வெறும் ரூ.7999.. அதிகபட்சம் ரூ.13999.. இந்த 5 Smart TV-ல ஒன்னு அசால்ட்-ஆ வாங்கலாம்!
மலிவு விலையில் இன்னும் அம்சம் நிறைந்த ஸ்மார்ட் டிவியைத் தேடுகிறீர்களா? Flipkart இல் கிடைக்கும் பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பங்களின் துறையில் முழுக்குங்கள், அதிநவீன அம்சங்களுடன் இணைந்து ஈர்க்கக்கூடிய 32 அங்குல காட்சிகளை வழங்குகிறது. சில தனித்துவமான சலுகைகளின் முறிவு இங்கே:
01. சாம்சங் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் டிவி (Samsung 32-inch HD Ready LED Smart TV): ரூ.15,000 பட்ஜெட்டில் பெஸ்ட் ஸ்மார்ட் டிவிகள் என்கிற பட்டியலின் முதல் இடத்தில் உள்ள இந்த சாம்சங் டிவி, பிளிப்கார்ட்டில் இது ரூ.13,990 க்கு வாங்க கிடைக்கிறது.

இது நெட்பிளிக்ஸ், ப்ரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், யூட்யூப் போன்ற ஆப்களுக்கான ஆதரவு, டைஸன் (Tizen) ஆப்ரேட்டிங் சிஸ்டம், 50 ஹெர்ட்ஸ் எச்டி ரெடி 1366 x 768 பிக்சல்ஸ் டிஸ்பிளே, 20W சவுண்ட் அவுட்புட் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
02. எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் வெப்ஓஎஸ் டிவி (LG 32-inch HD Ready LED Smart WebOS TV - 32LM565BPTA): இந்த பட்டியலில் இரண்டாவதாக உள்ள இந்த எல்ஜி டிவி பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.13,490 க்கு வாங்க கிடைக்கிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இந்த எல்ஜி ஸ்மார்ட் டிவியானது 50ஹெர்ட்ஸ் டிஸ்பிளே, வைஃபை மற்றும் ஈதர்நெட் ஆதரவு, 10W சவுண்ட் அவுட்புட், குவாட்-கோர் ப்ராசஸர், 1ஜிபி ரேம், 4ஜிபி ஸ்டோரேஜ், 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் 1 யூஎஸ்பி போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது.
03. ஐஃபால்கானின் டிசிஎல் 32-இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (iFFALCON TCL 32-inch HD Ready LED Smart Android TV - 32F2A): இந்த பட்டியலில் மூன்றாவதாக உள்ள இந்த டிசிஎல் டிவி பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1366 x 768 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 32-இன்ச் எச்டி ரெடி டிஸ்பிளே, 2 எச்டிஎம்ஐ போர்ட்கள், 1 யூஎஸ்பி போர்ட், வைஃபை சப்போர்ட், டால்பி ஆடியோவுடன் 20W ஸ்பீக்கர் போன்றவைகளை கொண்டுள்ளது.
04. ரெட்மி 32-இன்ச் ஆண்ட்ராய்டு 11 சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (Redmi 32-inch Android 11 Series HD Ready Smart LED TV - L32M6-RA/L32M7-RA): இந்த பட்டியலில் நான்காவதாக உள்ள இந்த ரெட்மி டிவி அமேசான் வலைத்தளத்தில் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவியானது 1366 x 768 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் உடனான 32-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம், எச்டிஎம்ஐ (HDMI), யூஎஸ்பி (USB), வைஃபை (Wi-Fi) ஆதரவு மற்றும் 20W சவுண்ட் அவுட்புட் போன்றவைகளை கொண்டுள்ளது.
05. எம்ஐ 32-இன்ச் 5ஏ சீரீஸ் எச்டி ரெடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி (MI 32-inch 5A Series HD Ready Smart Android LED TV): இந்த பட்டியலில் ஐந்தாவதாக / கடைசியாக உள்ள இந்த எம்ஐ டிவி ஷாவ்மீ இந்தியாவின் அதிகாரப்பூர்வ வலைதளமான எம்ஐ.காம் வழியாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.
தடையற்ற சினிமா எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் இந்த எம்ஐ ஸ்மார்ட் டிவியானது 1366 x 768 பிக்சல்ஸ் எச்டி ரெடி 32-இன்ச் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு டிவி ஆப்பரேட்டிங் சிஸ்டம், எச்டிஎம்ஐ, யூஎஸ்பி, வைஃபை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் 20W சவுண்ட் அவுட்புட் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








