Home
Mobile

பிப்.14 காதலர் தின சலுகை.. Flipkart-ல் அலைமோதும் கூட்டம்.. BEST செல்லிங் PHONES மீது முரட்டு ஆஃபர்!

2024 காதலர் தினத்தை (Valentine's Day) முன்னிட்டு பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது ஸ்மார்ட்போன்கள் மீதான சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. மொபைல் போனான்ஸா என்கிற பெயரின்கீழ் நடக்கும் இந்த விற்பனையில்.. என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது.. என்னென்ன தள்ளுபடி கிடைக்கும்? இதோ விவரங்கள்:

இந்த சிறப்பு விற்பனை எப்போது முடிவடையும்? ஏற்கனவே பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நேரலையில் உள்ள மொபைல் போனான்ஸா (Mobile Bonanza) சிறப்பு விற்பனையானது, காதலர் தினத்தின் மறுநாள் வரைக்கும், அதாவது பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிப்.14 காதலர் தின சலுகை.. Flipkart-ல் அலைமோதும் கூட்டம்!

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது? பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகளை பொறுத்தவரை மோட்டோரோலா எட்ஜ் நியோ 40 (அனைத்து ஆஃபர்களையும் சேர்த்து) ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல விவோ டி2 ப்ரோ 5ஜி மாடலும் ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி (2023) மாடலானது ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கும்.

ரூ.10,000 முதல் ரூ.2000 க்குள்ளான ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகளை பொறுத்தவரை, ரெட்மி 12 5ஜி (அனைத்து ஆஃபர்களையும் சேர்த்து) ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ரியல்மி 11எக்ஸ் 5ஜி மாடல் ரூ.12,499 க்கும், போக்கோ எம்6 ப்ரோ 5ஜி மாடலானது ரூ.10,499 க்கும், மோட்டோ ஜி34 5ஜி ரூ.10,999 க்கும் மற்றும் விவோ டி2எக்ஸ் 5ஜி ரூ.11,249 க்கும் வாங்க கிடைக்கிறது.

பிப்.14 காதலர் தின சலுகை.. Flipkart-ல் அலைமோதும் கூட்டம்!

ரூ.10,000 குள்ளான ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகளை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எப்04 வெறும் ரூ.5999 க்கு வாங்க கிடைக்கும். இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போன் ஆனது (அனைத்து ஆஃபர்களையும் சேர்த்து) ரூ.6,389 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ரியல்மி சி53 ரூ.8,999 க்கும், போக்கோ எம்5 5ஜி ரூ.9,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

பிளிப்கார்ட்டின் இந்த மொபைல் போனான்ஸா விற்பனையின் கீழ், சமீபத்தில் அறிமுகமான மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனும் வாங்க கிடைக்கிறது. ப்ரீமியம் டிசைன் மற்றும் 6000எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் (அனைத்து ஆஃபர்களையும் சேர்த்து) ரூ.8,249 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல மற்றொரு லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனான ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலும் விற்பனை செய்யப்படுகிறது. இது ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும்.

பிப்.14 காதலர் தின சலுகை.. Flipkart-ல் அலைமோதும் கூட்டம்!

மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது மாலி ஜி-52 MP2 ஜிபியு உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 8ஜிபி வரை ரேம் மற்றும் 128 ஜிபி வரை ஸ்டோரேஜ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56-இன்ச் HD+ IPS LCD டிஸ்பிளே, ஐபி52 நீர் வாட்டர் ரெப்பல்லென்ட் வடிவமைப்பை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை மோட்டோ ஜி24 பவர் ஸ்மார்ட்போனில் 50எம்பிப்ரைமரி சென்சார் + மேக்ரோ ஷாட்களை எடுப்பதற்கான 2எம்பி சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. டால்பி அட்மோஸ்-க்கான ஆதரவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட்டப்பை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.

ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் FHD+ OLED டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட், டைனமிக் ரேம் அம்சத்துடன் சேர்த்து 24ஜிபி வரையிலான ரேம், ஐபி65 ரேட்டிங், 67W சூப்பர்வூக் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS), 4 இன் 1-பிக்சல் ஃப்யூஷன் தொழில்நுட்பம் மற்றும் 1/1.56-இன்ச் சென்சார் உடனான 50 மெகாபிக்சல் Sony IMX 890 மெயின் கேமரா உள்ளது.

கூடவே ஓஐஎஸ் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64எம்பி ஆம்னிவிஷன் OV64B சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப் ஆனது 120X டிஜிட்டல் ஜூம் ஆதரவையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Valentines Day Sale 2024 Flipkart Mobile Bonanza Biggest Offers on Best Selling Phones till Feb 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X