Home
News

முரட்டு தள்ளுபடி.. சரசரவென விலை குறைந்த iPhone 15.. முதல் முறையாக ரூ.14,000 விலை குறைப்பு.. எப்படி வாங்கணும்?

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் புத்தம் புதிய லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் என்றால் அது ஐபோன் 15 (iPhone 15) தான். இந்த புதிய லேட்டஸ்ட் ஐபோன் மாடல் மீது முதல் முறையாக ரூ.14,000 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் 15 (iPhone 15: இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட கால சலுகை என்பதனால், நீங்கள் எந்த தேதிக்குள் இந்த விலை குறைப்புடன் புதிய ஐபோன் 15 சாதனங்களை வாங்க முடியும் என்ற விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். ஐபோன் 15 (iPhone 15) வாங்க வேண்டுமென்ற ஆசையில் இருந்தவர்களுக்கு அடுத்த 4 நாட்கள் லக்கி டே (lucky day) என்றே சொல்லாம்.

முரட்டு தள்ளுபடி.. சரசரவென விலை குறைந்த iPhone 15.. ரூ.14,000 கட்..

காரணம், இன்று முதல் துவங்கி அடுத்த நான்கு நாட்களுக்கு புதிய ஐபோன் 15 (iPhone 15 at low price ever) டிவைஸ் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடி இப்போது பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வரும் பிப்ரவரி 15ம் தேதி வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காதலர் தின கொண்டாட்டத்தை (valentines day) முன்னிட்டு இந்த புதிய சலுகையை பிளிப்கார்ட் அறிமுகம் செய்துள்ளது.

பிளிப்கார்ட் வேலண்டைன்ஸ் டே சிறப்பு விற்பனையின் (Flipkart valentines day sale):

இந்த பிளிப்கார்ட் வேலண்டைன்ஸ் டே சிறப்பு விற்பனையின் (Flipkart valentines day sale) மூலம், வாடிக்கையாளர்கள் முதல் முறையாக புதிய ஐபோன் 15 சாதனத்தை வெறும் ரூ.65,999 விலை முதல் வாங்க முடியும். இந்த அதிரடி தள்ளுபடி மூலம் லேட்டஸ்ட் ஐபோன் 15 (iPhone 15) மாடலின் மீது, எந்த வங்கி சலுகைகளும் இல்லாமல் ரூ.13,999 தள்ளுபடி கிடைக்கிறது. இதற்கு மேல், சில குறிப்பிட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடியாக ரூ.1500 சலுகையும் கிடைக்கிறது.

பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda), சிட்டி பேங்க் (Citi), டிபிஎஸ் (DBS), மற்றும் எச்எஸ்பிசி (HSBC) வங்கி
அட்டை வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியாக ரூ.1500 உடனடி சலுகையும் கிடைக்கிறது. பிளிப்கார்ட் காதலர் தின சிறப்பு தள்ளுபடியுடன் (Flipkart valentines day offer), இந்த வங்கி சலுகையை சேர்த்து ஐபோன் 15 சாதனத்தை வெறும் ரூ. 64,499 என்ற விலையில் வாங்க முடியும்.

முரட்டு தள்ளுபடி.. சரசரவென விலை குறைந்த iPhone 15.. ரூ.14,000 கட்..

ஐபோன் 15 ஸ்மார்ட்போனின் பேசிக் ஸ்டோரேஜ் மாடலான 128ஜிபி வேரியண்ட் ரூ.79,900 விலையில் அறிமுகமானது. அதேபோல், இதன் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.89,900 விலையில் அறிமுகமானது. இதன் உயர்தர மாடலான 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் ரூ.1,09,900 என்ற விலையில் வெளியானது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள பிளிப்கார்ட் காதலர் தின சிறப்பு தள்ளுபடியின் (Flipkart Valentine's Day offer) கீழ் இந்த 3 ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களின் விலையும் மாறியுள்ளது. இப்போது கிடைக்கும் சலுகையுடன் ஐபோன் 15 ரூ.65,999 என்ற விலை முதல் வாங்க கிடைக்கிறது. கூடுதலாக HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் ஐபோன் 15 விலை ரூ.63,999 வரை குறைந்துள்ளது.

முரட்டு சலுகை.. ரூ.62,699 விலையில் iPhone 15:

அதேபோல், ஆக்சிஸ் பேங்க் (Axis bank) வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,300 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. இதன் மூலம் ரூ.62,699 என்ற மிகவும் குறைந்த விலையில் ஐபோன் 15 முதல் முறையாக வாங்க கிடைக்கிறது. இந்த சலுகையை மிஸ் செய்யாமல் உடனே ஆர்டர் செய்து பயன்பெறுங்கள். இந்த சலுகை பிப்ரவரி 15 உடன் நிறைவடைகிறது.

Best Mobiles in India

English summary
iPhone 15 Flipkart Valentines Day Offer 128GB Storage Model Starts From Rs 65999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X