ரூ.7,130 என தள்ளுபடி விலையில் iPhone 12 வாங்க சரியான நேரம்: தெறிக்கவிடும் பிளிப்கார்ட்!

|

இந்தியாவில் iPhone 12 வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். பிளிப்கார்ட்டில் ஐபோன் 12 இன் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலையானது ரூ.48,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலின் விலை முன்னதாக ரூ.59,900 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆப்பிள் நிறுவனம் 2020 இல் அறிமுகம் செய்த ஐபோன் மாடல் இதுவாகும். புதிய மற்றும் சற்று மேம்பட்ட ஐபோன் மாடலை ரூ.50,000க்கு கீழ் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

ஐபோன் 12

ஐபோன் 12

ஐபோன் 12 இன் விலையானது பிளிப்கார்ட்டில் ரூ.48,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. பிரைஸ் டிராக்கிங் வெப்சைட் வெளியிட்ட தகவலின்படி இந்த ஐபோன் 12 விலை ஆனது கடந்த நவம்பர் 15 ஆம் தேதி வரை பிளிப்கார்ட்டில் ரூ.56,129 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஐபோன் 12 ஆனது அக்டோபர் 2020 இல் வெளியிடப்பட்டது. அப்போது இந்த மாடலின் விலை ரூ.79,990 ஆகும்.

ஐபோன் 12 தள்ளுபடி

ஐபோன் 12 தள்ளுபடி

பிளிப்கார்ட்டில் ஐபோன் 12 விலையானது தற்போது ரூ.48,999 என கிடைக்கிறது. கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கிறது. நீங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய போனை வாங்கும் போது ரூ.17,500 வரை தள்ளுபடிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. பெடரல் பேங்க் டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தி ஐபோன் 12 வாங்கும் போது ரூ.1500 வரை கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

மேல்நிலை வேரியண்ட்டுக்கும் தள்ளுபடிகள்

மேல்நிலை வேரியண்ட்டுக்கும் தள்ளுபடிகள்

இதே அளவிலான தள்ளுபடி ஐபோன் 12 இன் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட்டுக்கும் கிடைக்கிறது. அதன்படி ஐபோன் 12 இன் 128 ஜிபி வேரியண்ட் ரூ.53,999 எனவும் 256 ஜிபி வேரியண்ட் ரூ.61,999 எனவும் கிடைக்கிறது.

ஐபோன் 12 வாங்கலாமா?

ஐபோன் 12 வாங்கலாமா?

ஐபோன் 12 சாதனத்தின் பேஸ் வேரியண்ட் மாடலின் 64ஜிபி ஸ்டோரேஜ் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்றாலும் கூட, இது ஒரு சிறந்த தேர்வாக இருக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை நிறுத்திய ஆப்பிள்

64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டை நிறுத்திய ஆப்பிள்

2022 இல் 64 ஜிபி ஸ்டோரேஜ் உண்மையில் போதுமானதாக இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆப்பிள் நிறுவனமே அதன் சமீபத்திய தலைமுறை ஐபோன் தொடர்களில் 64ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்தை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி

ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினி அம்சங்கள் குறித்து பார்க்கையில் ஐபோன் 12, ஐபோன் 12 மினி ஒரே கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் இரண்டுக்குமான வேறுபாடு இதன் காட்சி அளவு மற்றும் பேட்டரி திறன் ஆகும்.

ஏ14 பயோனிக் சிப்

ஏ14 பயோனிக் சிப்

ஐபோன் 12 ஆனது 6.1 இன்ச் ரெடினா எக்ஸ்டி ஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் ஐபோன் 12 மினி 5.4 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இரண்டு போன்களும் டால்பி ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இரண்டும் ஒரே ஏ14 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகின்றன.

4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு

4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு

ஐபோன் 12 இல் 2851 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஐபோன் 12 மினி சாதனத்தில் 2227 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு போன்களும் டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதன் கேமரா அமைப்புக் குறித்து பார்க்கையில், 12 எம்பி அகல கோண லென்ஸ் ஆதரவு, 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் என டூயல் கேமராக்கள் இருக்கிறது. அதேபோல் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் கூடிய 12 எம்பி செல்பி கேமரா ஆதரவு உள்ளது.

Best Mobiles in India

English summary
Flipkart Offers Upto Rs.7130 Discount on iPhone 12: Current Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X