கண்ண மூடிக்கிட்டு 2 ஆர்டர் போடலாம்.. வெறும் ரூ.7000 க்கு.. 12GB ரேம், Halo டிசைன், 90Hz ஸ்மூத் டிஸ்பிளே!
ஷாவ்மீ (Xiaomi) பிராண்டின் துணை நிறுவனமான ரெட்மி (Redmi), தனது புதிய சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதென்ன மாடல்? அதன் விலை என்ன? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? முன்னதாக அறிவிக்கப்படியே ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி ஏ3 (Redmi A3) ஸ்மார்ட்போனை, இன்று (பிப்ரவரி 14) இந்தியாவில் அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலை மாடலாக இருக்கும் போதிலும் கூட, இது பிரீமியம் ஹாலோ டிசைன், 90ஹெர்ட்ஸ் ஸ்மூத் டிஸ்பிளே, 6ஜிபி + 6ஜிபி விர்ச்சுவல் ரேம். கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 1650 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.71-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 @ 680மெகாஹெர்ட்ஸ் ஜிபியு உடனான 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 12 என்எம் சிப்செட் (Octa-Core MediaTek Helio G36 12nm chipset) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 3ஜிபி / 4ஜிபி / 6ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64ஜிபி / 128ஜிபி eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.

மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜுடன் வரும் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது, அதில் எல்இடி பிளாஷ் உடனான 8எம்பி (எப்/2.0 அபெர்க்ஷர்) மெயின் கேமரா + செகண்டரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது.
மேலும் 3.5மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது 10W சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் மொத்தம் 3 வகையான ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,299 க்கு வாங்க கிடைக்கும்.
அடுத்ததாக உள்ள 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,299 க்கும் மற்றும் டாப்-எண்ட் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 9,299 க்கும் வாங்க கிடைக்கும். அனைத்து வேரியண்ட்களுமே வருகிற பிப்ரவரி 23 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.
ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே, பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart), ஷாவ்மீ நிறுவனத்தின் அதிகாரப்பூரவ வலைத்தளமான எம்ஐ.காம் (Mi.com), அதிகாரப்பூர்வ ஸ்டோர் ஆன எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ் (Mi Home Stores) மற்றும் சில்லறை விற்பனை கடைகளின் வழியாக விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








