Home
Gadgets

ஒரே கல்லுல 2 மாங்காய்! மானிட்டர் + டிவி.. 32-இன்ச் Full HD டிஸ்பிளே.. பட்ஜெட் விலையில்.. LG-யின் தரமான செய்கை!

இதென்ன ஸ்மார்ட் டிவியா? அல்லது கம்ப்யூட்டர் மானிடர்-ஆ? அல்லது இரண்டும் கலந்த கலவையா! என்று கேட்கத்தூண்டும் படியாக எல்ஜி (LG) நிறுவனமானது 2 புதிய மைவியூ ஸ்மார்ட் மானிட்டர் (MyView Smart Monitor) மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.

எல்ஜி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் மானிட்டர்கள் அலுவலக தேவைகள் மற்றும் பொழுதுபோக்கு தேவைகள் ஆகிய இரண்டையுமே பூர்த்தி செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. பயனர்களால் இந்த மானிட்டர்களை கம்ப்யூட்டர் உடன் இணைக்கவும் முடியும், கூடவே கன்டென்ட்களை ஸ்ட்ரீமிங் செய்யவும் முடியும். சுருக்கமாக எல்ஜி-யின் மைவியூ ஸ்மார்ட் மானிட்டர்களை உங்கள் இஷ்டம் போல பயன்படுத்திக்கொள்ள முடியும்!

ஒரே கல்லுல 2 மாங்காய்.. மானிட்டர் + டிவி.. LG-யின் தரமான செய்கை!

1920 x 1080 ரெசல்யூஷன் உடனான ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேக்கள் ( Full HD IPS Displays) உடன் இம்ப்ரூவ்டு வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை (Improved viewing experience) வழங்கும் இந்த எல்ஜி மானிட்டர்களின் விலை நிர்ணயம் என்ன? ஸ்க்ரீன் சைஸ் என்ன? என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுளள்ன? இதோ விவரங்கள்:

என்ன விலை? எங்கே வாங்கலாம்? எல்ஜியின் இந்த லேட்டஸ்ட் மைவியூ ஸ்மார்ட் மானிட்டர்கள் ஆனது இரண்டு ஸ்க்ரீன் சைஸ்களில் வருகிறது: 27-இன்ச் மற்றும் 32-இன்ச். சற்றே சிறிய 27-இன்ச் 27SR50F மாடல் ரூ.24,500 க்கும், மறுகையில் உள்ள 32-இன்ச் 32SR50F மாடல் ரூ.28,500 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு மானிட்டர்களுமே பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) மற்றும் எல்ஜி.காம் (LG.com) வழியாக வாங்க கிடைக்கும்.

ஒரே கல்லுல 2 மாங்காய்.. மானிட்டர் + டிவி.. LG-யின் தரமான செய்கை!

என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளன? 27-இன்ச் 27SR50F மாடலானது 1920 x 1080 ரெசல்யூஷன் உடனான ஃபுல் எச்டி டிஸ்பிளேவை (Full FD Display) கொண்டுள்ளது. இது மேம்பட்ட பார்வை அனுபவத்திற்காக மூன்று பக்கங்களிலும் பார்டர்லெஸ் (Borderless) டிஸ்பிளேவை கொண்டிருக்கும் ஒரு நேர்த்தியான வடிவமைப்பை பெற்றுள்ளது.

மேலும் 27-இன்ச் மாடலானது வைட் 178 டிகிரி கோணத்துடன், பயனர்கள் எந்த நிலையிலிருந்தும் காட்சிகளை தெளிவாக பார்க்க அனுமதிக்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இந்த மானிட்டரில் இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) மற்றும் இரண்டு யூஎஸ்பி 2.0 போர்ட்கள் உள்ளன.

ஒரே கல்லுல 2 மாங்காய்.. மானிட்டர் + டிவி.. LG-யின் தரமான செய்கை!

மேலும் இது தடையற்ற வயர்லெஸ் கனெக்ஷனை வழங்கும் நோக்கத்தின் கீழ் வைஃபை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth), ஸ்க்ரீன்ஷேர் (ScreenShare) மற்றும் ஏர்பிளே 2 (AirPlay 2) ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மேலும் இது எல்ஜி நிறுவனத்தின் லேட்டஸ்ட் வெப்ஓஎஸ்23 (webOS23) பிளாட்பார்ம் கொண்டு இயக்கப்படுகிறது. கடைசியாக இதில் 5W x2 ஆடியோ அவுட்புட்டை வழங்கும் இன்டர்னல் ஸ்பீக்கர்களும் உள்ளன.

அடுத்தாக உள்ள 32-இன்ச் 32SR50F மாடலானது 1920 x 1080 ரெசல்யூஷன் உடனான ஃபுல் எச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. 27-இன்ச் மாடலை போல் 3 பக்கங்களில் மட்டுமின்றி, இது 4 பக்கங்களிலும் பார்டர்லெஸ் டிஸ்பிளே டிசைனை கொண்டுள்ளது. இதுதவிர்த்து 32-இன்ச் மாடலின் அனைத்து அம்சங்களும் 27-இன்ச் மாடலுடன் ஒற்றுப்போகும்.

அதாவது 32-இன்ச் மாடலானது வைட் 178 டிகிரி ஆங்கிள் வியூ, இரண்டு எச்டிஎம்ஐ போர்ட்கள் மற்றும் இரண்டு யூஎஸ்பி 2.0 போர்ட்கள் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள், வைஃபை, ப்ளூடூத், ஸ்க்ரீன்ஷேர் மற்றும் ஏர்பிளே 2 போன்ற வயர்லெஸ் கனெக்ஷகள், லேட்டஸ்ட் வெப்ஓஎஸ்23, 5W x2 ஆடியோ அவுட்புட்டை வழங்கும் இன்டர்னல் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கும்.

மேலும் இந்த 2 எல்ஜி மானிட்டர்களுமே பல பில்ட்-இன் ஓடிடி ஆப்களுடன் வருகின்றன். மேலும் தனிப்பயனாக்கப்பட்ட பிளேலிஸ்ட்களை வழங்கும் எல்ஜி-யின் மூட் மியூசிக் அம்சத்தையும் கொண்டுள்ளன. கூடுதலாக குவிக் கார்டு வகைப்படுத்தல் (Quick Card categorization) மற்றும் ஏஐ கான்சியர்ஜ் பரிந்துரைகள் (AI Concierge recommendations) போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளன.

எல்லாவற்றை விட முக்கியமாக இந்த மானிட்டர்கள். எஸ்டிபி (STB) என்று சுருக்கமாக அழைக்கப்படும் செட்-டாப் பாக்ஸ் (Set-top box) தேவையில்லாமல் 300 க்கும் மேற்பட்ட இலவச ப்ரோகிராம்களுக்கான அணுகலை (300+ free programs) வழங்கும். கடைசியாக இந்த 2 மானிடர்களையுமே திங்க்யூ ஆப் (ThinQ App) மூலம் கட்டுப்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
2 New LG MyView Smart Monitors with 27 inch 32 inch FHD Display Launched in India Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X