மி பேண்ட் 3: சியாமி நிறுவனத்தின் அடுத்த ஆச்சரியமான தயாரிப்பு

By Siva
|

சியாமி நிறுவனத்தின் தயாரிப்புகளான ஸ்மார்ட்போன்கள் எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சியாமி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு என்னவாக இருக்கும் என்பதே அனைவரது கேள்வியாக இருந்தது.

மி பேண்ட் 3: சியாமி நிறுவனத்தின் அடுத்த ஆச்சரியமான தயாரிப்பு

இந்த நிலையில் சியாமியின் அடுத்த தயாரிப்பு விளையாட்டு வீரர்களுக்கு உபயோகமான ஒரு கேட்ஜெட் என்று கூறப்படுகிறது. சியாமி நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கமும் இதை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளது. சியாமி நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு மி பேண்ட் 3 ஆக இருக்க அதிக வாய்ப்பு இருக்கின்றது என்றும், இந்த டெக்னாலஜிக்கு ஹுயாமி (Huami) நிறுவனம், பின்புலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மி பேண்ட் 3 தான் சியாமியின் அடுத்த தயாரிப்பு என்று அதிகாரபூர்வ செய்தி இன்னும் வெளிவரவில்லை என்றாலும் பெரும்பாலான வதந்திகளில் இருந்து இதுவாகத்தான் இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்ற ஒரு வதந்தி வெளியாகி அது வதந்தியாகவே மாறிவிட்டது பலரும் அறிந்ததுதான்

சீனாவில் உள்ள சமூக வலைத்தளம் ஒன்றில் ஒரு விளையாட்டு வீரர் ஓடுவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி அதில் ஹூயாமியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளதால் ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான தயாரிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

மி பேண்ட் 3ஐ தவிர வேறு சில ஸ்போர்ட்ஸ் தயாரிப்புகளையும் சியாமி வெளியிடும் என தெரிகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சியாமி மி பேண்ட் 2 சாதனத்தை வெளியிட்டதை போன்று விரைவில் மேலும் சில சாதனங்களை வெளியிடலாம்

சமூக வலைத்தளங்களின் செய்தியின்படி மிக விரைவில் மி பேண்ட் 3 உள்பட வேறு சில பொருட்களின் தயாரிப்புகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதால் அதுவரை நாம் பொறுமை காப்பதுதான் சரி என்பது குறிப்பிடத்தக்கது.

Source

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
It looks like Xiaomi is all set to launch its 86th crowdfunding product.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X