Home
Mobile

ஏப்.7 குள்ள இந்த 7 போன்களும்.. ரொம்ப சீப் ஆன விலைக்கு கிடைக்கும்.. Flipkart-ன் தவிர்க்க முடியாத ஸ்பெஷல் ஆபர்!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது ஏப்ரல் 7 வரை நடக்கும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. மொபைல் பிக் பசாட் சேல் என்கிற இந்த பெயரின்கீழ் நடக்கும் இந்த விற்பனையில் பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.10,000 க்குள், ரூ.10,000 - ரூ.20,000 க்குள் மற்றும் பிரீமியம் ரேன்ஜ் என பல்வேறு பிரிவுகளின் கீழ் பல ஸ்மார்ட்போன்களின் மீது சலுகைகள் கிடைக்கிறது. அவைகளில்.. "ஆஹா.. இந்த ஆபரை மிஸ் பண்ணவே கூடாது" என்று கூறும்படியான 7 ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் டிஸ்கவுண்ட்களின் பட்டியல் இதோ:

ஏப்.7 குள்ள இந்த 7 போன்களும்.. ரொம்ப சீப் ஆன விலைக்கு கிடைக்கும்!

01. மோட்டோ எட்ஜ் 40 நியோ (Moto Edge 40 Neo): பிளிப்கார்ட் மொபைல் பிக் பசாட் விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் 17% தள்ளுபடியை பெற்று ரூ.27,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் - இது 144ஹெர்ட்ஸ் 10 பிட் கர்வ்டு டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

02. ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15): ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களில் ஒன்றான இது பிளிப்கார்ட் மொபைல் பிக் பசாட் விற்பனையின் கீழ் 8% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.79,900 க்கு பதிலாக ரூ.72,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடி பிளாக், யெல்லோ, க்ரீன், பிங்க், ப்ளூ என அனைத்து ஐபோன் 15 கலர் ஆப்ஷன்களின் மீது கிடைக்கிறது.

ஏப்.7 குள்ள இந்த 7 போன்களும்.. ரொம்ப சீப் ஆன விலைக்கு கிடைக்கும்!

03. ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 12 Pro Plus 5G): பெரிஸ்கோப் கேமராவுடன் வரும் ஸ்மார்ட்போனான இது பிளிப்கார்ட் மொபைல் பிக் பசாட் விற்பனையின் கீழ் 10% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.37,999 க்கு பதிலாக ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விலை 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலையாகும்.

04. போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி (Poco X6 Pro 5G): பிளிப்கார்ட் மொபைல் பிக் பசாட் விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் 16% தள்ளுபடியை பெற்று ரூ.30,999 க்கு பதிலாக ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் - இது டைமன்சிட்டி 8300 அல்ட்ரா ப்ராசஸரை கொண்டுள்ளது.

ஏப்.7 குள்ள இந்த 7 போன்களும்.. ரொம்ப சீப் ஆன விலைக்கு கிடைக்கும்!

05. மோட்டோ ஜி34 5ஜி (Moto G34 5G): 50எம்பி மெயின் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 8ஜிபி ரேம் போன்ற முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மொபைல் பிக் பசாட் விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் 20% தள்ளுபடியை பெற்று ரூ.14,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

06. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G): 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான அமோஎல்இடி டிஸ்பிளே உடன் வரும் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் மொபைல் பிக் பசாட் விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் 27% தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

07. மோட்டோரோலா ஜி24 பவர் (Motorola G24 Power): 6000எம்ஏஎச் பேட்டரி மற்றும் விலையை மீறிய பிரீமியம் டிசைன் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மொபைல் பிக் பசாட் விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் 33% தள்ளுபடியை பெற்று ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதுதவிர்த்து ரியல்மி சி53 (Realme C5), போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G), போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G), விவோ டி2எக்ஸ் 5ஜி (Vivo T2x 5G), ரியல்மி 12 5ஜி (Realme 12 5G), போக்கோ எக்ஸ்6 நியோ (Poco X6 Neo), சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G) போன்ற ஸ்மார்ட்போன்களின் மீது சலுகைகள் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
7 Smartphone Deals You Should not miss in Flipkart Mobile Big Bachat Days Sale 2024 Ends April 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X