டர் வந்திருக்கிறது. முதலில் அம்சங்களை பார்த்துவிடுவோம்.
எல்ஜி சினிபீம் கியூப் அம்சங்கள் (LG CineBeam Qube Specification): இந்த சினிபீம் மாடலானது, 50 முதல் 120 இன்ச் வரையில் யுஎச்டி(UHD) (3,840 x 2,160 பிக்சல்கள்) புரொஜெக்சன் கொடுக்கக்கூடியது. அதோடு 4K ரெசொலூஷன் வருவதால் அல்ட்ரா கிளியர் வீடியோ குவாலிட்டியை எதிர்பார்க்கலாம்.
அதுமட்டுமல்லாமல், ஆர்ஜிபி லேசர் லைட் சோர்ஸ் (RGB Laser Light Source) மற்றும் கட்டிங் எட்ஜ் இமேஜ் ரீபைனிங் டெக்னாலஜி (Cutting-edge Image Refining Technology) பயன்படுத்தப்பட்டுள்ளதால், பிக்சல் குவாலிட்டியும் மிரளவிடும் வகையில் இருக்கும். இதனால், பிரீமியம் மினி தியேட்டர் அனுபவம் கிடைக்கும்.
இதுபோக டிசிஐ பி3 கலர் காமட் (DCI P3 Color Gamut), 500 ஏஎன்எஸ்ஐ லுமன்ஸ் (ANSI Lumens) மற்றும் 450,000:1 கார்ட்ராஸ்ட் ரேசியோ (Contrast Ratio) கொண்டிருக்கிறது. இதன் மூலம் பிரைட்னஸ் ரேசியோ அதிகமாக இல்லாமல் ஷார்ப் மற்றும் கிளியர் பிக்சர் வீடியோ குவாலிட்டி கொடுக்கப்படுகிறது.
அதேபோல மூவி கன்டென்ட்களை பார்க்கும்போது, ரிச் கலர் (Rich Colors), டீப் பிளாக் (Deep Blacks) போன்றவற்றுக்கான கலர் அக்யூரசி (Color Accuracy) டெக்னாலஜி மேம்படுத்தப்படுள்ளது. எல்ஜி சினிபீம் கியூப் 4K புரொஜெக்டரில் ஆட்டோ ஸ்கிரீன் அட்ஜெட்ஸ்மென்ட் (Auto Screen Adjustment) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, ஆட்டோ போகஸ் (Auto-focus), இமேஜ் பிளேஸ்மெண்ட் (Image Placement) மற்றும் சைஸ் (Size) கன்ட்ரோல்கள் மிகவும் எளிதாக இருக்கும். இந்த மாடலில் எல்ஜி வெப்ஓஎஸ் 6.0 (LG webOS 6.0) வருகிறது. இந்த ஓஎஸ் நெட்ஃபிளிக்ஸ் (Netflix), டிஸ்னிபிளஸ் (Disney+), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் யூடியூப் (YouTube) சப்போர்ட் கொடுக்கிறது.
எச்டிஆர்10 (HDR10) சப்போர்ட் வருகிறது. எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி டைப்-சி (USB Type C) கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. காம்பாக்ட் டிசைனில் 1.49 கிலோ எடை கொண்டுள்ளது. முதலில் அமெரிக்காவில் விற்பனை தொடங்குகிறது. வரும் மார்ச் 18ஆம் தேதி முதல் ப்ரீ-ஆர்டர் தொடங்குகிறது.
அதேபோல ஏப்ரல் மாதத்தில் இந்தியா, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எல்ஜி சினிபீம் கியூப் மாடலின் விலை ரூ.1,07,750ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பக்கா பிரீமியம் புரொஜெக்டர் எதிர்பார்க்கும் நபர்களுக்கு இந்த மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








