இது வெறும் நெக்லஸ் அல்ல - அதுக்கும் மேல.!

|

இந்தியா என்று வரும்போது பெண்களின் பாதுகாப்பிற்கு பிரச்சினைகள் இருக்கிறது என்பதில் மூடிமறைக்க எந்த ரகசியமும் இல்லை. சில கொடூரமான சம்பவங்கள் மற்றும் பரந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னர் அரசாங்கம் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கும்போதும் கூட இந்தியாவில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளன.

இது வெறும் நெக்லஸ் அல்ல - அதுக்கும் மேல.!

இந்நிலைப்பாட்டில் சிங்கப்பூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்டார்ட்-அப் ஒன்று பெண்கள் பாதுகாப்பான உணர உதவும் நம்பிக்கையை வழங்குவதுடன் அதே சமயம் தேவைப்பட்டால் அவர்கள் உதவி செய்வதையும் உறுதிப்படுத்துகிறது.

75 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஸ்மார்ட் ஃபியூச்சரின் ஐவி (Smartfuture's Ivy) என்பது ஒரு ஸ்மார்ட்போன் இணைக்கப்பட்டுள்ள கழுத்தணி ஆகும் மற்றும் ஆபத்து நேரங்களில் பாதுகாவலர்களிடம் இருந்து உதவியை அணுக அல்லது ஒரு தொலைபேசி அழைப்பு செய்ய அதை தட்டினால் போதும். தேவையான அளவு ஆடியோவும் பதிவும் இதனை கொண்டு நிகழ்த்திக்கொள்ளலாம். இந்தியாவில், மும்பை போன்ற நகரங்களில் காவலர்களாக பணியாற்றும் என்ஜிஓ-க்கள் மற்றும் போலீசாருடன் இணைந்து இந்நிறுவனம் பணியாற்றி வருகிறது.

இது வெறும் நெக்லஸ் அல்ல - அதுக்கும் மேல.!

இது இந்தியாவில் உள்ள அனைத்து தொலைபேசிகளிலும் பேனிக் பட்டன் செயல்பாட்டு பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசாங்கத்திடம் இருந்து உருவான ஒரு தயாரிப்பாகும். இந்த கழுத்தணி கேஜெட் ஆனது பல்வேறு வண்ணங்களில் வருகிறது, மேலும் இந்தியர்களுக்கு பிடித்த டிசைன்களிலும் வருகிறது.

இதை கழுத்தில் ஒரு நெக்லெஸ் போலத்தான் அனுப்பிய வேண்டுமென்ற அவசியமில்லை. இதை ஒரு பிரேஸ்லெட் போன்றும் கையில் அணிந்து கொள்ளலாம். இது ஆறு மாதங்கள் வரை பேட்டரி ஆயுள் கொண்ட இந்த சாதனம் மாற்றக்கூடிய பேட்டரிகளை பயன்படுத்துகிறது.

இந்த ஐவி சாதனத்தை தவிர, ஸ்மார்ட் ஃபியூச்சர் இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உடல் நலத்தைப் பெறுவதிலும் பணியாற்றி வருகிறது. இந்திய நகரங்களில் உள்ள வேதியியலாளர்கள் மற்றும் மருந்தகங்களின் உதவியுடன் குறைந்த செலவில் இரத்த அழுத்தம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை அனுமதிக்கிறது. அது சார்ந்த தரவுகள் ஸ்மார்ட்ப்பியூச்சர் ஏபிஐ(API)ஐ பயன்படுத்தி அரசாங்க சேவையகங்களில் சேமிக்கப்படும். சோதனைகளின் முடிவில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், நோயாளி உடனடியாக விழிப்பூட்டப்படுவார், அதனால் அவர்கள் ஒரு சோதனையையும் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

Read more about:
English summary
This Smartfuture Ivy necklace helps keep women in India safe. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X