Home
Mobile

ஏப்.15 குள்ள ஆர்டர் போட்ருங்க.. 6 போன்கள் மீது "அடேங்கப்பா" ஆஃபர்.. Flipkart-ன் புது SALE பொளந்து கட்டுது!

பிளிப்கார்ட் வலைத்தளமானது மெகா சேவிங்ஸ் டேஸ் என்கிற புதிய சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. ஏப்.15 வரை நடக்கும் இந்த விற்பனையில் பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீது சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் மிஸ் பண்ணவே கூடாத 6 ஆபர்கள் இதோ:

பிளிப்கார்ட் மெகா சேவிங் டேஸ் விற்பனையில் (Flipkart Mega Saving Days sale) ஆப்பிளின் லேட்டஸ்ட் மாடல்களில் ஒன்றான ஐபோன் 15 (iPhone 15) ஆனது மிகப்பெரிய அளவிலான நேரடி தள்ளுபடியை பெற்றுள்ளது. இது எந்தவொரு பேங்க் கார்டுகள் அல்லது எக்ஸ்சேன்ஜ் சலுகைகளும் இல்லாமலேயே வெறும் ரூ.65,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 15 மீது ரூ.13,901 பிளாட் தள்ளுபடியை வழங்குகிறது.

6 போன்கள் மீது

இதுதவிர்த்து நீங்கள் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் ஐபோன் 15 மாடலின் விலையை இன்னும் குறைக்க முடியும். ஐபோன் 15 மீது அதிகபட்சமாக ரூ.50,000 எக்ஸ்சேஞ்ச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடவே கூடுதல் தள்ளுபடியை வழங்கும் சில பிரத்யேக பேங்க் ஆஃபர்களும் அணுக கிடைக்கிறது.

ஒருவேளை நீங்கள் சற்றே பழைய ஐபோன் 13 (iPhone 13) மாடலை வாங்க விரும்பினால், பிளிப்கார்ட்டில் தற்போது இது ரூ.52,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உங்களுக்கு ஆப்பிள் டிவைஸ்கள் மீது ஆர்வமில்லை என்றால்.. சிறந்த கேமரா, க்ளீன் ஆன சாஃப்ட்வேர் மற்றும் ஓவர்-ஆல் ஸ்மூத் பெர்ஃபார்மென்ஸை வழங்கும் கூகுள் பிக்சல் 8 (Google Pixel 8) ஸ்மார்போனை வாங்கலாம். இது ரூ.69,999 என்கிற தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.75,999 ஆகும்.

6 போன்கள் மீது

இதேபோல மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) ஸ்மார்ட்போனின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் மெகா சேவிங்ஸ் டேஸ் விற்பனையில் இது ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது ரூ.1,000விலைக்குறைப்பை பெற்றுள்ளது. கூடுதலாக கிடைக்கும் வங்கி சலுகைகளை பயன்படுத்தினால் ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் போக்கோ எம்6 ப்ரோ (Poco M6 Pro) ஸ்மார்ட்போனை வாங்கலாம். தற்போது இது பிளிப்கார்ட்டில் ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி (Samsung Galaxy F14 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,490 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

6 போன்கள் மீது

இந்திய சந்தையில் புதிதாக அறிமுகமான ஸ்மார்ட்போன்களின் விற்பனையை பொறுத்தவரை.. ரியல்மி 12எக்ஸ் (Realme 12X) மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி (Motorola Edge 50 Pro 5G) மாடல்களின் விற்பனையும் கூட பிளிப்கார்ட் வழியாக தொடங்கியுள்ளது. ரியல்மி 12எக்ஸ் ஆனது ரூ.10,999 முதலும்.. மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ 5ஜி ஆனது ரூ.27,999 முதலும் வாங்க கிடைக்கும்.

வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை.. இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ 5ஜி சீரிஸ் (Infinix Note 40 Pro 5G Series) ஸ்மார்ட்போன்களின் எர்லி பேர்ட் சேல் ஆனது ஏப்ரல் 12 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடக்கவுள்ளது. ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

6 போன்கள் மீது

விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. மோட்டோ ஜி64 5ஜி (Moto G64 5G) ஸ்மார்ட்போன் ஆனது ஏப்ரல் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Flipkart Sale 2024 Announced Massive Discounts on These 6 Mobile Phones Till April 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X