Home
News

Google Pay-வை விட எக்ட்ரா ரிவார்டு.. தீயாய் பரவும் புது Flipkart UPI சேவை.. ரிவார்டு பெற என்ன செய்ய வேண்டும்?

பிரபலமான இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் (Flipkart) இந்தியாவில் தனது UPI சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. Flipkart புதிய கட்டணச் சேவைகளுக்காக Axis வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளது. Flipkart பயனர்கள் இப்போது வணிக QR குறியீடுகளைப் பயன்படுத்தலாம்.

பிளிப்கார்ட் (Flipkart): ஆம், பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய UPI சேவையை @fkaxis என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது P2P பணப் பரிமாற்றத்தை Flipkart UPI ஆப்ஸில் இருந்து நேரடியாகச் செய்ய அனுமதிக்கிறது. இது கூகுள் பே போன்ற ஆப்ஸ் இல் கிடைக்கும் ரிவார்டுகளை விட அதிக நன்மையை வழங்குகிறது. குறிப்பாக அதிக சூப்பர்காய்ன்ஸ் (Supercoins) கிடைக்கிறது.

Google Pay-வை விட எக்ட்ரா ரிவார்டு.. தீயாய் பரவும் Flipkart UPI சேவை?

Flipkart UPI: சேவையை எவ்வாறு பயன்படுத்துவது? இது எப்படி இயங்குகிறது என்பதை குறித்து இப்போது பார்க்கலாம். Flipkart UPI ஐ எப்படி ஆக்டிவேட் செய்வது? Flipkart UPI அதிகாரப்பூர்வ Flipkart ஆப்ஸ் மூலம் இதை ஆக்டிவேட் செய்யலாம். இப்போது Android பயனர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. விரைவில் இது iOS இயங்குதளத்தில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

UPI: Google Play Store மற்றும் Apple Store இல் Flipkart UPI ஐ அப்டேட் செய்வதன் மூலம் இந்த புதிய விருப்பத்தைப் பயன்படுத்தலாம். Flipkart UPI சேவையை உங்கள் போனில் செயல்படுத்த கீழே உள்ள செயல்முறைகளை முறைப்படி பின்பற்றவும். இது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

1. முதலில் பிளிப்கார்ட் செயலியைத் திறக்கவும்
2. 'ஸ்கேன் & பே' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
3. 'மை யுபிஐ' என்பதற்குச் செல்லவும்
4. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியைத் தேர்ந்தெடுக்கவும்
5. இப்போது Flipkart உங்கள் வங்கி விவரங்களை SMS மூலம் சரிபார்க்கும்
6. பின்னர் உங்கள் Flipkart UPI செயல்படுத்தப்படும்

Google Pay-வை விட எக்ட்ரா ரிவார்டு.. தீயாய் பரவும் Flipkart UPI சேவை?

பிளிப்கார்ட் யுபிஐ: மொபைல் ரீசார்ஜ் மற்றும் பில் பேமெண்ட் விருப்பங்கள் இப்போது ஃப்ளிப்கார்ட் UPI பேமெண்ட் சிஸ்டத்தில் ஸ்கேன் & பே > My UPI என்பதன் கீழ் கிடைக்கும். Flipkart UPI, கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் பில்களைச் செலுத்தலாம்.

எவ்வளவு தள்ளுபடி: Flipkart இல் பில் செலுத்துவதற்கு கட்டணம் எதுவும் இல்லை. மேலும் வரையறுக்கப்பட்ட கால சலுகையாக ரூ.10 வரை தள்ளுபடி வழங்குகிறது. கிரெடிட் கார்டுகளில் UPI-க்கான ஆதரவையும் Flipkart சேர்த்துள்ளது. வணிகர்களுக்கு பணம் செலுத்துவதற்காக பயனர்கள் தங்கள் RuPay கிரெடிட் கார்டை Flipkart UPI இல் இணைக்கலாம். எனவே நீங்கள் Flipkart UPI மூலம் பணம் செலுத்தலாம்.

Flipkart மற்றும் PhonePe: இந்தியாவில் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை மிகவும் பரவலாக வளர்ந்துள்ளது. இதில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதில் பிளிப்கார்ட் நம்பிக்கையுடன் உள்ளது. முன்னதாக Flipkart ஆனது PhonePe செயலியுடன் கூட்டு சேர்ந்திருந்தது. ஆனால் Flipkart மற்றும் PhonePe ஆகியவை டிசம்பர் 2022 இல் அதன் ஒப்பந்தங்களை நிராகரித்து, பிரிந்துவிட்டது. இதன் மூலம் பிளிப்கார்ட் சுதந்திரமாக இயங்க முடிவு செய்துள்ளது.

பிளிப்கார்ட்டின் மிகப்பெரிய போட்டியாளராக இருக்கும் அமேசான், அதன் வாடிக்கையாளர்களுக்கு UPI மற்றும் பில் பேமெண்ட் சேவைகளையும் வழங்குகிறது. அமேசான் பே இதுவரை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதே திசையில் ஃப்ளிப்கார்ட்டும் இப்போது முன்னேற பார்க்கிறது. பல பயனர்கள் இப்போது மாற்று UPI கட்டண பயன்பாடுகளுக்கு மாறுவதால், Flipkart UPI கட்டண முறை வெற்றிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart launches its own UPI handle for FkAxis with supercoins reward more than Google Pay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X