ஐபோனில் அழித்த தகவல்களை மீட்பது எப்படி??

By Aruna Saravanan
|

ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் வரும் பிரச்சனைகளில் ஒன்று சேகரித்த தரவுகள் திடிரென டெலீட் ஆவதுதான். நீங்கள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் இவை நிகழும் வாய்ப்பு அதிகம். இதனால் நீங்கள் ஆசையாக எடுத்த புகைப்படங்கள், சேகரித்த தரவுகள் போன்றவை திடிரென போய்விடும்.

அவ்வாறு ஐபோனில் தவறுதலாக அழிக்கப்பட்ட தரவுகளை மீட்பது எப்படி என்பதை பார்ப்போமா??

ஐபேக்கப் வியூவர்

ஐபேக்கப் வியூவர்

நீங்கள் ஐபேக்கப் வியூவரை டவுன்லோட் செய்வதால் அதில் எண்ணற்ற பேக்கப், ஐக்ளவுடை சப்போர்ட் செய்வது போன்று பல இருக்கும். முழு பேக்கப் கொடுப்பதற்கு பதில் எதையாவது ஒன்றை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஐக்ளவுடை தவிர்க்கவும்

ஐக்ளவுடை தவிர்க்கவும்

உங்கள் ஐபோனை நீங்கள் இரண்டு வகையில் பேக்அப் செய்ய முடியும். ஒன்று ஐக்ளவுடு மற்றொன்று கணினி. ஐக்ளவுடு மூலம் நீங்கள் வயர்லெஸிலும் பேக் அப் செய்ய முடியும். இதற்கு
செட்டிங்ஸ் >> ஐக்ளவுடு >> பேக்கப் என்பதை பயன்படுத்தவும். எப்படி இருந்தாலும் நீங்கள் உங்கள் கான்டாக்டில் இருந்து டெலீட் செய்யும் அனைத்தும் ஐக்ளவுடிலும் டெலீட் ஆகும். ஆகையால் உங்கள் கணினியில் ஐபோனினை பேக்கப் செய்வது அவசியம்.

பேக்கப்

பேக்கப்

கணினியை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் உங்கள் ஐபோனை பேக்அப் செய்தல் அவசியம். இதனால் நீங்கள் சமீபத்தில் எடுத்த போட்டோக்கள், நோட்ஸ், கால் செய்த வரலாறு, அனுப்பிய குறுகிய செய்திகள் ஆகிய அனைத்துக்கும் உங்களிடம் பேக்கப் இருக்கும்.

போட்டோஸ் ஆப்

போட்டோஸ் ஆப்

தெரியாமல் டெலீட் செய்த படங்களை திரும்ப பெற உங்கள் ஐபோனில் உள்ள நேட்டிவ் போட்டோ கேலரியை திறந்து மொமன்ட்ஸ் செக்ஷன் செல்லவும். இப்பொழுது மொமன்ட்ஸ் ஆப்ஷனிற்க்கு கீழே உள்ள ஆல்பம்ஸ் ஆப்ஷன் சென்று சமீபத்தில் டெலீட் செய்த ஃபோல்டரை தேடி திறக்கவும். ரீசென்ட்லி டெலீடெட் ஃபோல்டரில் ( Recently deleted folder ) ஐஓஎஸ் தானியங்கியாக டெலீட் செய்த படங்களை சேமித்து வைத்திருக்கும். அவற்றை நிரந்தரமாக டெலீட் செய்யும் வரை 30 நாட்களுக்கு அப்படியே இருக்கும். அதில் இருந்து நீங்கள் திரும்ப எடுத்து கொள்ள முடியும்.

ஐட்யூன்ஸ்

ஐட்யூன்ஸ்

ஐட்யூன்ஸ்'ஐ பயன்படுத்தி பழைய தரவுகளை திரும்பவும் பெற முடியும். உங்கள் ஐபோனினை இணைத்து ஐட்யூன்ஸ் லான்ச் செய்ய வேண்டும். ஐபோனில் ஐக்ளவுட் அணைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும். ஐட்யூன்ஸ்'இல் உங்கள் டிவைஸில் ரைட் க்ளிக் செய்து பேக் அப்பை தேர்வு செய்யவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil How To How To Restore Deleted Data iPhone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X