ரூ.9000 போதும்! வந்தது Vivo Y01A.. தாராளமா தலைக்கு ஒன்னு வாங்கலாம்!

|

Vivo நிறுவனம் Y01A ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மலிவு விலையில் வெளியாகி இருக்கிறது. நுழைவு விலை பிரிவில் கிடைக்கும் பிற ஸ்மார்ட்போன்களுக்கு கடுமையான போட்டியை இது ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Vivo Y01A ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக பார்த்தால் உங்களுக்கே புரியும்.

6.51 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே

6.51 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே

Vivo Y01A ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி மற்றும் ஆண்ட்ராய்டு கோ ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. Vivo Y01A ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 1600x720 பிக்சல்கள் HD+ தீர்மானத்துடனான 6.51 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான டிஸ்ப்ளே

பெரிய அளவிலான டிஸ்ப்ளே

இந்த டிஸ்ப்ளே ஆனது 720p தெளிவுத்திறன் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 6.51 இன்ச் என்பது பெரிய அளவிலான டிஸ்ப்ளே ஆகும். மலிவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை விட மெல்லிய பெசல்கள் இதில் இருக்கிறது. வாட்டர் டிராப் நாட்ச் வசதியோடு இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே இருக்கிறது.

ஆண்ட்ராய்ட் 11 Go எடிஷன்

ஆண்ட்ராய்ட் 11 Go எடிஷன்

Vivo Y01A ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலம் சேமிப்பகத்தை விரிவு செய்யலாம். இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்ட் 11 Go பதிப்புடனான Funtouch OS 11.1 லேயர் உடன் இயக்கப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

Vivo Y01A ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. பெரிய டிஸ்ப்ளே போல் இதில் பெரிய பேட்டரி ஆதரவும் இதில் இருக்கிறது. மலிவு விலை ஸ்மார்ட்போனில் இது அனைத்தும் குறிப்பிடத்தக்க அம்சங்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 10 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

ரூ.9000 விலையில் ஸ்மார்ட்போன்

ரூ.9000 விலையில் ஸ்மார்ட்போன்

4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல் சிம்கார்ட் ஆதரவுகள் வழங்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என ஃபிங்கர் பிரிண்ட் ஆதரவு இதில் வழங்கப்படவில்லை. வழக்கமான பின் மற்றும் பேட்டர்ன் லாக் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது.

9000 ரூபாய் மதிப்பில் விற்கப்படும் ஸ்மார்ட்போன் தான் இது என்றாலும் சமீபத்திய 5ஜி இதில் இயக்கப்பட்டிருக்கலாம். இதில் 5ஜி ஆதரவு இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பக்கா பட்ஜெட் ஆண்ட்ராய்ட் போன்

பக்கா பட்ஜெட் ஆண்ட்ராய்ட் போன்

Vivo Y01A ஆனது பக்கா பட்ஜெட் ஆண்ட்ராய்ட் போன் ஆகும். இது Sapphire Blue மற்றும் Elegant Black வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனானது தாய்லாந்தில் ฿3,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.9,000 ஆகும்.

விரைவில் இந்தியாவில் அறிமுகம்

விரைவில் இந்தியாவில் அறிமுகம்

பிற அனைத்து பிராந்தியங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படுமா என்பதை நிறுவனம் விளக்கவில்லை. ஆனால் பட்ஜெட் விலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனான இது Bureau of Indian Standards (BIS) தரவுத்தளத்தில் தோன்றி இருக்கிறது. எனவே Vivo விரைவில் இந்தியாவில் Y01A ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான போட்டியாக இருக்கும் ஸ்மார்ட்போன்

கடுமையான போட்டியாக இருக்கும் ஸ்மார்ட்போன்

இந்தியாவில் நிச்சயமாக இந்த ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதீத வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு இது கடுமையான போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Best Low Price Smartphone by Vivo: Vivo Y01A Launched with Android 11 Go Edition, 5000mAh Battery and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X