அடுத்த ஐபோன்: 6.1 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவுடன் மலிவு விலையில் ரெடி.?

|

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஐபோன்கள் பற்றிய சுவாரசியமான வதந்தியொன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே பல 2018 ஐபோன்கள் வெளியான வண்ணமிருக்க இந்த புதிய அறிக்கையானது, "அடுத்த ஆண்டு தொடங்கப்படும் ஐபோன்கள் மிகவும் மலிவான மாதிரிகளாக வெளியிட ஆப்பிள் திட்டமிட்டுள்ளது" என்று கூறுகிறது.

அடுத்த ஐபோன்: 6.1 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவுடன் மலிவு விலையில் ரெடி.?

இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் அதன் எல்சிடி திரைகளை கைவிடுவதாக இல்லை என்றே தெரிகிறது. வெளியான லீக்ஸ் தகவலின்படி, ஆப்பிள் நிறுவனமானது ஓஎல்இடி திரைக்கு பதிலாக எல்சிடி திரை கொண்ட ஒரு 6.1 அங்குல ஐபோன் சார்ந்த பணியில் ஈடுபட்டுள்ளது.

மெட்டல் பிளாக்கில் வெளியாகும் வாய்ப்பு

மெட்டல் பிளாக்கில் வெளியாகும் வாய்ப்பு

அதுமட்டுமினிற் அடுத்த தலைமுறை ஐபோன்களானது, ஐபோன் 7 போன்ற ஒரு மெட்டல் பின்னணியைக் கொண்டுருக்குமென்றும் இந்த லீக்ஸ் தகவல் பரிந்துரைக்கிறது. கூறப்படும் 6.1 அங்குல எல்சிடி மாடல் ஆனது பழைய ஐபோன்களை போன்றே மெட்டல் பிளாக்கில் வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இரண்டு ஒஎல்இடி அளவு

இரண்டு ஒஎல்இடி அளவு

மேலும் மொத்தம் இரண்டு ஒஎல்இடி அளவுகளில் வரும் - ஒன்று 6.2இன்ச் அல்லது 6.3 இன்ச் நீளம் கொண்டிருக்கலாம் மற்றொன்று 5.8 இன்ச் அளவு கொண்டிருக்கலாம். கூறப்படும் இந்த புதிய எல்சிடி ஐபோன் ஆனது சில்வர், ஸ்பேஸ் ஆஷ் மற்றும் கோல்ட் போன்ற ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வண்ணங்களிலும் வெளியாகலாம்.

6.5-அங்குல அளவில் புதிய ஓஎல்இடி மாடல்

6.5-அங்குல அளவில் புதிய ஓஎல்இடி மாடல்

எல்லாவற்றை விட முக்கியமான விடயம் என்னவென்றால், அடுத்த தலைமுறை எல்சிடி ஐபோன்களானது, புதிய ஐபோன் எக்ஸ்-ஐ விட மலிவான விலையில் அறிமுகமாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெளியான லீக்ஸ் தகவலின்படி, ஆப்பிள் நிறுவனம் 6.5-அங்குல அளவில் புதிய ஓஎல்இடி மாடலையும் அறிமுகப்படுத்தும்.

மொத்தம் மூன்று புதிய ஐபோன்

மொத்தம் மூன்று புதிய ஐபோன்

கடந்த மாதம் வெளியான லீக்ஸ் தகவலில், ஆப்பிள் மொத்தம் மூன்று புதிய ஐபோன்களை வருகிற 2018-ல் அறிமுகப்படுத்தும். அதில் ஒன்று 5.5 அங்குல அளவையும், இரண்டாவது 6.1 அங்குல மாதிரியாகவும், மூன்றாவது மாறுபாடு ஒரு பெரிய 6.5 அங்குல டிஸ்பிலேவை கொண்டிருக்குமென்றும் கூறியது.

விலைநிர்ணயம்

விலைநிர்ணயம்

அக்கருவிகளின் விலைநிர்ணயம் 649 முதல் 749 அமெரிக்க டாலர்கள் என்கிற ஆரம்ப விலைப்புள்ளியை பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. எது எப்படியோ, ஆப்பிள் நிறுவனம் குறைந்த தீர்மானம் கொண்ட டிஸ்பிளே மற்றும் லோ-எண்ட் மற்றும் மிட்-ரேன்ஜ் கருவிகளை சந்தைக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது என்பதை உணர முடிகிறது.

பாரம்பரியம் மிக்க அம்சங்கள் நீக்கப்படுமா.?

பாரம்பரியம் மிக்க அம்சங்கள் நீக்கப்படுமா.?

எதிர்கால ஐபோன்களில் நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க அம்சங்கள் நீக்கப்படுமா என்பதை எந்த தெளிவும் இல்லை. இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அல்ல என்பதை மனதிற்கொண்டு, இந்த ​​ஆப்பிள் எல்சிடி மாடல் தகவலை சிட்டிகை உப்பில் ஒரு அளவு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.

Best Mobiles in India

English summary
Is there a 6.1-inch LCD iPhone with metal back on cards? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X