Home
News

நீ Flipkart இல்லை மோசடிகார்ட்.. கழுவி ஊத்திய நபர்.. ஆர்டர் செஞ்சா ஒழுங்கா பொருளை கொடு.. இல்ல ரீபண்ட் கொடு..

ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. பிளிப்கார்ட் (Flipkart) வழியாக நத்திங் போன் 2a ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக வேறொரு பொருள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அப்படியென்ன பொருள் டெலிவரி செய்யப்பட்டது?

நத்திங் (Nothing) நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 2a (Nothing Phone 2a) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து சில நாட்களே ஆகிறது. இதன் விற்பனை இப்போது இந்தியாவில் துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நத்திங் போன் 2a பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டதினாலும், பலரும் இந்த போனை பிளிப்கார்ட் தலத்தில் இருந்து ஆர்டர் செய்திருந்தனர்.

நீ Flipkart இல்லை மோசடிகார்ட்.. கழுவி ஊத்திய நபர்..

நத்திங் போன் 2a ஆர்டர் செய்தவருக்கு என்ன கிடைத்தது? அப்படி டெல்லியில் வசிக்கும் மாலிக் தய்யாப் என்பவர் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.20,808 கட்டணத்தை செலுத்தி, லேட்டஸ்ட் நத்திங் போன் 2a சாதனத்தை ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், இவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்ஸலில் ஐகால் (iKall) பிராண்டின் ஒரு அடிப்படை ஸ்மார்ட்போன் சாதனம் இருந்துள்ளது. டெலிவரி செய்யப்பட்ட பாக்ஸை திறந்த பின் இந்த நபர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

நத்திங் போன் 2a ஆர்டர் செய்யப்பட்டு 5 நாட்களுக்கு பிறகு, இவருடைய பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக தெரியப்படுகிறது. இது தவறுதலாக நடந்திருக்க கூடும் என்று எண்ணிய மாலிக், பிளிப்கார்ட் தளத்தின் உதவி குழுவை அழைத்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், அவர் ஆர்டர் செய்த பொருள் புதிய நத்திங் போன் 2a சாதனம் என்றும், அதற்கான கட்டணமாக ரூ.20,808 தொகையை அவர் ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்ஸலில் ரூ.4000 மதிப்பிலான iKall என்ற பிராண்டின் அடிப்படை வேரியண்ட் ஸ்மார்ட்போன் சாதனம் இருந்ததாக கூறி புகார் அளித்துள்ளார். ஆனால், பிளிப்கார்ட் நிறுவனம் இவருடைய புகாரை ஏற்க மறுத்துள்ளது. காரணம், பார்சல் டெலிவரி செய்யப்பட்ட பொழுது மாலிக் OTP உறுதிப்படுத்தல் எண்ணை கூறி, பர்செல்லை பெற்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

நீ Flipkart இல்லை மோசடிகார்ட்.. கழுவி ஊத்திய நபர்..

கடுப்பான கஸ்டமர்: டெலிவரி விதிகளின் படி, உங்களுடைய பார்ஸல் சரியாக ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று நீங்களே உறுதி அளித்துள்ளீர்கள் என்று பிளிப்கார்ட் உதவி குழு தெரிவித்துள்ளது. கடுப்பான மாலிக் விஷயத்தை X தளத்தில் கொண்டு சென்று, பிளிப்கார்ட் நிறுவனத்தையும் நத்திங் நிறுவனத்தையும் டேக் செய்து, நடந்த விஷயங்களை பதிவு செய்திருக்கிறார். இரண்டாவது முறையும் மாலிக்கின் புகார் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பார்சல் வாங்கிய நேரத்தில் மாலிக் வீடியோ ரெக்கார்டிங் செய்துள்ளதாகவும், அவருக்கு தவறான பொருளுடன் பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறி மூன்றாவது முறையாக பிலிகார்ட் தளத்தை ஸ்கேம்கார்ட் என்று டேக் செய்து பதிவிட்டிருக்கிறார். இறுதியாக இவருடைய புகாருக்கு பிளிப்கார்ட் பதில் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

வேண்டிய ஆதாரங்களை 24 மணி நேரத்திற்குள் புகைப்படம் மற்றும் விடியோவாக சமர்ப்பித்த பிறகு இவருடை புகார்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஆசை ஆசையாய் ஆர்டர் செய்ததற்கு, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி வழங்கி கடுப்பேற்றிய பிளிப்கார்ட் உதவி குழுவை கழுவி ஊத்தி நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Delhi guy ordered Nothing Phone 2a received iKall basic smartphone rises complaint in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X